கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.எஸ். மனோஜ் சமீபத்தில் கட்சியைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதற்குக்காரணமாக அவர் குறிப்பிட்டிருப்பது, கட்சி, தனது நெறிப்படுத்தும் இயக்க ஆவணத்தில், மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்று கட்சி உறுப்பினர்களுக்கு வழிகாட்டியுள்ளது என்பதே ஆகும். அவர் ஒரு உறுதியான மத நம்பிக் கையாளர் என்ற நிலையில் இது அவரது நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். எனவே கட்சி உறுப்பினர் பொறுப்பை கைவிடுவது என முடிவு செய்துள்ளார்.
டாக்டர் மனோஜின் இந்த முடிவை ஊடகங்களில் ஒரு பகுதியினர் மிகப்பெரி தாக ஊதுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தால் அந்த நபர் மதநம்பிக்கை கொண்ட வராக இருக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். சில பிரபல மதத்தலைவர்களும், கட்சியிலிருந்து மதநம்பிக்கை கொண்டவர்களை வெளியேற்றுவதற் கான முடிவே இது என்று கூறுகிறார்கள்.
முதலில் மதம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை நிலைபாடு என்ன என்பது பற்றி நாம் கூறவேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது, மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் இயங்குகிற ஒரு கட்சி. மார்க்சியம் என் பது ஒரு இயக்கவியல் தத்துவம்; மதம் தொடர்பாக அதன் கண்ணோட்டங்களும் 18ம் நூற்றாண்டில் மார்க்சிய தத்துவ மேதைகள் வரையறை செய்த அதே வேர்களை அடிப்படையாகக் கொண்ட வையே. இதன் அடிப்படையில், மதம் என்பதை ஒரு தனிநபர் விருப்பம் சார்ந்த அம்சமாகவே அரசு அணுகவேண்டும் என்று மார்க்சிஸ்ட்டுகள் விரும்புகிறார்கள். அரசு என்பதும், மதம் என்பதும் பிரிக் கப்பட்டே இருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட்டுகள் நாத்திகர்கள்; அதாவது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கையற்ற வர்கள். ஆனால் மதத்தின் தோற்றம் குறித்தும், சமூகத்தில் அது ஆற்றும் பங்கு குறித்தும் மார்க்சிஸ்ட்டுகள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். மார்க்ஸ் கூறியதுபோல, “மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்மா அற்ற உலகின் ஆன்மாவாக அது திகழ்கிறது”. எனவே, அந்த அடிப்படையில் மதம் என்பதன் மீது மார்க்சியம் தாக்குதல் தொடுக்கவில்லை. ஆனால் “ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக” மதத்தை மாற்றி வைத்திருக்கிற சமூகச் சூழ்நிலை மைகள் மீது மார்க்சியம் தாக்குதல் தொடுக்கிறது.
மதம் தொடர்பாக மார்க்சியக் கண்ணோட்டத்தையும், அதன் நாத்திகக்கண் ணோட்டத்தையும் பற்றி விளக்குகிறபோது, தோழர் லெனின், தனக்குத்தானே சில கேள்விகளை எழுப்புகிறார்: “அப்படியானால், நாம் நாத்திகர்கள் என்று ஏன் நமது கட்சித்திட்டத்தில் பிரகடனம் செய்யவில்லை? ஏன் கிறிஸ்தவர்களையும் இதர கடவுள் நம்பிக்கையாளர்களையும் நமது கட்சியில் சேரக்கூடாது என்று கூறவில்லை?” இந்த கேள்விகளுக்கு லெனினே பதிலளிக்கிறார், மார்க்சிஸ்ட்டு களைப் பொறுத்தவரை, மதம் என்பது குறித்த அணுகுமுறையானது வர்க்கப் போராட்டத்தின் மிக உறுதியான நிலை மைகளால் தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறுகிறார். சுரண்டலும் ஒடுக்கு முறையும் கொண்ட முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான வர்க்கப்போராட்டத்தில், தொழிலாளி வர்க்கக் கட்சியின் முன்னுரிமை என்பது அனைத்துத் தொழிலாளர்களையும், அவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்களா? அல்லது இல்லாதவர்களா என்ற எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றுபடுத்துவதே ஆகும். லெனின் கூறுகிறார்: “நாம் வாழும் பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைப்பதற்கான இந்த உண்மையான புரட்சிகரப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஒற்றுமை என்பது, விண்ணுலகில் ஒரு சொர்க்கத்தை அடையப்போவதாக கூறப்படுகிற கருத்தில் தொழிலாளி வர்க்கம் ஒற்றுமையாக இருப்பதைவிட மிகவும் முக்கியமானது”.
எனவே, இயக்கவியல் கண்ணோட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்த்திப்பிடிக்கிற அதேநேரத்தில், மதநம்பிக்கை கொண்டவர்கள் கட்சியில் சேர்வதைத் தடுக்கவில்லை. கட்சி உறுப்பினராவதற்கு விதிக்கப்பட்டுள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், கட்சியின் திட்டம், கட்சியின் அமைப்புச்சட்டம் ஆகியவற்றை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மேலும் கட்சியின் ஏதேனும் ஒரு ஸ்தாபன கிளையில் கட்சி கட்டுப் பாட்டுக்கு உட்பட்டு பணியாற்றுவதற்கு விருப்பம்கொண்டவராக இருக்க வேண்டும்.
தற்போது இந்தியச் சூழலில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதத்திற்கு எதிராகப் போராடவில்லை; ஆனால் மத அடையாளத்தின் அடிப்படையிலான மத வெறிக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறது. மேலும், மத சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையே மத நம்பிக்கை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்கள் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடையே சிலர் கோவிலுக்குச் செல்லலாம்; மசூதிக்குச் செல்லலாம்; அல்லது தேவாலயத்திற்குச் செல்லலாம். அவர்கள், கேரளத்தில் டாக்டர் மனோஜ் கூறிக் கொண்டிருப்பது போல, தங்களது மத நம்பிக்கையை ஏழைகளிடையேயும், துன்பதுயரத்தில் ஆழ்ந்திருக்கிற மக்களி டையேயும் பணியாற்றுவதுடன் இணைத் துக்கொண்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் நலன்களை முன்னிறுத்திப் பாடுபடுகிற அல்லது உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிற மத நம்பிக்கையாளர்களுடனும் மதத்தலை வர்களுடனும் கூட கைகோர்த்துச் செயல்படுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.
கேரளாவிலும் கூட இத்தகைய ஒத்துழைப்பிற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. தோழர் இ.எம்.எஸ்., கேரளத் தில் மார்க்சிஸ்ட்டுகளும், கிறிஸ்தவ மதத் தலைவர்களும் ஒத்துழைப்புடன் செயல் பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து எழுதியுள்ளார். தேவாலயத் தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது குறித்தும் எழுதியுள்ளார். எனவே தற்போது எழுந்துள்ள பிரச்சனை என்பது மதம் குறித்தும், இறை நம்பிக்கை கொண் டவர்கள் கட்சியில் சேர்வது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை நிலைபாட்டோடு தொடர்பு டையது அல்ல.
கட்சி, தனது ஊழியர்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப் படையிலான மார்க்சிய உலகக்கண்ணோட்டத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதன் மூலம், ஒரு மார்க்சிஸ்ட்டாக பரிணமிக்கிற தருணத்தில், கட்சி உறுப்பினர்கள் அறிவியல் பூர்வ மான உலகக்கண்ணோட்டத்தை உள்வாங்கிக்கொள்கிறார்கள்; மதநம்பிக்கை யை கைவிடுகிறார்கள்.
கட்சியின் மத்தியக்குழுவால் நிறை வேற்றப்பட்டுள்ள நெறிப்படுத்தும் இயக்க ஆவணத்தில், மத நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு அம்சங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன. ஒன்று, கம்யூனிஸ்ட் விதிமுறைகளுக்கு முரணாக உள்ள அனைத்து சமூக, சாதிய, மத ரீதியான செயல்களை கட்சி உறுப்பினர்கள் படிப்படியாக கைவிடவேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு உரிய கல்வி புகட் டப்பட வேண்டும் என்பதாகும். கட்சி உறுப்பினர்கள், தங்களது மத நம்பிக் கையையோ அல்லது வழக்கங்களையோ கைவிடவேண்டும் என்று கூறப் படவில்லை. ஆனால் தீண்டாமை, சம உரிமை வழங்குவதில் பெண்களுக்கு எதி ரான கொடுமை அல்லது விதவை மறு மணத்தை தடுத்து நிறுத்துவது போன்ற கொடிய வழக்கங்கள் ஆகிய, கம்யூனிஸ்ட் விதிமுறைகளுக்கு எதிரான செயல் களை அல்லது இதுபோன்ற மதப் பழக் கங்களை கைவிடவேண்டும் என்று கூறுகிறது. இத்தகைய செயல்கள் மதத் தின் அனுமதியோடு நடக்கின்றன. எனவே இவற்றைக் கைவிடவேண்டும் என்று கட்சி கூறுகிறது. கட்சி உறுப் பினர்கள் இதுபோன்ற சாதிய, பாலின அல்லது சமூகப் பாகுபாடுகளுக்குத் துணைபோகும் மதப் பழக்கங்கள் அல்லது சமூகப் பழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது என்று கட்சியின் நெறிப்படுத்தும் இயக்கத்தில் வழிகாட்டப்பட்டுள்ளது.
நெறிப்படுத்தும் இயக்கத்தில் குறிப் பிடப்பட்டுள்ள மற்றொரு அம்சம், கட்சி யின் முன்னணி ஊழியர்கள் மற்றும் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல் பாடுகள் தொடர்பானது. அவர்கள் தங்க ளது குடும்ப உறுப்பினர்களின் திருமணங் களை மிகவும் ஆடம்பரமாக நடத்தக் கூடாது என்றும், வரதட்சணை வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள் ளது. மேலும் அவர்கள் மத நிகழ்ச்சி களையோ அல்லது தனிப்பட்டமுறையி லான மதச்சடங்குகளையோ நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள் ளது. கட்சியின் மாநிலக்குழு, மாவட்டக் குழு, மண்டல, பகுதிக்குழுக்கள் போன்ற மட்டங்களில் செயல்படும் தலைவர்க ளைப் போன்ற கட்சியின் முன்னணி ஊழியர்கள் தங்களது சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் முற்போக்கான மாண் புகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்சி எதிர்பார்க்கிறது. அவர்கள் மத நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது தனிப்பட்ட முறையில் மதச் சடங்குகளையும் நடத்தக்கூடாது. மற்ற வர்களால் நடத்தப்படுகிற மதநிகழ்ச்சி கள், சமூக விழாக்களில் பங்கேற்கலாம் என்பது வேறு விஷயம். குறிப்பாக சட்ட மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து உறுப் பினர்கள் என பல பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருந்தால் அவர்கள் பங்கேற்கலாம். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பொதுத்தலங்களில் சில அம்சங்களை பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தங்களது சொந்த வாழ்க்கையில் அவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும். எனவே, கம்யூ னிஸ்ட் கட்சி, மத நம்பிக்கை கொண்ட வர்கள் கட்சியில் சேர்வதை தடுக்க வில்லை. அவர்கள் தங்களது மத நம்பிக் கையை வைத்துக்கொண்டே, மதச்சார் பின்மையை உயர்த்திப்பிடிக்க வேண்டு மென்றும், அரசு விவகாரங்களில் மதம் ஊடுருவாமல் எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் கட்சி எதிர்பார்க்கிறது.
இந்த அடிப்படையிலேயே நெறிப் படுத்தும் வழிகாட்டுதல்கள் என்பவை, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கம்யூ னிஸ்ட் கட்டுப்பாடுகளோடும் மாண்புக ளோடும் வாழ்வதற்கு உதவி செய்யும் விதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்னணி ஊழியர்களைப் பொறுத்த வரை, அவர்கள் பொதுவாழ்வில் மட்டு மின்றி தனிப்பட்ட வாழ்விலும் மார்க் சிஸ்ட்டுகளாக இருக்க வேண்டும் என்று கட்சி எதிர்பார்க்கிறது.
டாக்டர் மனோஜ் தவறாக கூறுகிறார். தனது முன்னணி ஊழியர்கள் பின்பற்று வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களில் மத நடவடிக்கை தொடர்பானவை இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரா னது என்று அவர் முற்றிலும் தவறான முறையில் கூறியுள்ளார். இந்திய அரசி யல் அமைப்புச்சட்டம், மதச்சார்பற்ற அரசு என்பதை வலியுறுத்துகிறது. இது எந்த ஒரு குடிமக்களும் தனது மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை உத்தர வாதம் செய்துள்ளது. எந்த ஒரு குடிமக் களும் எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்கும் உரிமையையும் உத்தரவாதம் செய்துள்ளது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில், அதன் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு எந்த ஒரு குடிமக்களும் தாமாகவே முன்வந்து இணைந்து கொள் வதற்கான ஒரு ஸ்தாபனமே ஆகும்.
கட்சியில் அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் புதிதானவை அல்ல. 1996ம் ஆண்டில் முதல்முறையாக நெறிப் படுத்தும் இயக்க ஆவணம் நிறைவேற்றப் பட்டபோதே இந்த வழிகாட்டுதல்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போது இந்தப் பிரச்சனை எழுப்பப்பட் டிருப்பதால், மதம் தொடர்பாக கட்சியின் நிலைபாட்டையும் கம்யூனிஸ்ட் கண் ணேட்டத்தையும் விளக்கவேண்டிய அவ சியம் ஏற்பட்டது.
-பிரகாஷ் காரத்
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக