புதன், 27 அக்டோபர், 2010

அமெரிக்க கைக்கூலி அரசின் நீதிமன்றம் ‘தீர்ப்பு’ அமெரிக்க கைக்கூலி அரசின் நீதிமன்றம் ‘தீர்ப்பு

இராக்கில் அமெரிக்கப் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி சதாம் உசேனின் நெருங்கிய சகாவும், அவரது அரசின் துணைப் பிரதமராக வும் இருந்த தாரிக் அஜீசுக்கு, இராக்கின் தற்போதைய அமெரிக்கக் கைக்கூலி அரசின் நீதிமன்றம் மரண தண்டனை விதித் துள்ளது.

முதலாம் வளைகுடா போரில் இராக்கின் ஷியா பிரிவு இஸ்லாமிய மதக் கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கொல்லப் பட்டதில் தாரிக் அஜீசுக்கு தனிப்பட்ட முறையில் பங்கு இருப்பதாக கூறி, செவ்வாயன்று இராக் நீதி மன்றம் இந்த மரண தண் டனை அறிவிப்பை வெளி யிட்டது.

கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கப் படைகள் இராக் தலைநகர் பாக்தாத்தில் நுழைந்தன. அதற்கு முன்பு 2 மாத காலம் இராக் முழுவதும் பல்வேறு பகுதிகளை கொடிய குண்டு வீச்சுகள் மூலம் சிதைத் தழித்த அமெரிக்கப்படை கள், பாக்தாத்தில் வெறி யாட்டம் நடத்தின. இராக் கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெ ரிக்க ஏகாதிபத்தியம், அப் போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தலைமையில் நடத்திய இந்த கொடிய போரில், இராக் ஜனாதிபதி சதாம் உசேன் உட்பட அனைத்து முக்கிய தலைவர்களையும் கொல்வது என்ற முடிவோடு அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின.

சதாம் உட்பட 55 முக் கியத் தலைவர்களின் பட்டி யலை தயாரித்து ஒவ்வொரு நபராக அமெரிக்கப்படை வேட்டையாடியது. அந்த 55 பேரில் 43வது நபராக இடம் பெற்றிருந்தவர் தாரிக் அஜீஸ். 2003 ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்கப் படை யினரிடம் இவர் சிக்கினார். அப்போது முதல் கடந்த 7 ஆண்டு காலமாக பாக்தாத் தில் வெளி உல கிற்கு தெரி யாத இடத்தில் இருக்கும் சிறைக் கொட்டடியில் அமெரிக்கப் படையினரின் காவலில் சித்ரவதைக்குள் ளாக்கப்பட்டு வந்தார் அஜீஸ்.

சதாம் உட்பட ஒவ் வொருவரையும் கொல்வ தற்கு, ஆக்கிரமிப்புக்குப்பின் அமெரிக்காவால் இராக்கில் அமர்த்தப்பட்ட கைக்கூலி அரசு புதிய வழக்குகளைப் புனைந்தது. தாரிக் அஜீஸ் மீது 42 வியாபாரிகள் கொல் லப்பட்ட வழக்கு புனையப் பட்டது. 1992 ஜூலை மாதம் இராக்கில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரித்து கொள்ளை லாபம் அடித்தார்கள் என் பதற்காக 42 வியாபாரி களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் உத்தரவில் தாரிக் அஜீஸ் கையெழுத் திட்டார் என்பதே குற்றச் சாட்டு. அந்த காலகட்டத் தில் அமெரிக்காவாலும், ஐ.நா.வாலும் விதிக்கப் பட்ட வரலாறு காணாத பொருளாதாரத் தடைக ளால் இராக்கிய குழந்தை கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் தாரிக் அஜீஸ் துணைப்பிரதமராக பொறுப்பிலிருந்தார். இந்த வழக்கில் அஜீசுக்கு ஏற்கெ னவே 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், 1990களில் சதாம் அரசுக்கு எதிராக ஷியா பிரிவு முஸ்லிம் கட்சி களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அதை ஒடுக்கினார் என்ற பெயரில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இராக் நீதிமன்றத்தில் “விசா ரணை”நாடகம் நடைபெற்றது.

விசாரணையின் முடி வில் அக்டோபர் 26 செவ் வாயன்று, தாரிக் அஜீசுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் “தீர்ப்பளித்தது”.

இந்தத் தீர்ப்பை உறுதிப் படுத்திய இராக் குற்றவியல் உயர்நீதிமன்றத்தின் தலை மை நீதிபதி முகமது அப் துல் சஹாப், அஜீஸ் மீது வேறு சில வழக்குகள் உள் ளன என்றும், அந்த வழக்கு களில் எதிர்வரும் சில வாரங் களில் மேலும் மரண தண் டனைகள் விதிக்கப்படும் என்றும் கூறினார்.

1990களில் சதாம் அரசுக்கு எதிராக ஏகாதி பத்திய சக்திகளால் தூண்டி விடப்பட்ட கலகத்தில் பங் கேற்று தலைமையேற்றவர் களில் ஒருவரான ஷியா பிரிவு கட்சியின் தலைவர் நூரி அல் - மாலிகிதான் இன்று இராக் பிரதமராக இருக்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக் கப்பட்டுள்ள தாரிக் அஜீஸ் சதாம் அரசின் துணை பிரதமராக, வெளியுறவுத் துறை அமைச்சராக, ஆளும் பாத் கட்சியின் உயர் தலைவர்களில் ஒருவராக, இராக் புரட்சிகர கவுன்சி லின் உறுப்பினராக என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையால் சதாம் உசேன் அரசுக்கு எதிராக தடைகள் விதிக்கப் பட்டிருந்த சமயத்தில் உலக நாடுகளிலும், ஐக்கிய நாடு கள் சபையிலும் இராக் அர சின் பிரதிநிதியாக வலம்வந் தவர் தாரிக் அஜீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 74 வய தாகும் அஜீஸ், அமெரிக்கப் படையினராலும், கடந்த ஓராண்டாக இராக்கிய படையினராலும் விசா ரணைக்குள்ளாக்கப்பட்டார். இந்த விசாரணைகள் அனைத்திலும் மீண்டும் மீண்டும் எங்கள் ஜனாதிபதி சதாம் உசேன்; எங்கள் தேசம் இராக் என்று முழங் கியவண்ணம் இருந்தார்.

அஜீசுக்கு விதிக்கப் பட்டுள்ள மரண தண்ட னையை அவரது வழக்கறி ஞர்கள் அடுத்த 30 நாட்க ளுக்குள் மேல் முறையீடு செய்யலாம். அதை எடுத்துக் கொள்வதா இல்லையா என் பதை நீதிமன்றம் அடுத்த 30 நாட்களுக்குள் முடிவு செய் யும். எனினும் அவரைக் கொல்வதே அமெரிக்கக் கைக்கூலி அரசின் இலக்கு என்பதால், மேல்முறையீடு நிராகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி நிராகரிக்கப்படுமானால், 2 மாதங்கள் கழித்து அடுத்த 30 நாட்களுக்குள் தாரிக் அஜீஸ் தூக்கிலிடப்படுவார்.

கருத்துகள் இல்லை: