சனி, 2 ஜனவரி, 2010

ஆந்திர அமளியும் சந்தர்ப்பவாத அணுகுமுறையும்


டிசம்பர் 9ந் தேதி நள்ளிர வில் உள்துறை அமைச்சர் .சிதம்பரம் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் முன்மொழி யப்படும் என்று அறிவித்தார்.


இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா மற்றும் ஆந்திரப்பகுதிகளில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். பேருந்துகள் எரிக்கப்பட்டன; காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போது சிதம்பரம் தனது அடுத்த அறி விப்பை வெளியிட்டுள்ளார். அவ ரது முந்தைய அறிவிப்புக்குப் பிறகு ஆந்திர சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். விரிவான ஆலோசனைகள் தேவைப்படுகிறதாம். இவ்வாறு அறிவித்ததன் மூலம் தெலுங் கானா மாநிலம் அமைப்பது தொடர்பான முடிவை ஐ.மு. கூட் டணி அரசு, இப்போது கிடப் பில் போட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தெலுங்கானா மாநிலக் கோரிக்கையின் மீது காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக உள் ளிட்ட பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளின் அணுகுமுறை, வாக்குவங்கி அரசியலின் அடிப் படையிலேயே அமைந்திருந்தது. மொழிவழி மாநிலக் கோட்பாட் டில் அவை ஒரு உறுதியான நிலையை என்றைக்கும் எடுத்த தில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே, மொழி வழி மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது என்பதில் தொடர்ந்து உறுதியான நிலையை மேற் கொண்டு வந்துள்ளது.

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதுதான் நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற் கான சிறந்த வழி என்பதை இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் வலியுறுத்தி வந்த பின்னணியிலும், பொட்டி ஸ்ரீராமுலுவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க உண்ணாநோன்பிற்கும் உயிர்த் தியாகத்திற்கும் பின்னரே ஆந்திரமாநிலம் அமைக்கப் பட்டது. தெலுங்கானா பகுதி மக் களுக்கு வேறு பல மனக்குறை களும் இருந்துவந்தன. கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் தெலுங்கானா பகுதி யில்தான் உற்பத்தியாகின்றன என்ற போதிலும், அவற்றில் புதி தாக அணைகள் கட்டப்பட்ட தால் தண்ணீரில் தங்களின் பங்கு குறைந்துவிட்டது என்ற கருத்தும் நிலவி வந்தது. விவ சாய நெருக்கடியும் தற்கொலை களும் இந்த உணர்வுகளைத் தீவிரப்படுத்தின.

ஆந்திர மாநில மக்கள் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருந்த போதி லும் பண்பாட்டு வளர்ச்சியில் பின்தங்கியவர்களாக தெலுங் கானா மக்கள் கருதப்பட்டனர்.

தெலுங்கானா வட்டார வழக்கு கொச்சையானதாகவும் கருதப்பட்டது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் தெலுங்கானா பகுதிமக்களை மட்டம் தட்டும் விதத்தில் சித்தரிக்கப்பட்டுவந்தது. இது மக்கள் மத்தி யில் வேற்றுமையை வளர்த்து வந்தது.

தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம், இணக்கமான முறையில் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் தெலுங்கானா மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

அப்பகுதியின் பின்தங்கிய நிலையைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டாலும், தெலுங்கானா பகுதி மக்களின் குறைகள் களையப்படவில்லை. தெலுங்கானா கோரிக்கை மீண் டும் மீண்டும் எழுப்பப்பட்டு வந்ததற்கு அதுவே காரணம் எனலாம். அதே நேரத்தில் சுயநல அரசியல்வாதிகள் அமைச்சர் களாகவும் முதலமைச்சராகவும் ஆவதற்காக தெலுங்கானா கோரிக்கையை தேவைப்படும் போது எழுப்புவதையும் பின்னர் கைவிடுவதையும் தங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தெலுங்கானா கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட் டணியே ஏற்றுக்கொண்டுவிட் டது என்ற தோற்றத்தை ஏற் படுத்துவதன் மூலம் அப்பகுதி மக்களின் வாக்குகளை உறுதி செய்து கொள்வதற்காக, பிற கட்சிகளை கலந்தாலோசிக்கா மல் ப.சிதம்பரம் அவசர அவசர மாக தன்னிச்சையான முறை யில் அறிவிப்பை வெளியிட்டார். இப்போது ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான எதிர் விளைவு களின் காரணமாக மீண்டும் பல்டி அடித்துள்ளார். உடனடி யான அரசியல் ஆதாயத்துக் காக தொலை நோக்குப் பார்வை யின்றி செயல்படும் முதலாளித் துவ அரசியல்கட்சிகளின் சந்தர்ப்பவாத அணுகுமுறையே ஆந்திர அமளிக்கான காரண மாகும் .

கி.இலக்குவன்

கருத்துகள் இல்லை: