புதன், 7 அக்டோபர், 2009

தீண்டாமைக்கு எதிராக போராடினால் சிறையா? என்.வரதராஜன் கேள்வி

காங்கியனூரில் ஆலய நுழைவு போராட்டத்தின் போது போலீசாரின் கொடூரமான தடியடி தாக்குத லுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 103 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள் ளார்.


பி.சீனிவாசராவ் நினைவு நாளான செப்டம்பர் 30ம் தேதியன்று தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் ஆலய நுழைவுப் போராட் டம் நடத்த முயன்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன் உள்ளிட் டோர் மீது போலீசார் கொடூரமான தடியடி தாக்கு தல் நடத்தினர். கே.பால கிருஷ்ணன் உட்பட 103 பேரை ரிமாண்ட் செய்து சிறையில் போலீசார் அடைத் துள்ளனர். அவர்கள் 7வது நாளாக சிறையில் உள்ளனர்.

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர் கூறியதாவது:-

தடியடி தாக்குதலுக்கு உள்ளாகி வேலூரில் சிகிச்சை பெற்றுவரும் லதா எம்எல்ஏவை சந்தித்தேன், போராட்டத்தின் போது ஒரு போலீஸ்காரர் அவரை கீழே தள்ளி பூட்ஸ் காலால் அவருடைய அடிவயிற்றில் மூன்றுமுறை உதைத்துள் ளார். இதனால் அவருக்கு கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

போலீசாரின் தாக்குத லின்போது பலர் படுகாய மடைந்துள்ளனர். அத்து டன் இல்லாமல் போலீசார் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமை தொடர்ந்து நீடிக்கிறது. அதை போக்க நடவடிக்கை கள் எடுக்க முன்வராத தமி ழக அரசு, எதிர்த்துப் போரா டுபவர்களை தடிகொண்டு தாக்கி சிறையில் அடைப் பது என்ன நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார். காங்கியனூர் போராட்டத் தின் போது கைது செய்யப் பட்ட 103 பேரையும் விடு தலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தடியடி தாக்குதல் குறித்து முழுமையான விசா ரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தீண்டாமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து போராடும். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இம்மாதம் 27ம்தேதி பிரம் மாண்டமான பேரணி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இல்லை. கொலை, கொள்ளைச் சம்ப வங்கள் அன்றாட செய்தி யாகிவிட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு முன்வர வேண் டும் என்று கூறிய அவர், முதல்வர் சட்டமன்றத்தில் பேசும்போது காவல்துறை கண்காணிப்பாளர் மாதா மாதம் மனுநீதிநாள் நடத்து வார். அப்போது அளிக்கப் படும் புகார்களுக்கு உடனடி யாக தீர்வு காணப்படும் என்றார். ஆனால் பொதுமக் கள் அளிக்கும் புகார்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை என்று என்.வரதராஜன் கூறினார்.

இலங்கையில் மோதல் முடிந்தபிறகும், அந்நாட்டு அரசின் அத்துமீறல் தொடர் கிறது. 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் எந்தவிதமான அடிப் படை வசதியுமற்ற முகாம் களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு ராஜீயரீதியில் தலையிட்டு இலங்கை தமிழ் மக்களை அவரவர் இருப்பிடங்களில் குடிய மர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இம்மாதம் 9ம் தேதி திருச்சியில் மாபெ ரும் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது என்று அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை: