வெள்ளி, 16 ஏப்ரல், 2010

அசுரவேகத்தில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை

மன்மோகன் சிங் ஆட்சியில் வளர்ச்சியே இல்லை என்று சொன்னால் நம்பாதீர் கள். அற்புத அபார வளர்ச்சியைக் கண்டுவரு கிறோம். நாட்டின் முதல் நம்பர் மகா கோடீசுவ ரராக முகேஷ் அம்பானி உயர்ந்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் அவரு டைய தம்பி அனில் அம்பானி. ஐயாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்கள் குவித் திருப்பவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தக் கோடீசுவரர்களின் நலன்களின் அரணாக அரசியல் கட்சிகள் பரிணமித்து வருகின்றன. முகேஷ் அம்பானிக்கு காங்கிரஸ் என்றால், அனில் அம்பானிக்கு முலாயம் சிங் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

சோனியா காந்தியின் சுற்றுப்பயணத் திற்கு ஒரு ஹெலிகாப்டர் கொடுத்தால், பிஜேபி தலைவர் இஸ்ரேல் போவதற்கு இன்னொரு விமானத்தை முகேஷ் அம்பானி தருவார்.

மிகக்குறுகிய காலத்தில் தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் இந்தியத் தொழிலதிபர்கள் ரொம்பப் புத்திசாலிகளாக ஆளும் கட்சிக்கு இவ்வளவு, எதிர்க்கட்சிக்கு இவ்வளவு, குட்டிக்கட்சிகள், மாநிலக் கட்சிகளுக்கு இவ்வளவு என்று வஞ்சகமில் லாமல் தேர்தல் நிதி தருவார்கள். அவர்களு டைய கணக்கு விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதுதான்.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவ தற்கும் கேள்விகள் கேட்காமல் இருப்பதற்கும் கையூட்டுப் பெற்ற உறுப்பினர்கள் அம்பலத் திற்கு வந்தார்கள். தங்கள் போட்டி நிறுவனம் பற்றிக் கேள்விகள் கேட்க வேண்டும். தங்கள் ‘பிசினஸ்’ பாதிக்கின்ற முறையில் எந்தக் கேள்வியும் எழக்கூடாது. அப்படிக் கேட் பவர்களின் வாயை அடைக்க வேண்டும் என் பதுதான் தொழிலதிபர்கள் கூறும் நிபந்தனை களாகும். சில தொழிலதிபர்களின் மாதாந்திர சம்பளப் பட்டியலில் பல்வேறு கட்சி உறுப் பினர்களும் இருப்பதாகச் சொல்வார்கள்.

இந்தியத் தொழிலதிபர்களின் சிந்தனைச் சக்கரம் சுழன்றது. அவர்களுக்கும் நாடாளு மன்றத்தில் பவனிவர ஆசை பிறந்தது. முலாயம் சிங் தயவில் அனில் அம்பானி மாநி லங்களவை உறுப்பினரானார். தேவகவுடா வின் அரவணைப்பில் நமது செட்டி நாட்டு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமி அந்த மன்றத்தில் அடியெடுத்து வைத்தார். தொழிலதிபர் ஜிண்டல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் மாநிலங்களவைக்கு வந்தார். பிர்லா குடும் பத்து பிரதிநிதி ராஜஸ்தானிலிருந்து அந்த அவைக்கு வந்தார். ஆன்றோர், சான்றோர், மூதறிஞர்கள், விற்பன்னர்கள் அங்கம்பெற வேண்டிய அவையில் இப்படித் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தங்களைக் காத்துக் கொள்ளும் கவசம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சுரங்க சாம்ராஜ்யங்கள் இந்திய அரசிய லைத் தூக்கிப் பந்தாடும் நிலை உருவாகி வருகிறது. இந்த அபாயகரமான போக்கைத் தடுக்க வரைமுறைகள் வகுக்கப்பட வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பிரகாஷ் காரத் கோரியுள்ளார்.

கர்நாடகத்தில் பாஜகவுக்கும் சுரங்க முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட உறவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக் கிறது என்பதனை எண்ணிப்பார்க்க வேண் டும். முதல்வர் பீடத்திலிருந்து எடியூரப்பா வையே தூக்கி எறிகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் கர்நாடக அரசியலை மட்டு மல்ல, ஆந்திர அரசியலையும் ஆட்டிப் படைக்க முயல்கிறார்கள். கர்நாடகாவில் பாஜ கவைத் தங்கள் கட்டுத் தொழுவத்தில் கட்டிப்போட்டுவிட்டார்கள். ராஜசேகர ரெட்டி மறைவிற்குப் பின்னர் அவருடைய மகனை ஆந்திர முதல்வராக்குவதற்கு முயற்சிக்கிறார் கள். எனவே, காங்கிரஸ் விழித்துக்கொண்டது.

சுரங்கங்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். அதனை மன்மோகன் சிங் அரசு செய்யாது. ஏனெனில், இவர்கள் நாட்டு டைமையாக்கப்பட்ட நிறுவனங்களையே தவணை முறையில் விற்பவர்கள். எல்லாம் தனியார் துறைக்கே என்ற கோட்பாட்டிற்கு வாக்கப்பட்டவர்கள். அரசியல் கட்சிகளுக்கு ‘நன்கொடை’ கொடுப்பதற்காகவே டாடா ஓர் அறக்கட்டளை வைத்திருப்பதாக அண்மை யில் தகவல் வந்தது. அந்த அறக்கட்டளை தங்கள் கட்சிக்கு 17 லட்ச ரூபாய் நன்கொடை அனுப்பியதாகவும், நன்றி கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் பிரகாஷ் காரத் கூறியிருக்கிறார். ஆக, அரசியல் என்பது மெல்ல மெல்ல வியாபாரச் சரக்காகி வருகிறது.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.

கருத்துகள் இல்லை: