சனி, 13 பிப்ரவரி, 2010

சேதுக் கால்வாய் திட்டம் : திமுக நிர்ப்பந்திக்காதது ஏன்?

சேதுசமுத்திரத் திட்டத்தை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமல்படுத்த வேண்டும் என்று திமுக நிர்ப்பந்திக்காமல் இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் எம்.பி., கேள்வி எழுப் பினார்.


தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தாமதமின்றி அமலாக் கக்கோரியும், இதற்கென செலவழித்த மக்கள் வரிப்பணம் 2400 கோடி ரூபாயை வீணாகாமல் தடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர உண்ணா விரதம் மேற்கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி வைத்து பிருந்தா காரத் பேசினார்.

“சேது சமுத்திரத் திட்டத்திற்காக இதுவரை 2400 கோடி ரூபாயை ஆட்சி யாளர்கள் செலவு செய்திருக்கிறார்கள். இதன்காரணமாக ஒப்பந்தக்காரர்கள் ஏராளமாக பயன் அடைந்திருக்கிறார் கள். ஆனால் அத்திட்டத்தின் பயன், மக் களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குச் சென்றடைய வேண்டிய சமயத்தில் இத் திட்டத்தை முழுமைப்படுத்தி நிறை வேற்றாமல் கிடப்பில் போட்டு வைத் திருக்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்து வைத்திருக்கிறார்கள்? மத்திய அரசை யும் குறிப்பாக திமுக-வையும் இது குறித்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்று பிருந்தா காரத் கூறினார்.

மேலும், பாஜகவும், இந்து மதவெறி அமைப்புகள் சிலவும் அனுமான் கட் டிய ராமர் பாலம் அங்கே இருப்பதாக வும் அதற்கு ஆபத்து வந்துவிடும் என் றும் அறிவியல் பார்வையற்று கூறியதை அடுத்து, ஆட்சியாளர்களும் திட்டத் தைக் கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று கூறிய பிருந்தா காரத், “சேது சமுத்திரத் திட்டத்தில் காங்கிரசின் நிலை என்ன? திமுக-வின் நிலை என்ன? தமிழகத்தின் கடற்கரையோரம் உள்ள சுமார் 13 துறைமுகங்கள் வளர்ச்சிய டைந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையளிக்கக்கூடிய இத்திட் டத்தை மதவெறி சக்திகள் தங்கள் சொந்தலாபத்திற்காக திசைதிருப்பும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின் றன. இதற்கு காங்கிரசும் திமுகவும் எப் படித் துணை போகலாம்?” என்று கேள்வி எழுப்பினார்.

இப்பிரச்சனையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையில் எடுத் திருப்பதற்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து நாடாளுமன் றத்திற்கு வெளியே, ஆட்சியாளர்களின் கவனத்தை நீங்கள் திருப்பியிருக்கிறீர் கள். வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன் றத்திற்குள்ளே நாங்களும் இப்பிரச் சனையைக்கிளப்புவோம் என்றும் அவர் கூறினார். (ந.நி)

கருத்துகள் இல்லை: