மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்று பிர தமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். திருவனந்த புரத்தில் நடைபெற்று வரும் 97வது இந்திய அறி வியல் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் மகசூல் அதிகரிப்பதும், பூச்சிகள் தாக் குதல்களிலிருந்து சமாளிக்கும் திறன் கூடுதலாக உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளே வியக்கும் அளவுக்கு பன் னாட்டு கம்பெனிகளின் முகவராகவே மாறி முழங்கியிருக்கிறார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதை களை மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்தது. இதனால், இதை வாங்கி பயிரிட்ட விவசாயிகள், எதிர்பாராத பூச்சிகளின் தாக்குதலால் நிலை குலைந்து, தற்கொலை செய்து கொண்டனர் என் பதுதான் உண்மை. ஆனால், பிரதமர் மன் மோகன் சிங் இதை முற்றாக மறைத்து, பி.டி. பருத்தி விதை அமோகமாக மகசூலை தந்துள் ளது என்று கூறியுள்ளார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவ தாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு விவசாயி கள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள மத்திய அரசு, மக்களிடம் கருத்துக் கேட்ட பிறகு நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள் ளது. ஆனால், இந்த கருத்துக் கேட்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என் பதைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு உணர்த்துகிறது.
உணவு தானிய பயிர் விவசாயத்திலும் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமென்று அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். பழைய தொழில்நுட்பத்தை கட்டிக் கொண்டு அழ முடியாது. புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
காலத்தின் தேவைக்கேற்ப அறிவியலும், தொழில்நுட்பமும் மேம்பாடு அடைய வேண் டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவு வதாக அந்த மாற்றம் அமைய வேண்டும். ஆனால், மரபணு மாற்ற விதைகள் என்பது இந்தியாவின் நலனுக்காக கொண்டு வரப்படு வது அல்ல. மாறாக, பன்னாட்டுக் கம்பெனிகளிடம் இந்திய விவசாயத்தை, விவசாயிகளை சிக்கவைப்பதாகவே உள்ளது. இந்த விதைகளை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம், விதைத் தேவைக்கு தொடர்ச்சியாக பன்னாட்டுக் கம்பெனிகளையே நம்பியிருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, தொடர்ந்து உரம் உள்ளிட்ட இடு பொருள் தேவைக்கும் அந்நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். பூவுலகின் பல்லுயிர் சமநிலை மாற்றப் படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளே ஏற்றுக் கொள்ளாத இந்த மரபணு மாற்று விதையை இந்தியாவின் தலையில் கட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இதற்கு ஏற்பவே பிரதமர், விஞ்ஞானிகள் மாநாட்டில் பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.
நாட்டின் சுயச்சார்பையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில் இந்திய விஞ் ஞானிகளின் பங்களிப்பு அமைய வேண்டு மென்று விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய பிரதமர், அமெரிக்க அணு சக்தி உடன்பாடு, மரபணு மாற்ற விதைகள் என அமெரிக்க அதிகாரி போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
புதன், 6 ஜனவரி, 2010
யாருக்காக பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக