ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கருத்துப்போர் நடத்துவதில் முன்னின்ற துடிப்பான இளைஞர் கே.செல்வபெருமாள் மறைவு: தலைவர்கள் புகழஞ்சலிமார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் பணி யாற்றிய தோழர் கே. செல்வ பெருமாள் வெள்ளியன்று (ஜன.22) இரவு 11.30மணிக்கு காலமானார். அவர் சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 40. மனைவி அருணா, பெண் குழந்தைகள் அகல்யா, பிரவீணா, சந்திரா ஆகியோர் உள்ளனர்.

துணிச்சலோடு கருத் துப்போர் நடத்துவதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விரிந்து பரந்த இயக்கமாக கட்டுவதிலும் முன்னின்ற இளம்தோழர் செல்வபெருமாள் என அவரது இரங்கல் கூட்டத் தில் உரையாற்றிய தலை வர்கள் புகழஞ்சலியில் தெரிவித்தனர்.

தோழர் செல்வபெரு மாளின் இறுதி ஊர்வலம் திருவொற்றியூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது. இதில் திர ளான தோழர்கள் பங்கேற் றனர். திருவொற்றியூர் நக ராட்சி சுடுகாட்டில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

என்.வரதராஜன்

விரிந்து பரந்த இயக் கத்தை வளர்ப்பதில் செல்வபெருமாளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எந்தக்காடாகினும், எந்த மேடாகினும் கடுமையாக செயல்பட்டால் கட்சியை வளர்க்க முடியும் என்பதற்கு அத் தாட்சியாக செயல்பட்டவர். கட்சிக்குள் துணிந்து கருத்து சொல்பவர். இது போன்ற தோழர்கள் கட்சிக்கு பெருமை சேர்க்கிறார்கள்.

இத்தகைய தோழர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள். அவர் விட்டு சென்ற பணியை செய்து முடிக்க சபதமேற்போம். அவரை இழந்து தவிக்கும் அவரது இளம் மனைவிக்கும் குழந் தைகளுக்கும் கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும் அஞ் சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும் பத்தை கட்சி பாதுகாக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

அ.சவுந்தரராசன்

துடிப்பானவர். விஷயங் களை தெளிவாக அச்ச மின்றி கட்சிக்கு உள்ளே யும், வெளியேயும் தெரிவிக் கிற, வாதாடுகிற இளைஞர். ஒரு பரந்துபட்ட பார்வை யைக் கொண்டவர். கட் சிக்கு புதிய இளைஞர்கள் தேவைப்பட்டபோது வீரிய விதையாய் கிடைத்தவர். கட்சியின் கொள்கையின் பால் அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம் பிக்கை, அரசியல் புரிதல் இவற்றை அறிந்து கட்சி மாநிலக்குழு தன் அலுவல கப்பணிக்கு அவரை பயன் படுத்தியது. 40வயதில் அவரை இழந்திருப்பது பேரிழப்பாகும்.

டி.கே.சண்முகம்

எந்த பிரச்சனையானா லும் அதனை அரசியல் பூர் வமாக பார்த்து தெளி வடைவது அவரது இயல்பு. சிபிஎம்-க்கு எதிராக இணைய தளங்களில் அதிதீவிரவாதி கள் செய்யும் அவதூறு பிரச் சாரங்களுக்கு உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்தவர்.

கே.எஸ்.ராஜாமணி (திமுக)

துடிப்பான இளைஞர். அவரை திமுக-வில் சேர்க்க இப்பகுதியில் நாங்கள் கடும் முயற்சி எடுத்தோம். ஆனால், அவர் கம்யூனிஸ்ட் கொள் கையில் உறுதியான பிடிப்பு கொண்டவர். எனவே, எங்கள் முயற்சி வெற்றி பெற வில்லை. கட்சி வித்தியாசம் பாராமல், தான் வாழ்ந்த பகுதியில் மக்களுக்கு தொண்டாற்றியவர் அவர்.

இந்த இரங்கல் கூட்டத் திற்கு திருவொற்றியூர் நகர் மன்ற தலைவர் ஆர். ஜெயராமன் தலைமை வகித் தார். மாதர் சங்க நிர்வாகி அம்சா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மணி, பகு திச் செயலாளர் ராமசுப் பிரமணியன் உட்பட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.

உமாநாத் இரங்கல்

முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள் ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் செய்தி அனுப்பி யிருந்தனர்.

முன்னதாக செல்வ பெருமாள் உடலுக்கு மாநி லச் செயலாளர் என். வரத ராஜன், மத்தியக்குழு உறுப் பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.ரா.வரதராசன், ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர்கள் அ.சவுந் தரராசன், பி.செல்வசிங், கே. பாலகிருஷ்ணன், என்.சீனி வாசன், மாநிலக்குழு உறுப் பினர்கள் வே.மீனாட்சி சுந்த ரம், பா.சுந்தரராசன், கே. கிருஷ்ணன், க.பீம்ராவ், எஸ்.கே.மகேந்திரன் எம் எல்ஏ, ஏ.ஆறுமுகநயினார், என்.குணசேகரன், க.உதய குமார், சு.பொ.அகத்திய லிங்கம் மற்றும் வர்க்க வெகு ஜன அமைப்பின் தலைவர் கள், பல்வேறு கட்சியினர், சிபிஎம் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

தோழர் செல்வபெரு மாள் சிதைக்கு மூத்த மகள் அகல்யா தீ மூட்டினார்.

கருத்துகள் இல்லை: