திங்கள், 19 அக்டோபர், 2009

சீனா - எதிரியா? நண்பனா?

சமீப காலமாக சீன எதிர்ப்பு பிரச் சாரத்தை மிக அதிக அளவில் ஊடகங்கள் நடத்தி வருகின்றன. சீனா இந்தியா வை தாக்குவதற்கு தயாராகி வருகிறது என அபத்தமாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் உண்டு. இந்த நீசத்தனமான அணுகுமுறைக்கு சில தமிழ் இதழ்களும் விதிவிலக்கு இல்லை.


சீனாவில் பொருளாதார நெருக்கடி முற்றுகிறது எனவும், மக்களின் கோபத் தை திசை திருப்பிட சீனா இந்தியா மீது போர் தொடுக்கலாம் எனவும் சில ராணுவ ஆய்வாளர்கள் கூட கூறி வருகின்றனர். இந்த செய்திகள் எல்லாம் அபத்தமான வை என இந்திய அரசு தெளிவுபடுத்தி யுள்ளது. ராணுவ அதிகாரிகளும், இச் செய்திகளை மறுத்துள்ளனர். எனினும் சீனாவிற்கு எதிராக நச்சு கக்குவதை நிறுத்திட சிலர் மறுக்கிறார்கள்.

அமெரிக்கா காட்டும்

சீன பூச்சாண்டி

இந்தியாவில் சீன எதிர்ப்பு மேலோங்க வேண்டுமென எண்ணும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடிக் கிறது. உலகின் இந்தப் பகுதியில் சீனா விற்கு எதிராக தன்னை ஆதரிக்கும் ஒரு தேசமாக இந்தியா இருப்பது தனக்கு லாப கரமானது என அமெரிக்கா எண்ணுகி றது. மேலும் “சீன பூச்சாண்டி” காட்டி தனது ஆயுதங்களை இந்தியாவில் விற்க லாம் என்பதும் அமெரிக்காவின் திட்டம்.

அமெரிக்காவின் மிக முக்கிய நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது:

“ஒவ்வொரு வார இறுதியிலும் இந்தி யாவின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மதுபான விருந்துகளும் விளக்கக் கூட் டங்களும் நடக்கின்றன. இவற்றில் பணி ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதி காரிகள் பங்கேற்கின்றனர். இவர்கள் தற் பொழுது அமெரிக்க ஆயுத உற்பத்தி ஆலைகளில் உயர் அதிகாரிகளாக உள்ளனர்.”

இந்த விருந்துகளில் பல இந்திய ராணுவ அதிகாரிகளும், பிற இடைத்தரகர் களும் கலந்து கொள்கின்றனர். சீனாவின் அச்சுறுத்தலும் இந்தியா ஆயுதங்களை வாங்கி குவிக்க வேண்டிய தேவையையும் இங்கு வலியுறுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள பெரிய மேதைத்தனம் தேவையில்லை.

அமெரிக்காவுடன் இந்தியா மிக நெருக் கமான உறவை உருவாக்கிட வேண்டும் என எண்ணுபவர்கள்தான் சீன எதிர்ப்பு நச்சைக் கக்குகின்றனர் என்பதும் குறிப் பிடத்தக்கது. சீனாவிற்கும், இந்தியாவிற் கும் இடையே எவ்வித ஒத்துழைப்பும் உறவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்த சுயநலச் சக்திகள் கண்ணும் கருத்துமாக உள்ளன.

இந்தியாவின் நலனுக்கும், உலக நல னுக்கும் எது உகந்தது? சீனாவுடன் மோதலா அல்லது நட்புறவா?

சீனாவுடன் நட்பு பாராட்டுவதே இந்தி யாவின் நலனுக்கு உகந்தது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டு மல்ல பல பொருளாதார வல்லுநர்களும், நடுநிலையாளர்களும் கூறுகின்றனர். இந்தியாவும், சீனாவும் இரு பெரிய தேசங் கள். பொருளாதார ரீதியாக வேகமாக வள ரும் நாடுகள். இரு நாடுகளின் சந்தையும் மிகப் பெரியவை. எனவே, இரு நாடுகளுக் கிடையே ஒத்துழைப்பு இருந்தால் இரு நாடுகளுக்கும் லாபகரமானது. இந்த அடிப்படை உண்மையை ஏனோ இந்திய ஆட்சியாளர்கள் சாதகமாக பரிசீலிக் கவே தயாராக இல்லை.

அமெரிக்க - சீன உறவு

சீனாவின் சந்தையை அமெரிக்கா எப் படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதும், அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை சீனா எப்படி தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறது என்பதும் குறிப்பிட வேண் டிய ஒன்று.

ஒரு பக்கத்தில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா வலுவான ராணுவ நிலை களை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய் லாந்து ஆகிய நாடுகளில் ஒரு லட்சத் திற்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் சீனா மீது போர் தொடுக்க தயார் நிலையில் உள்ளனர். பெரும் அழிவைத் தருகின்ற ஹைட்ரஜன் குண்டுகளும் சீனாவை குறிவைத்து நிலைநிறுத்தப் பட்டுள்ளன.

ஒருபக்கம் இந்த ராணுவ நடவடிக்கை கள் இருந்தாலும் மறுபக்கத்தில் அமெ ரிக்க நிறுவனங்கள் பல கோடி டாலர்கள் சீனாவில் முதலீடு செய்துள்ளன. அமெ ரிக்க சாதாரண மக்கள் சீனப் பொருட் களையே வாங்குகின்றனர். ஏனெனில் அவை விலை மலிவானவை. காலை யில் எழுந்தவுடன் பயன்படுத்தும் பற் பசையிலிருந்து, துணிகள் வரை சீனப் பொருட்கள் அமெரிக்காவில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது சீனா வின் தொழிற்வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

அதே சமயம் சீனாவின் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் அமெ ரிக்க வங்கிகளில் முதலீடு செய்யப்பட் டுள்ளது. இந்த முதலீடு இல்லையெனில் தற்போதைய நெருக்கடியில் அமெரிக்கா மூழ்கியிருக்கும். அமெரிக்கா தனக்கு எதிராக ஆயுதங்களைக் குவித்துள்ளது என்பது சீனாவும் அறிந்த ஒன்றுதான். எனினும் அமெரிக்க முதலீடு சீனாவின் வளர்ச் சிக்கு உதவுவதால் சீனா அதனை தனது நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதிக்கிறது.

சீனாவின் மிகப்பெரிய சந்தை ஒரு ஈர்ப்பு சக்தியாக அமெரிக்க முதலீட்டாளர் களுக்கு உள்ளது. எனவேதான் சீனாவை விமர்சிக்கின்ற அவர்கள், அங்கு முதலீடு செய்யவும் தயங்குவது இல்லை. மற்ற வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா நிபந் தனைகளை விதிக்கிறது. ஆனால், சீன அரசு அமெரிக்கா மீது நிபந்தனைகளை விதிக்கிறது. சீனாவின் மிகப்பெரிய சந்தை நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை அமெரிக்கா விற்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா ஒத்துழைப்பு சாத்தியமே!

ஒருபுறம் ஆயுதக் குவியலும், மறுபுறத் தில் பொருளாதார ஒத்துழைப்பும் அமெ ரிக்கா-சீனா நாடுகளிடையே சாத்தியம் எனில், ஏன் இந்தியா - சீனா பொரு ளாதார ஒத்துழைப்பு சாத்தியம் இல் லை? அமெரிக்காவைவிட பூகோள ரீதி யாக மட்டுமல்ல; கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கு இந்தியா நெருங்கிய தேசமே! அப்படியிருந்தும் ஏன் இந்தியா சீனாவை நட்பு நாடாக பாராட்டாமல் ஒரு சந்தேகத் திற்குரிய நாடாகவே அணுகுகிறது.

சீன எதிர்ப்பு எண்ணம் மேலோங்கி யிருந்தால் அதனால் பலன் அடையும் சில சுயநல சக்திகள்தான் இந்திய - சீன ஒத்துழைப்பு ஏற்படாமல் தடுக்கின் றன என்பது தெளிவு. எனினும் சில சுய நலச் சக்திகள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் சீனாவின் முன்னேற் றம் பிர மிக்கத்தக்கது என்பதில் எவருக்கும் ஐய மிருக்க முடியாது. இந்தியாவும், சீனாவும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றாலும் சீனா வெகுதூரம் முன்னேறியுள்ளது என் பதை கீழ்க்கண்ட விபரங்கள் தெளி வாக்கும்.

உற்பத்தி பிரிவு இந்தியா சீனா

எஃகு 5 கோடி டன் 50 கோடி டன்

சிமெண்ட் 13.5 கோடி டன் 112 கோடி டன்

நிலக்கரி 49 கோடி டன் 260 கோடி டன்

மின்சாரம் 724 பில்லியன் 3100 பில்லியன்

யூனிட்டுகள் யூனிட்டுகள்

உணவு

தானியங்கள் 23 கோடி டன் 53 கோடி டன்

கார்கள் 20 லட்சம் 100 லட்சம்

இந்தியாவை விட அனைத்து துறை களிலும் சீனா முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தை அமெரிக்காவோ அல் லது இந்தியாவில் உள்ள சீன எதிர்ப் பாளர்களோ தடுக்க இயலாது.

அதே சமயம் இந்தியா - சீனா ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் பலன்கள் அளிக்கக் கூடியவை. மேலும் போர் வெறி கொண்டு அலையும் அமெரிக்கா விற்கு இரு தேசங்களின் கூட்டணி கடிவாள மாகவும் இருக்கும்.

எனவே, இது இன்றையத்தேவை. இதனை சீன எதிர்ப்பு எண்ணம் கொண் டவர்கள் தடுக்கவே முயல்வார்கள். இதை முறியடித்து இந்திய - சீன ஒத்துழைப்பு முன்னேற வேண்டியுள்ளது. இது காலத்தின் கட் டாயம் ஆகும்.

.அன்வர் உசேன்

கருத்துகள் இல்லை: