ஞாயிறு, 8 நவம்பர், 2009

மக்களின் பேரால் மக்கள் சொத்தை சூறையாடும் மன்மோகன் அரசு திமுக மவுனம் காப்பது ஏன்? சிஐடியு கேள்வி

காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக லாபம் கொழிக்கிற பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு தாரை வார்ப்பது என்று மேற்கொண்டுள்ள முடிவை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழி யர்களின் மத்திய தொழிற்சங்கங்கள் வன்மையாக கண்டித்துள்ளன.


சிஐடியு

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் மத்திய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் கொண்டு போய் விற்பதன் மூலம் அந் நிறுவனங்களில் “பொதுமக்களின் உரிமையை” உருவாக்கப் போவதாக அரசு கூறியுள்ளது. பங்குச்சந்தையில், இந்த நாட்டில் வெறும் இரண்டு சதவீதம் மக்கள் கூட பங்கேற்க வில்லை.

இத்தகைய நிலைமையில், கடந்த 2007-08-ம் ஆண்டில் மட்டும் ரூ.91 ஆயிரத்து 140 கோடி அளவிற்கு லாபம் ஈட்டிய, மத்திய அரசின் கருவூ லத்திற்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பங்கு ஆதாயத் தொகை வழங்கி வருகிற இந்த தேசத்தின் 160 மகத்தான பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் சூறையாடுவதற்கு மக்களின் பெயரை பயன்படுத்துவது என்பது, இந்த நிறுவனங்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டிற்கே சொந்தமான 100 கோடிக்கும் அதிகமான மக்களை அவ மானப்படுத்தும் செயலாகும்.

இப்படி பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி திரட்டப்பட இருப்பதாகவும், இந்த நிதியை தேசிய கிராமப்புற வேலை உத் தரவாதத் திட்டம் மற்றும் தேசிய கிரா மப்புற சுகாதாரத் திட்டம் போன்றவற் றுக்கு பயன்படுத்த இருப்பதாக உலக வங்கியிடம் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு சேவகம் செய்து கொண்டி ருக்கிற அதிகாரிகள் கூறுகிறார்கள். 2009-10-ம் ஆண்டு பட்ஜெட்டில் இத் தகைய திட்டங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். இந்த நிலைமை யில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிக மான நிதி இடம் பெறுகிற இந்திய நாட்டின் பட்ஜெட்டில், இதுபோன்ற ஒரு சிறு தொகையை ஈட்டுவதற்கு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டும் எனக் கூறுவது ஏன்? என்ற கேள்விக்கு மன்மோகன் சிங் அரசு பதில் சொல்ல வேண்டும். 2008-09-ம் ஆண்டில் இந்த அரசு பெரும் நிறுவனங்களுக்கும், முதலாளி களுக்கும் கொடுத்த வரிச்சலுகைகள், வரிக்குறைப்புகள் ஆகியவற்றின் மொத்தத் தொகை மட்டும் ரூ.4.18 லட் சம் கோடியை தொட்டது. இவ்வளவு பெரும் தொகையை, மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மன்மோகன் சிங் அரசு ஏன் வசூல் செய்யக்கூடாது என்ற கேள்வியை எழுப்புவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.

மேலும், பொதுத்துறை நிறுவனங் களிடம் தற்போது கையிருப்பாகவும், உபரியாகவும் இருக்கிற ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையிலி ருந்து ஒரு பகுதியை எடுத்து பயன் படுத்துவதற்குப் பதிலாக, அந்த நிறுவ னங்களின் பங்குகளையே விற்றுச் சூறையாடுவதற்கு அரசு முயற்சிப்பது ஏன் என்ற கேள்வியையும் சிஐடியு எழுப்புகிறது.

திமுக மவுனம் காப்பது ஏன்?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள காங்கிர சின் கூட்டணிக் கட்சிகளான திமுக வும் திரிணாமுல் காங்கிரசும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை எதிர்ப்பதாக பொதுமக் களிடமும், ஆதரிப்பதாக அமைச் சரவையிலும் கூறி வருகிறார்கள். இப்போது, இந்தப் பிரச்சனையில் அவர்களது நிலைபாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

அன்றாடம் அதிகரித்து விண் ணைத் தொட்டுக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண உருப்படியான எந்த நட வடிக்கையும் எடுக்க முயற்சிக்காத மன் மோகன் சிங் அரசு, பெரும் நிறுவனங் களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் ஆதரவாக பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை சூறையாடுவதற்கு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு சரியான பதிலடி கொடுக்குமாறு தொழிலாளி வர்க்கத்தையும் நாட்டு மக்களையும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான அரசின் மக்கள் விரோதக் கொள்கைக ளுக்கு எதிராக டிசம்பர் மாதம் 16-ம் தேதி நாடாளுமன்றத்தின் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள மகத்தான கிளர்ச்சியை, மக்களின் பெயரால் மக்களின் சொத்துக்களை தனியா ருக்கு தாரை வார்க்கிற அரசின் நடவ டிக்கைக்கு எதிரான ஒரு மகத்தான இயக்கமாக வெற்றி பெறச் செய்யு மாறு சிஐடியு அழைப்பு விடுக்கிறது.

மேலும், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் ஆகிய தங்களது எஜமானர் களின் கட்டளைக்கு ஏற்ப இந்திய பொதுத்துறையை நிர்மூலமாக்க முயற்சிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த தேசவிரோத நடவடிக்கையை எதிர்த்து உடன டியாக நாட்டின் அனைத்துப் பகுதிக ளிலும்Justify Full உள்ள சிஐடியு சங்கங்கள் வாயிற்கூட்டங்களையும், எதிர்ப்பு கூட் டங்களையும் நடத்துமாறு சிஐடியு மத்திய செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

கருத்துகள் இல்லை: