திங்கள், 1 நவம்பர், 2010

ஒபாமா வருகைக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு நவ.8 - நாடு தழுவிய எதிர்ப்பு நாள் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் அணிதிரள அழைப்பு



இந்திய மக்களின் அனைத்து நலன்களையும் சீர்குலைக்கும் விதத்தில், தனது ராணுவ வளை யத்திற்குள் கொண்டுவர நிர்ப்பந்தங்களைச் செலுத்தும் அமெரிக்க அரசின் ஜனாதிபதி பாரக் ஒபாமா வின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் அணி திர ளுமாறு இடதுசாரி கட்சி கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அமெரிக்க நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா, இந்தியாவிற்கு வருகிறார். முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதிபர் என்ற முறையிலும், நவீன பிற்போக்கு புஷ் ஆட்சி அகற்றப்பட்ட சூழ்நிலையிலும், ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர் பார்ப்புகள் நிலவின. ஆனால் அது நடக்கவில்லை.

அவரது வருகையின் போது 2010 நவம்பர் 8 அன்று நாடு தழுவிய அளவில் எதிர்ப்புநாள் கடைப்பிடிக்க இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. அமெரிக்கா, உலகளாவிய மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக,

நாடுகளின் உயர் தன்னாளுமை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை,இந்தியாவுடன் ராணு வத்தந்திரக் கூட்டணி வைத் திருக்கிறோம் என்ற பெயரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியா கடைப் பிடித்திட வேண்டும் என்று அரக்கத்தனமான முறையில் நிர்ப்பந்தித்துக் கொண்டி ருக்கிறது.

உலக அளவிலும், இந் தியாவிற்கு எதிராகவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் செயல்கள் குறித்து, இந்திய ஆட்சியாளர்கள் கொண்டிருக்கும் கருத்துக் களுக்கு முரணாக, இடது சாரிக் கட்சிகள் நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் கருத்துக்களை முன் வைத்திட விரும்புகிறோம்.


நவம்பர் 8 அன்று நடை பெறும் எதிர்ப்பு நாளன்று, இடதுசாரிக் கட்சிகள் கீழ்க் கண்ட பிரச்சனைகளைப் பிரதானமாக முன்வைக்கின் றன:

1. போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திட வும், தொழிற்சாலை வளா கத்தைச் சுத்தப்படுத்தித்தர வும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அமெரிக்கா, விசாரணையை எதிர்கொள் வதற்காக வாரன் ஆண்டர் சனை அனுப்பி வைத்திட வேண்டும்.

2. இந்தியாவின் அயல் துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலத னம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைய டிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப் பதை நிறுத்த வேண்டும்.

3. இந்தியாவை, அமெ ரிக்காவின் ராணுவப் பங்கா ளியாக மாற்ற வகை செய் யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். அமெ ரிக்க அணு உலை விநியோ கஸ்தர்கள் மீதான பொறுப் புக்களைக் கைவிட வேண் டும் என்று இந்தியாவை நிர்ப்பந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

4. இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீத முள்ள 50 ஆயிரம் படை யினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சுயேச்சையான மற்றும் நடுநிலை அரசு அமையக் கூடிய விதத்தில் அரசியல் தீர்வு காண வேண்டும். அமெரிக்க - நேட்டோ படையினரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

5. கியூபா மீதான பொரு ளாதாரத் தடையை நீக்க வேண்டும். பாலஸ்தீனம் மற் றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிர மிப்புகளை விட்டு வெளியே றும் வரை இஸ்ரேலுக்கு அளித்திடும் அனைத்து உத விகளையும் நிறுத்தவேண்டும்.

நவம்பர் 8 அன்று மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், ஆர்ப்பாட்டங்கள் - பேரணி கள் நடத்திடுமாறு அனைத் துக் கிளைகளையும் இடது சாரிக் கட்சிகள் அறைகூவி அழைக்கின்றன.

கருத்துகள் இல்லை: