சனி, 19 ஜூன், 2010

அலுவலகத்திற்கு நிலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்

புதுச்சேரி கரிக்கலாம்பக்கம் சிபிஎம் கிளை உறுப்பினர் ரத்தினவேல் தனக்கு சொந்தமான மடுகரை சாலையில் சிவதர ஷ்னி நகரில் உள்ள 1170 சதுரடி கொண்ட வீட்டுமனையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு அளித்தார். தனது மனைவி பொற்கலை, மகன் திவானந்து மகள் தீபிகா ஆகி யோரோடு வீட்டுமனையை ஒப்படைக் கும் பத்திரமாற்று விழா பாகூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் பிரதேச செயலாளர் வெ. பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமசாமி இடைக்கமிட்டி செயலாளர்கள் முரு கையன், பத்பநாபன், பிரதேசக்குழு உறுப் பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன் னிலையில் சிபிஎம் தமிழ் மாநில செய லாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் ரத்தின வேல் குடும்பத்தினர் பத்திரப்பெயர் மாற்றி வழங்கினர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் சிங்காரவேலர் திடலில் நடந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில் ரத்தினவேல் குடும்பத்தினர் மேடையில் மனைப் பத்திரத்தை அனைவரது முன் னிலையில் சிபிஎம் தமிழ் மாநில செய லாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினர். இதில் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப் பினர் என்.குணசேகரன் உடனிருந்தார்

கருத்துகள் இல்லை: