புதன், 20 அக்டோபர், 2010

ஜனநாயகத்தை பின்பற்றுமா தொமுச?

கடந்த 19-09-2010 முதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது வேலைநிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் களில் பெரும்பகுதியினர் ஏஐடியுசி, சிஐ டியு, பாட்டாளி தொழிற்சங்கம், எல்.எல்.எப் ஆகிய சங்கங்களிலும், 5 சதமானத்திற் கும் குறைவாக தொமுச ஒப்பந்த தொழி லாளர் சங்கத்திலும் உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து ஒப்பந்த தொழிலா ளர் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்ட கூட்டுக்குழுவை அமைத்து போராடி வரு கின்றன. உறுப்பினர்களில் குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் ஆளும் கட்சியின் சங்கம் என்பதால் தொமுச ஒப் பந்த தொழிலாளர் சங்கத்திற்கே போராட் டக்குழுவினர் தலைமைப் பொறுப்பையும் கொடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 10.10.2010 அன்று நள்ளிரவு சென்னையில் தொமுச ஒப்பந்த தொழிலாளர் சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான முறையில் ஒப்பந்தம் ஏற்பட்டதாக பத்திரிகைச் செய்திகள் வெளிவந்தன.

ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தி 11.10.2010 அன்றைய முரசொலியிலும் வந்துள்ளது. ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தொமுச பேரவைத் தலைவர் செ.குப்புசாமி அவர் களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் முர சொலி கூறுகிறது. தொமுச என்பது திமுகவின் தொழிலாளர் அணி. எனவே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் திமுக தலைவர் கலைஞருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவருக்கும் தெரிந்தோ அல்லது முதல்வரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த ஒப்பந்தத்தில் செ. குப்புசாமியும் கையொப்பமிட்டிருப்பார். ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னால் போராட்டக்குழுவையோ, தொமுச உறுப்பினர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஜன நாயகத்தைக் கூட தொமுச தலைமை கடைப்பிடிக்கவில்லை. தொமுச தலை மை ஏற்படுத்திய ஒப்பந்தம் தொழிலாளர் களின் விருப்பத்திற்கு மாறாக அமைந்த தால் போராட்டம் இன்னும் தொடர்கிறது. தொமுச உறுப்பினர்கள் தங்களது உணர் வுகளுக்கு மதிப்பளிக்கவில்லையே என வருந்தி மனம் வெதும்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் வேலைநிறுத்தத்தின் காரண மாக நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16.10.2010 முரசொலியில் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என கேட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கலைஞர் கடிதம் எழுதியுள் ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

இக்கடிதத்தில் கலைஞர் “ஏறத்தாழ ஒருமாத காலமாக இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை அனேகமாக நீங்கள் அறிந் திருக்கக்கூடும். அவர்களது முக்கிய கோரிக்கைகள் என்பது ஊதிய உயர்வு, போனஸ் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்டவையாகும். தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் ஓரளவே பயன் கிட்டியுள்ளது” என கடிதம் தொடர் கிறது.

பிரதமருக்கு முதல்வர் கலைஞர் எழு திய கடிதத்திலிருந்து நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை கள் முடியவில்லை என்பதை அவரே ஏற் றுக்கொண்டுள்ளார். அதற்கு நன்றி. ஆனால் 10.10.2010 அன்று பேரவைத் தலைவர் செ.குப்புசாமி கையொப்பமிட்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் தொழி லாளர்களின் முக்கிய கோரிக்கைகள் முடியவில்லை என்பதையும் ஒப்பந்தத் தை உருவாக்கி பிரச்சனைகள் அனைத் தும் சுமூகமாக முடிந்ததாகக் கூறியது தவறு என்றும் இவர்கள் ஏற்றுக் கொள் கிறார்களா? ஒருவேளை கையெழுத்து போடுவதற்கு முன் போராட்டக் களத்தில் நிற்கும் இதர தொழிற்சங்கங்களையோ, தொமுச உறுப்பினர்களையோ கலந்து பேசியிருந்தால் இந்நிலையை தவிர்த் திருக்கலாமல்லவா? தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களின் நலன்களுக் காக, உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்படுகின்ற தலைமை என்கிற நிலையை தொமுச மறந்ததால் ஏற்பட்ட விபரீதம். இச்செயல், தொமுச தொழிற்சங்க ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதைத்தானே வெளிப் படுத்துகிறது.

கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் சற்றும் தளர்வில்லாமல் நடப்பதும் அதன் காரணமாக உற்பத்தி கடுமையாக பாதித் துள்ளதாலுந்தான் தமிழக முதல்வர் இப்போது இவர்களது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்துள்ளார். ஆனால் திமுகவின் தொழிலாளர் அணியின் மாநி லத் தலைவர் செ.குப்புசாமி, முக்கியமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது ஏன் இந்த நியாயத்தை உணர திமுக தலைமை முன்வரவில்லை. தொழிலாளர் கள் ஏற்றுக்கொண்டால் நல்லது என கருதினார்களா?

தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், கோரிக்கைகளின் நியாயத்தை உணராமல், தொழிற்சங்கத் தை ஜனநாயக முறையில் நடத்தாமல், தான் செய்வதுதான் சரி, இதை அனைவ ரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தானடித்த மூப்பாக செயல்பட்டால் இப் படி மூக்கடிபடுவது தவிர்க்க முடியாத தாகிவிடும். இதுதான் இன்றைய தமிழகத் தின் நிலை.

தொமுச நெய்வேலியில் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனமான நோக்கியா நிறுவனத்திலும் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஏற்படுத் திய ஒப்பந்தத்தை இன்றுவரை அத் தொழிலாளர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற் றும் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு விரோதமான ஒப்பந்தத்தை இதே தொமுச ஏற்படுத்தியதால்தான் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தலைமை தாங்கும் தொழிற்சங்க தலைவர்கள் மீது பொய் வழக்கு, சிறையில் அடைப்பு, காவல் துறையை ஏவிவிட்டு போராட்டத்தை நசுக்கப் பார்ப்பது, இவைகள் பிரச்ச னைக்கு தீர்வாகாது. மாறாக மெஜாரிட்டி தொழிலாளர்கள் கொண்ட சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஏற்படு கின்ற ஒப்பந்தம் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உணர்வுகளை உள்ளடக்கிய தும், தொழிலாளர்களின் ஒப்புதலோடு ஒப்பந்தத்தை உருவாக்குவதுந்தான் தொழிற்சங்க ஜனநாயகத்தை பாதுகாப் பதாகும். இது தொமுசவிற்கு தெரியாத தல்ல. ஆளுங்கட்சி என்கிற காரணத் தால் ஜனநாயகத்தை தூக்கி எறிந்து விட்டு அடக்குமுறை தர்பார் ஏவிவிட்டு, போராட்டத்தை தலைமை தாங்கும் தலைவர்கள் மீது பொய்வழக்கு புனைந்து, தொழிலாளர்களை நசுக்கிவிடலாம் என் கிற கனவு பலிக்காது என்பதுதான் நெய் வேலி போராட்டம், அதுதான் பாக்ஸ்கான் போராட்டம். இனியாவது தொமுச தொழிற்சங்க ஜனநாயகத்தை மதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-ஜி.சுகுமாறன்

கட்டுரையாளர் , சிஐடியு மாநிலச் செயலாளர்

கருத்துகள் இல்லை: