சனி, 21 நவம்பர், 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சிறப்பு மாநாடு தில்லியில் எழுச்சியுடன் துவங்கியது


சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலா ளர் கட்சிகளின் 11ஆவது சிறப்பு மாநாடு புது தில்லியில் நவம்பர் 20 வெள்ளியன்று துவங் கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத் தும் இந்த சிறப்பு மாநாட்டில் உலகம் முழுவது மிருந்து 48 நாடுகளி லுள்ள 58 கட்சிகளைச் சேர்ந்த 87 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

புதுதில்லியில் உள்ள ராமடா பிளாசா ஓட்டலின் ரீகல் அரங்கில் நடைபெறும் இந்த சிறப்பு மாநாட்டின் துவக்க அமர்வில் புரட்சிகர மற்றும் சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநாட்டின் பிரதிநிதி களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ் சென்குப்தா வரவேற்று உரைநிகழ்த்தினார்.

பின்னர் மாநாட்டின் வரைவுப் பிரகட னத்தை சமர்ப்பித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினரும், சர்வதேசத் துறை செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி எம்.பி. உரையாற்றினார்.

சிறப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் மற்றும் பல்வேறு நாடுகளது கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாக சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சு தானந்தன், அரசியல் தலைமைக் குழு உறுப் பினரும், இந்திய தொழிற்சங்க மையத்தின் தலைவருமான டாக்டம் எம்.கே.பாந்தே, திரி புரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், மேற்கு வங்க இடது முன்னணியின் தலைவரும், கட்சியின் மாநிலச்செயலாளருமான பிமன் பாசு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி களாக தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., துணை பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குரு தாஸ் தாஸ் குப்தா எம்.பி., தேசிய செயற்குழு உறுப் பினர்கள் பல்லவ் சென் குப்தா, சி.திவாகரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

துவக்க மாநாட்டை தொடர்ந்து பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் அமர்வு துவங்கி யது. அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். கியூப கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆஸ்கர் மார்ட்டினெஸ், பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோஸ் ரெனால்டோ, அர்ஜென்டினா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாட்ரிசியோ, மெக்சிகோ கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆண்டனியோ பாவெல், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்காட் மார்ஷல் ஆகியோர் கருத்து ரையை முன்வைத்தனர். வங்கதேச கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மன்சூர் உல் அசன் கானும் கருத்துரை நிகழ்த்தினார்.

மாலை நடைபெற்ற அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரிபுரா முதல மைச்சர் மாணிக் சர்க்காரும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சுதாகர் ரெட்டியும் கருத் துரை நிகழ்த்தினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அய் பிங், வடகொரிய தொழிலாளர் கட்சி சார்பில் பாக் கியோங் சன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

அனைத்து பிரதிநிதிகளும், உலக முதலா ளித்துவம் மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனால் பாதிக்கப் பட்ட அனைத்து தரப்பு மக்களையும் ஓரணி யில் திரட்டி மகத்தான மக்கள் போராட் டங்களை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு பேராத ரவை தெரிவிக்க வேண்டுமென்றும் கூறினர்.

கருத்துகள் இல்லை: