ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எகிப்து மக்கள் சிந்திய ரத்தம் வீணாகிவிட்டதா?

கடந்த டிசம்பர் 20ம் நாளன்று எகிப்தியத் தலைநகரான கெய்ரோ நகரிலுள்ள சகல தெருக்களிலும் மக்கள், அதிலும் பெருவாரியான பெண்கள் அணிதிரண் டனர். அவர்கள் எகிப்திய ராணுவத்தினர் பெண்களை அடித்து இம்சித்த கொடு மைக்கு எதிராக ஆவேச முழக்கங்களை முழங்கினர். டிசம்பர் 16ம் நாளன்று ராணு வத்தினரின் தாக்குதல் காரணமாக 14பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ராணுவமானது சில பெண் களின் தலைமுடியை இழுத்தும், அவர் களது உள்ளாடைகளைக் களைந்தும் கோர நடனமாடினர். பல பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் கொடுமைகட்கு உட்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தினர், ராணுவத்தின் கட் டுப்பாடுகள் இல்லாத வகையில் ஒரு மக்கள் குடியரசு உருவாக்கப்பட வேண் டும் என்று கோரினர்.

ராணுவத்தின் கொடூர முகம்

தஹ்ரீர் மைதானத்தில் கூடி நின்ற பெண்களில் பலர் ராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட பலரை நைல் நதியில் மூழ்கடித்தனர். எம்மட்பெட் என்ற புகழ்மிக்க அறிவுஜீவியை ராணுவம் சுட்டுக்கொன்றது.

அரசாங்க ஊடகங்கள் மேற்படி செய்தி களைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன.

ஆனால் “அல் ஜசீரா” வின் நிருபர் மட்டும் ஒரு சில உண்மைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வருகிறார். ராணுவ வீரர் கள் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு தெருக்களில் கூடி நின்று, போராடி வரும் மக்கள் மீது மஸட்டோவ் குண்டுகளை வீசுகிறார்கள். மேலும் தீப்பந் தங்களையும் வீசியெறிகிறார்கள். வீட்டுச் சன்னல்களிலிருந்து தண்ணீர்ப் பீய்ச்சி யடிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தங்கள் பங்கிற்குச் சில கையெறி குண்டு களை வீசியதில் ஒரு கட்டிடத்தில் தீப் பிடித்துக் கொண்டது. எகிப்திய மக்கள் தங்கள் மனசாட்சியை ராணுவ சர்வாதி காரத்திடம் அடகு வைக்கத் தயாரா யில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களுடன் ஓரணியாக நின்றுகொண்டு போராடி வரு கிறார்கள்.

இத்தகைய களேபரங்கள் நாடெங் கிலும் அரங்கேறி வருகின்றதோர் சூழ் நிலையில், டிசம்பர் 21ம் நாளன்று இரண்டாவது கட்டத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த சதவீத வாக்காளர்களே வாக் களித்தனர். அதிலிருந்தே நாம் எகிப்திய மக்களின் கோபாவேசத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் மூன் றாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

பொங்கிவரும் அதிருப்தி உணர்வுகள்

போராடுகின்ற எகிப்திய மக்கள் ஜன நாயகத்துக்காகத் தாங்கள் நடத்தும் போராட் டமானது நீர்த்துப் போவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், எகிப்திய ஆளும் வட்டாரங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் எகிப்திய மண்ணில் உண்மை யானதோர் மக்களாட்சி மலர்வதற்கு அனு மதிக்க மாட்டார்கள்.

ஆட்சியாளர்களது எதேச்சதிகாரம், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் மேற்காசிய நாடு களிலும் வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மக் களுடைய கோபாக்னி சுடர்விட்டு எரி கிறது. குறிப்பாக மேற்கண்ட நாடுகளிலுள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்வில் உண்மையானதோர் பொருளாதார மறு மலர்ச்சி ஏற்பட்டிட வேண்டும் என்பதற் காக அணிதிரண்டு போராடி வருகிறார் கள். அதே சமயத்தில் புதிதாக அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள் ஜனநா யகக் கோட்பாடுகளை முடமாக்கிடுவதற் கான சதிச் செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேற்படி ஆசாமி கள் நாட்டில் உண்மையான மக்களாட்சி ஏற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

சமூகத்தில் தீவிரமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் நாட்டில் உண்மையான மக்களாட்சி மலர முடியும். அத்தகையதோர் சூழ்நிலையில் தான் பெரும்பான்மையான மக்கள் கை களில் ஆட்சியதிகாரம் கோலோச்சிட முடியும். அத்தகையதோர் சூழ்நிலையில் தான் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் எந்தவொரு இடைவெளியும் நிலவிடாது. அதனால்தான் சுயநலம் பிடித்த சுரண்டல் கும்பல்கள் தேர்தல், வாக்குரிமை, நாடாளுமன்ற ஜனநாயகம் என்றெல்லாம் பற்பல போலியான சொற்களைப் பயன் படுத்திக்கொண்டு தாங்கள் மக்களின் நலன்களுக்காகவே நாட்டை ஆண்டு வருவதாகச் செப்பித் திரிகிறார்கள்.

எது உண்மையான மக்களாட்சி

கியூபா நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் இணைந்துநின்று தீவிரமான பொருளாதாரத் திட்டங்களைச் செயல் படுத்திடுவதற்கு முன்பாக நல்லதோர் அரசியல் தீர்மானத்தைத் தயாரித்து அதை நாட்டு மக்கள் முன் சமர்ப்பித்தனர். நாட் டில் 2010, 2011ம் ஆண்டுகளில் 1 லட் சத்து 63 ஆயிரம் கலந்தாய்வுக் கூட்டங் கள் நடைபெற்றன. மேற்படி கூட்டங்களில்

90 லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். அத்தகைய கூட்டங்கள் மூலமாகக் கியூபா மக்களுடைய கருத்துக்கள் வழி மொழியப்பட்டன. மேற்படி கருத்துக் களின் அடிப்படையில் கியூபா அரசானது தனது செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன் றைய கியூபா நாடானது ஒரு உண்மை யான சோஷலிஸ்ட் நாடாக பரிணமித் துள்ளது என்றால் அதில் வியப்படை வதற்கு ஒன்றுமில்லை. “சகல அதிகாரங் களும் மக்களுக்கே” என்ற லெனினிசக் கோட்பாட்டை கியூபா அரசும் மக்களும் ஒருசேர செயல்படுத்தி வருவதால்தான் அதெல்லாம் சாத்தியமாயிற்று. இன்றைய எகிப்திய ஆட்சியாளர்கள் தங்கள் நாட் டில் ராணுவத்தின் கை மேலோங்கி நிற் பதைப் பற்றித் துளியளவு கூடக் கவலைப் படவில்லை. அத்தகையதோர் சூழ்நிலை யில்தான் தங்களுடைய சுரண்டல் சாம் ராஜ்யமானது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எகிப்திலுள்ள முஸ்லிம் அமைப்புக்களும் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு ஜால்ரா போட்டு வருகிறார்கள். அவைகள் முபாரக் காலத்திலும் அப்படித்தான் செயல்பட்டு வந்தன. நாட்டு மக்களைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு சிறிதளவு கூடக் கவலை கிடையாது. முபாரக் நாடாண்டபோது எகிப்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் தடை செய்யப் படவே இல்லை. அத்தகைய பிற் போக்குத்தனமான மதவாதிகள் எவரும் இன்றைக்குத் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கவில்லை.

எகிப்தியத் தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய துன்ப துயரங்களுக்கு ஓர் முடிவு காண்பதற்காகத் தீவிரமாகப் போராடி வருகிறது.

தஹ்ரீர் மைதானத்தில் அவர்கள் அணிதிரண்டு நடத்தி வரும் போராட்ட மானது நிச்சயமாக வெற்றிவாகை சூடிடும்.

“தஹ்ரீர்” என்ற சொல்லுக்கே விடு தலை என்று பொருள்.
-ஆர்.அருண்குமார்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி, தமிழில் : கே.அறம்

கருத்துகள் இல்லை: