வெள்ளி, 29 அக்டோபர், 2010

கேரளம் இடதுஜனநாயக முன்னணிக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்


கேரளத்தின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை, கடந்த 2009 மக்களவைத் தேர்தல் முடிவு களுடன் ஒப்பிடும் போது மாநி லத்தில் இடது ஜனநாயக முன் னணி தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குறிப்பிடத்தக்க அளவிற்கு இடங்களை பெற் றுள்ளது என்ற போதிலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அது பெற்ற வெற்றியை இந்த தேர்தலில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என் பதே உண்மை.

கேரள உள்ளாட்சி தேர்தல் முடி வுகளை ஆய்வு செய்யும் போது இது மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த அம்சமாகும். வாக்கு எண்ணிக்கையின் முதல் நாளில் (அக்டோபர் 27) வெளி யான விவரங்களின் அடிப் படையில் இந்த ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 2 மாநக ராட்சிகளிலும் பல்வேறு நக ராட்சிகளிலும் சற்று பின்ன டைவை சந்தித்துள்ளது. எனி னும் திருவனந்தபுரம், கொல் லம் மாநகராட்சிகளை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கொச்சி மற்றும் திருச்சூர் மாநக ராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன் னணி வென்றுள்ளது.

மொத்தமுள்ள 59 நகராட்சி களில் இடது ஜனநாயக முன் னணி 18 நக ராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜன நாயக முன்னணி 39 நகராட்சி களில் வென்றுள்ளது. மாவட்ட, ஒன்றிய, கிராமப் பஞ்சாயத்து களில் 2005 உள்ளாட்சித் தேர் தல்களுடன் ஒப்பிடும் போது இடது ஜனநாயக முன்னணி சற்று பின்னடைவை சந்தித் துள்ளது. மாவட்ட பஞ்சாயத் துகளை பொறுத்தவரை இடது ஜனநாயக முன்னணி 6 இடங் களிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 7 இடங்களிலும் முன்னணி வகித்தன. ஒன்றியப் பஞ்சாயத்துகளை பொறுத் தவரை மொத்தமுள்ள 152ல் இரு அணிகளுக்கும் கடும் இழு பறி நீடித் தது. 76 இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி குறைந்த வாக்குகளுடன் முதலி டம் பெற்றது. கிராமப் பஞ்சா யத்துகளை பொறுத்தவரை ஐக்கிய ஜனநாயக முன்னணி 490 இடங்களிலும், இடது ஜன நாயக முன்னணி 370 இடங்களி லும் முன்னிலை பெற்றன.

இந்தத் தேர்தலில் கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு, போன்ற இடதுசாரிகளின் வலுவான தலங்க ளில் இடது ஜனநாயக முன்னணி வேட் பாளர்கள் வழக்கம்போலவே பெருவாரியான வாக்கு வித்தி யாசத்தில் வெற்றிபெற்று செல் வாக்கு பாரம் பரியத்தை நிலை நாட்டினர். கூத்துப் பரம்பா, தலச்சேரி, தளிப்பரம்பா, பைய னூர் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை இடது ஜனநாயக முன்னணி ஈட்டியுள்ளது.

திருச்சூர் மாநகராட்சியில் தோல்வி அடைந்தாலும், இந்த மாவட்டத் தில் மொத்த முள்ள 6 நகராட்சிகளில் மூன்றில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. அதுமட் டுமின்றி திருச்சூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் குறிப்பி டத்தக்க வெற்றியை பெற்றுள் ளது.

கண்ணூர் நகராட்சி ஏற்கெ னவே ஐக்கிய ஜனநாயக முன் னணி வசம் இருந்தது. அதை மீண்டும் தக்க வைத்துக் கொண் டுள்ளது.

இந்தத் தேர்தலில் அனைத்து விதமான மதவாத சக்திகளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி யின் பின்னால் ஒன்றுதிரண்டு இருந்தன என்பதை கேரள மக் கள் கண்கூடாக கண்டனர். காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன் னணி, பல்வேறு இடங்களில் பாஜக வுடனும், எஸ்டிபிஐ போன்ற முஸ் லிம் மத அடிப்படைவாத அமைப்பு களுடனும் பகிரங்க மாக உடன்பாடு மேற்கொண் டது. கிறிஸ்தவ குருமார் கள் பகிரங்கமாக ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆத ரவாக பிரச்சாரம் செய்த னர். இந்தப் பிரச்சாரம் மத்திய கேரளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

SDPI ONDRUM MADAVADHA KATCHI KIDAIYATHU. CPM I VIDA JANANAAYAGATHUKKU KURAL KODUKKUM KATCHIYAHUM

விடுதலை சொன்னது…

இங்கு பிரச்சனை யாருடைய ஜனநாயகத்திற்கு போராடுகிறது என்பது தான்