வெள்ளி, 14 மே, 2010

இளைக்கும் இந்தியாவும்! கொழுக்கும் கறுப்பு பணமும்!

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசியை குறைப்போம் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் அத்தியா வசியப் பொருட்களின் விலைவாசி குறையவில்லை. மாறாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. விலைவாசி உயர்வுக்கு காரணமான பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டு மக்கள் தொகையில் 39 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக் கின்றனர் என்று டெண்டுல்கர் குழு கூறி யுள்ளது.


விலைவாசி எந்த அளவிற்கு அதிக ரித்துள்ளது என்பதை நுகர்வோர் குறி யீட்டு எண் மூலம் புரிந்துகொள்ள முடி யும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நுகர்வோர் விலை பணவீக்க அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும், இதன் அளவு குறித்து மத்திய நிதியமைச் சகம் மதிப்பிட்டுள்ளதா என்றும், பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத் துள்ள நடவடிக்கை என்ன என்றும் கேள்வியெழுப்பினேன்.

இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா பதிலளிக்கையில்:-

தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ -ஐடபிள்யூ) அடிப்படையில் உணவு தானிய பொருள் விலையின் பணவீக்கம் 2009 பிப்ரவரி முதல் 2010 பிப்ரவரி வரையிலான காலத்தில் பெருமளவு உயர்ந்துள்ளது என்று ஒப்புக்கொண்டார். குறிப்பாக உணவுதானிய துறையில் பணவீக்கம் 46.2 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதைக்கட்டுப்படுத்த அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் பட்டியலிட்டார். கோதுமை, அரிசி, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை இறக்குமதிக்கும் முற் றாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசி அல்லாத அரிசி ரகங்கள் மற்றும் சமையல் எண்ணெய், பருப்பு வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள் ளது என்றார்.

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் நடை முறையில் விலைவாசி குறையவில்லை என்பதே அனுபவம்.

விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க் கைத்தரம் மீதும் குடும்பநலன் மீதும் எத்தகைய மோசமான தாக்குதலை தொடுத்துள்ளது என்பதை மாநிலங் களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

முகமது அலிகான் என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்வியில், ரத்தச்சோகை மற்றும் சத்துக்குறைவு நோயினால் இளம் பெண்கள் எந்தளவிற்குபாதிக்கப்பட்டுள் ளனர். ரத்தச் சோகையினால் பாதிக்கப் பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை என்ன? இதில் கிராமப்புறத்திற்கும் நகர்ப் புறத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று அவர் வினவியிருந்தார்.

இதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் தினேஷ் திரிவேதி பதிலளித்தார். தேசிய குடும்ப நல சர்வே ஐஐஐன்படி தேசிய அளவில் 15 வயதிலிருந்து 49வயதிற்குட்பட்ட பெண் களில் 55.3 சதவீதம் பேர் ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணமான பெண்களில் 56.2 சதவீதமும், கர்ப்பிணிப்பெண்களில் 58.7 சதவீதம் பேரும் ரத்தச்சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதம் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.

கிராமப்புற பெண்களில் 57.4 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50.9 சதவீதம் பேரும் ரத்தச்சோகையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது அமைச்சர் அளித்த ஒப்புதல் வாக்குமூலமாகும். அதாவது இந்திய பெண் சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் ரத்தச்சோகை யினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே சர்வேயின்படி 15லிருந்து 49 வயதிற்குட்பட்ட பெண்களில் 35.6 சத வீதம் பேர் சத்துக்குறைவினால் பாதிக் கப்பட்டுள்ளனர். இது கிராமப்புறத்தில் 40.6 சதவீதமாகவும் நகர்ப்புறத்தில் 25 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வி னால் மக்களுக்கு எந்தபாதிப்பும் இல் லை என்று சட்டமன்றத்தில் அமைச் சர்கள் கூறுகின்றனர். ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங் குவதால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பதாக மாநில உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட பதிலில், தமிழகத்தில் ரத்தச்சோகை, சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் களின் எண்ணிக்கை குறித்த விவரமும் இடம்பெற்றுள்ளது.

கிராமப்புறப் பெண்களில் ரத்தச் சோகை மற்றும் சத்துக்குறைவினால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை-எளிய விவ சாயத் தொழிலாளிகள்தான். இவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் பிற்படுத் தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பொரு ளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் மன் மோகன்சிங் துவங்கி அமைச்சர் பெருமக் கள் வரை தம்பட்டம் அடிக்கின்றனர். உலக வங்கி பாராட்டிவிட்டதாக புழ காங்கிதம் அடைகின்றனர்.

தாராளமய பாதையை விட்டுவிலகப் போவதில்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றனர். இவர்கள் பின்பற்றும் பொருளாதாரப்பாதை இந்திய மக்களை குறிப்பாக பெண்களை எந்த ளவிற்கு நலிவடையச்செய்துள்ளது என் பதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்ட விவரங்களே வெளிக்கொணர்ந் துள்ளது.

தமிழ்நாட்டில் 53.2 சதவீதம் பெண் கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள் ளனர். இவர்களில் 2சதவீதம் பேர் கடுமையான ரத்தச்சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28.4 சதவீதம் பெண்கள் சத்துக்குறைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழ கத்தின் உண்மையான பக்கத்தை எடுத் துரைப்பதாக அமைந்துள்ளது.

தேசத்தின் சரிபாதி பெண்கள் ரத்தச் சோகையினாலும் சத்துக்குறைவினா லும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாடாளுமன்றத்தில் அரசே ஒப்புக் கொண்ட உண்மை.

மறுபுறத்தில் கறுப்புப்பண பேர்வழி கள் நாளுக்கு நாள் கொழுத்து வரு கின்றனர். சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கிவைத்துள்ள இந்திய பெருமுதலாளிகள் மற்றும் அரசியல் வாதிகளின் கள்ளப்பணத்தை வெளிக் கொண்டுவர மன்மோகன்சிங் அரசு தயாராக இல்லை.

மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா, கறுப்புப்பணத்தை மதிப்பிட புதிய ஏஜென்சி அமைக்கும் திட்டம் அரசுக்கு உண்டா என்றும், இந்த ஏஜென்சி வெளி நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஆராயுமா என்றும் கேட்டதோடு இது குறித்து விவ ரமான பதிலை எதிர்பார்ப்பதாக கேட் டிருந்தார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜியின் ஒற்றை வரி பதில், அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்பதுதான். இதிலிருந்தே மன்மோகன் சிங் அரசு யாருக்கு சேவை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி.


கருத்துகள் இல்லை: