போர் முனையில் இருந்து வந்த யாராய் இருந்தாலும் அவரிடம் பெத்யூனுடைய பெயரைச் சொன்னால் போதும். அவர் பெத்யூன் மேல் தனக்குள்ள மரி யாதையை வெளிப்படுத்தாமல் இருந்ததே இல்லை எனலாம் அவரது ஆன்மபலத்தினால் அசையாதவர்கள் யாரும் இல்லை என்று கண்டிப்பாகக் கூறலாம்”
இவை யாரோ ஒருவர் நார்மன் பெத்யூனைப் பற்றிக் கூறியவை அல்ல. மாசே-துங் சொன்னவை. இது உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல உண்மையின் தெறிப்பு.
“நார்மன் பெத்யூன் மூன்று நாடுகளில் வளர்ந்து பணிபுரிந்து, போரா டிய போராளி; முதலில் சொந்த நாடான கனடாவில் பின்னர் முற்போக்கு எண்ணமுள்ள அனைத்து நாட்டு மனிதர்களும் ஒன்றாய்க் கூடி நாஜிசத்திற்கும் பாசிசத்திற்கும் எதிராக மக்களின் முதல் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையை ஸ்பெயினில் நடத்தியபோது, கடைசியாக சீனா வில்; ஜப்பானிய பாசிஸ்டுகள் தாங் கள் கைப்பற்றிவிட்டதாக சந்தோஷ மாக நினைத்துக் கொண்டிருந்த சீனப்பகுதிகளை மீட்டு தேசிய விடு தலைக்காகவும் ஜனநாயகத்திற்காக வும் புதிய அடித்தளத்தை அமைத்த நமது கொரில்லாப் படைகளுக்கு பெத்யூன் உதவினார்....” என்கிறார் குங்-சிங்-லிங் (இவர் சன்யாட்ய் சென்னின் மனைவி)
பெத்யூன் வாழ்க்கை முழுவதுமே சுவையானது அர்ப்பணிப்பின் வாசம் மிக்கது. அந்த பேரேட்டிலிருந்து ஒரு இதழை இங்கு பார்ப்போம்.
பெத்யூன் ஒரு பெண்ணை தேவதை எனப் புகழ்ந்தார். ஏன்? எதற்காக?
கொரில்லா படைகளுடன் போர்க் களத்தில் மருத்துவ சேவை ஆற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் களைப்புடனும் பசியுடனும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் பெத்யூன். மருத்துவ உதவிப் பொருட் கள் வரும் வழி அனைத்தும் அடைபட்டு விட்டது. போரில் காயம்பட்டவர்க ளுக்கு உதவ போதுமான மருந்து இல்லை. எங்கும் காயமுற்றவர்களின் முனகலும் வேதனையும் கறுத்த அந்த இரவை மேலும் பயங்கரமாக்கியது. அவர் நெடிய யோசனைக்குப் பிறகு செல்வி ஹோவை சந்திப்பதென முடிவெடுத்தார். மறுநாள் புறப்பட்டு சென்றார்.
ஏற்கெனவே ஒரு மிஷனரி நிகழ் வில் அவளைச் சந்தித்த அனுபவம் உண்டு. அப்போது, எப்போது வேண்டு மானாலும் தன்னைச் சந்திக்க வரலாம் என்று அவள் அழைத்ததை நினைவில் நிறுத்தி இப்போது சென்றார். கத்லீன் என்பதே அவள் இயற்பெயர். கிராம மக்கள் அவளை அன்போடு ஹோ என்றழைத்தனர்.
தேவாலயத்தில் பிரார்த்தனையை அவள் முடித்து வரும் வரை பெத்யூன் காத்திருந்தார். அவரை பார்த்ததும் ஹோ மகிழ்ந்தார். மதிய உணவை தன்னோடு சாப்பிடும்படி அழைத் தார். அதுவரை பேசிக்கொண்டிருக் கலாம் என்றார். அவர்கள் உரையாடத் துவங்கினர்.
“கத்லீன்! நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீ ஏன் சீனா வுக்கு வந்தாய்?”
“நான் சேவை புரிவதற்காக வந் துள்ளேன். இங்கே எனக்குச் சமயப் பிரச்சாரப் பணி உள்ளது.”
“இல்லை... நான் கேட்டது அது வல்ல, நீ ஏன் ஒரு மிஷனரியானாய்? அதுவும் சீனாவில்?”
“ஏனெனில் நான் எனது வாழ் வைக் கிருத்தவத்தைப் பரப்ப இறை வனுக்காக அர்ப்பணிக்க விரும் பினேன். இங்கே நாம் காப்பாற்ற வேண்டிய ஆத்மாக்கள் நிறைய உள் ளன; என்னால் முடிந்த மிகச்சிறிய வழிகளேயானாலும், அதனைக்கூடக் கடவுளின் பெயரைச் சொல்லி உபயோகித்து மக்களுக்கு முக்தி கிடைக்க வகை செய்ய வேண்டும் என் பதற்காக நான் மிஷனில் சேர்ந்தேன்”
“எனக்குப் புரிகிறது. நானும் இவான்சலிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். அது உனக்கு ஒரு வகையில் ஆச்சரியமாக இருக்கும். நானே ஒரு வகையில் மிஷனரிதான். நீ இங்கே கடவுளுக்குச் சேவை செய்வதற் காக வந்ததாய்ச் சொன்னாய்; சொர்க் கத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டுள்ள மனித ஆத்மாக்களைக் காப்பாற்ற நீ விரும்புகிறாய். ஆனால், நான் அவர்களுக்கு இந்த பூமியி லுள்ள வாழ்க்கையையே காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமென விரும்புகி றேன். நாமிருவரும் பயணம் செல்லும் சாலையில் நம்மில் ஒருவர் மற்றவரை ஏதோ ஒரு புள்ளியில் விட்டு விட்டு விடைபெற்றுச் செல்லப் போகி றோம் என்பதை நீ ஒப்புக் கொள்ளா விட்டாலும், ஒன்று மட்டும் உறுதி; குறைந்தபட்சம் நாம் இருவரும் தற்போது சென்றுகொண்டிருக்கும் பாதை என்பது ஒரே திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பது தான்; குறைந்தபட்சம் நீ நம்பும் கடவு ளுக்கு நீ உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் நம்புவதற்கு நான் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தற்போது நான் சொல்லும் உண்மை உனக்குப்புரியும்”
இப்படி உரையாடல் தொடர்ந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடைசியாக விஷயத்திற்கு வந்தார் பெத்யூன், “கத் லீன்! நீ எவ்வித தடையும் இல்லாமல் பீக்கிங்கிற்கு எளிதாகச் சென்று திரும்ப முடியும். நான் நீ எங்கே போக வேண்டும் எனச் சொல்கிறேன். மிஷ னரி என்ற வகையில் நீ மருத்துவப் பொருட்களை வாங்கி இங்கே கொண்டு வருவது சட்டப்படி ஏற்றுக்கொள் ளப்பட்டது தான். ஆகவே நீ எனக்காக அதைச் செய்வாயா?”
இக்கேள்வியைக் கேட்டு கத்லீன் குழம்பினார். “தன்னால் யுத்தத்தில் பங் கெடுக்க முடியாது” என மறுதலித் தார்.
பெத்யூன் விடவில்லை பேசினார். “நான் ஒன்றும் யுத்தத்தில் பங்கெடுக் கச் சொல்லவில்லை. மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் சில காரியங் களைச் செய்யச் சொல்லிக் கேட்கி றேன்”
பேசிக்கொண்டிருக்கும் போது, தேநீர் வந்தது. இருவரும் அமைதியாக இருந்தனர். பின்னர் அவள் தொடர்ந் தாள், “சபாத் போன்ற (மத ரீதியாக முக்கிய நாள்) ஓய்வு நாளில் இப்படிப் பட்ட வார்த்தைகளைக் கேட்பது என்பது துன்பம் தருவதாக உள்ளது. நீங்கள் ரொம்ப கடினமான மனிதர். நாம் இங்கே கொஞ்ச நேரம் அமைதி யாக உட்கார்ந்திருப்போம். எவ்வித வாக்குவாதமும் வேண்டாம்” அவள் விருப்பப்படி அமைதிகாத்து உண வருந்தி அன்று பிரிந்து சென்றனர்.
அடுத்தநாள் பெத்யூனைப் பார்க்க அவள் கிராமத்திற்கு வந்தாள்.
“நான் பீக்கிங் போவது என்று முடிவு செய்துவிட்டேன்”
“இது ஆபத்தானது என்பது மறு படியும் உனக்குப் புரியவில்லையா? உனக்கும் சரி உன்மிஷனுக்கும் சரி” “ஆமாம், ஆனால் நீ செய்வதைக் காட்டிலும் இதுவொன்றும் ஆபத் தானது இல்லையே! இது கடவுளின் விருப்பம் என்று நான் இப்போது உறுதியாக நம்புகிறேன்”
அன்று தனது நாட்குறிப்பில் பெத்யூன் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“நான் ஒரு தேவதையைச் சந்தித்தேன். ஆங்கிலேயத் தேவாலய மிஷனைச் சார்ந்த கத்லீன்தான் அவள். அவள் பீக்கிங் போய் மருத்துவப் பொருட்களை வாங்கி தனது மிஷனுக்குக் கொண்டு வருவாள் அதாவது எங்களுக்கு... அவள் தேவதை இல்லை யெனில், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?”
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
அவள் ஒரு தேவதை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக