திங்கள், 28 ஜூன், 2010

கல்வி ஊழலுக்கு முடிவு கட்டுக! அந்நியப் பல்கலை. மசோதாவை கைவிடுக! கல்வி பாதுகாப்பு மாநாடு வலியுறுத்தல் !

கல்வித்துறையில் நடக்கும் ஊழல் களுக்கு முடிவு கட்ட வேண்டும் என் றும், அந்நிய கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கல்வி பாதுகாப்பு மாநாடு வலியுறுத்தியது.

ஞாயிறன்று நடைபெற்ற இம்மா நாட்டில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற நாள் முதல் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள் கைகளைத் வேகவேகமாக அமலாக்கி வருகிறது. அந்நிய நேரடி முதலீட்டை காப்பீட்டுத் துறையில், வங்கித் துறையில் வலியக் கொணர்ந்ததோடு நில்லாமல், கல்வித்துறையிலும் அந்நியக் கல்வி நிறுவனங்கள் ஒழுங்காற்று மசோதா-2010 என்ற பெயரில் உயர்கல்வித் துறையினை - அந்நிய முதலீட்டுக்கு நேரடியாக கல்விக் களத்தை அகலத் திறந்து விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

2007ம் ஆண்டு அந்நியக் கல்வி நிறு வனங்கள் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப் படுத்திய போது, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுக நிலையிலேயே எதிர்த்தது. அதனால் அம்மசோதா வாபஸ் பெறப்பட்டது.

அந்நியக் கல்வி நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் நுழையும் போது, போட்டி காரணமாக இந்தியக் கல்வி நிறுவனங்கள் போட்டி மனப்பான் மையோடு தரத்தை உயர்த்த முயற் சிக்கும் எனவும், உயர்கல்வியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அந்நியக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் காரணங்கள் முன்வைக்கப்படு கின்றன.

அந்நியப் பல்கலைக் கழகங்களை ஒழுங்காற்றும் விதிமுறைகளில் முக் கியமானது, அந்நியக் கல்வி நிறு வனங்கள் தாமடையும் இலாபம் அனைத்தையும் இங்குள்ள நிறுவனங் களிலேயே மறு முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். எனவே, நல்ல தரம் வாய்ந்த நிறுவனங்கள் இங்கு வரத் தயக்கம் காட்ட வாய்ப்புள்ளது.

தரம் குறைந்த நிறுவனங்கள் களத்தில் புகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனையே மையப் பொரு ளாக வைத்து விவாதித்து, இலாபத் தைத் தம் நாட்டிற்கு எடுத்துச் செல்ல லாம் என விதியினைத் தளர்த்தவும் ழுஹகூளு உதவி செய்யக் கூடிய அபாயம் உள்ளது.

உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற நோக்கம் உண்மையிலேயே மத்திய அரசுக்கு இருக்குமேயானால், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை யை உயர்த்த முடியும்.

மேலும், நாட்டில் செயல்படும், யுஜிசி, ஏஐசிடிஇ, எம்.சி.ஐ., ஆகிய நிறு வனங்களைத் திறமையாக செயல்பட வைப்பதற்குப் பதிலாக, அவற்றி லுள்ள ஊழலைப் போக்குவதற்குப் பதிலாக, ஊழல்பேர் வழிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, உயர்கல்வியை மத்தியத்துவப்படுத்தும் முகமாக ‘உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கான தேசியக்குழு மசோதா-2010’ என்ற வரைவு மசோதாவை மத் திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சூஊழநுசு என்பது 7 நபர்கள் கொண்ட குழுவாக முன்வைக்கப்படுகிறது. கல்வியை மத்தியத்துவப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் சூஊழநுசு அனுமதி யில்லாமல் பல்கலைக் கழகங்களைத் துவக்க இயலாது எனவும், பல்கலைக் கழகத் துணை வேந்தர்களை சூஊழநுசு / ழநுசு அனுமதியில்லாமல் மாநில அரசுகள் நியமிக்க முடியாது எனவும் மத்திய அரசு மசோதா மூலம் தெரி வித்துள்ளது.

மத்தியக் கல்விக் கொள்கையே சூஊழநுசு / ழநுசு-ஐ வழி நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்விக் கொள்கை உருவாக்கத்தின் போது நாடாளுமன்ற, சட்டமன்ற மற் றும் பிற மக்கள் பிரதிநிதிகளின் பங் கேற்பு உதாசீனப்படுத்தப்படுகிறது. இப்போக்கு சூஊழநுசு / ழநுசு ஊழல் அமைப்பாக மாறும் அபாயத்திற்கு இட்டுச் செல்லும்.

சமீபத்தில் மருத்துவக் கல்லூரி கள், நிறுவனங்கள் தொடர்பான ஊழலில் சிக்கிய திருவாளர் கேத்தன் தேசாய் பற்றி எவரும் மறந்திருக்க முடி யாது. கோடிக் கணக்கில் பணமும், கிலோக் கணக்கில் தங்கமும் உயர்நிறு வனப் பொறுப்பாளர் ஒருவரால் பதுக்கி வைக்க முடியும் என்பது நம்மையெல்லாம் பதற வைக்கிறது.

இத்தகைய உயர் அமைப்புகள் ஊழல் அமைப்புகளாக மாறுகின்ற அதே நேரத்தில், கல்வி வணிகமயமாக் கப்படுவதும் வெட்ட வெளிச்சமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உயர்கல்வி தொடர்பான மத்திய அரசின் அணுகுமுறை அரசின் வர்க் கத் தன்மையைத் தெளிவாகக் காட்டு கிறது. ஜனநாயகத் தன்மையை பின் னுக்குத் தள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐஐ அரசின் போக்கிற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம்.

* கல்விச் சீர்திருத்தத்தின் மையமாக அமைய வேண்டிய விஷயம் சமூக நீதியாகும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டவர்க ளுக்கும் இதுகாறும் மறுக்கப் பட்டு வந்த கல்வி - இன்று நனவாக வேண்டும்.

* தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைகளை கட் டுப்படுத்தி அனைவருக்கும் சகாய செலவில் கல்வி கிடைத்திட உத்தர வாதப்படுத்திட வேண்டும்.

* ¨கல்வியை மத்தியத்துவப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். உயர் கல்வி மற்றும் ஆய்வு வரைவு மசோதா-2010-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

* யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ, எம்.சி.ஐ., ஆகிய நிறுவனங்களைப் பலப் படுத்த வேண்டும். இவற்றில் நில வும் ஊழலைக் களைய வேண்டும். ஊழல் பேர்வழிகள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள் ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும்.

* நாட்டின் இறையாண்மைக்குச் சவாலாக வருகின்ற அந்நியக் கல்வி நிறுவனங்கள் ஒழுங்காற்றும் மசோதா-2010-ஐ உடனடியாகக் கைவிட வேண்டும்.

* உயர்கல்வி பெறும் வாய்ப்பினை ஏழை, எளிய மக்களுக்கும் அளிக் கும் வகையில் உயர்கல்விக்கென நிதி ஒதுக்கீட்டினை 6 சதவிகித மாக உயர்த்த வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

கருத்துகள் இல்லை: