வெள்ளி, 22 அக்டோபர், 2010

உண்மையற்ற தகவல்கள் அபாயகரமானவை!

டி.ஞானையா

“தி இந்துயங் ஓர்ல்ட்” வார இதழில் வந்தே மாதரம் பாடல் பற்றி உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்கள் பிஞ்சுள்ளங் களுக்குத் தரப்பட்டுள்ளன. துரதிருஷ்டம், இவை உண்மைகள் என்று நம்பி ஒரு தமிழ் தின இதழிலும் மொழியாக்கம் வெளியிடப் பட்டுள்ளது. லட்சக்கணக்கான விடுதலை இயக்கப் போராளிகள் வந்தே மாதரம் கோஷத் தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உத் வேகம் பெற்றனர் என்பது உண்மைதான். ஆயினும் இப்படி உணர்ச்சிவசப்பட்டவர்கள் இந்துக்கள்தான். பெரும்பாலான முஸ்லிம் விடுதலைப் போராளிகள் இப்படி உத்வேகம் பெறவில்லை. இதைப் பாட மறுத்தனர். அறியாமையால் சிலர் பாடி இருக்கலாம். இதுவும் உண்மைதான்.

‘யங் ஓர்ல்ட்’ கட்டுரையில் “1876ல் தேச பக்த எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி வரைந்த பாடலின் முதலாவது வரியாகும்” எனக் குறிப்பிடுகின்றது. “தேசபக்த எழுத் தாளர்” என்கின்ற அடைமொழி உண்மை யல்லவே அல்ல. மேலும் “பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களை எதிர்த்து ஓர் இயக்கத்திற்கு தலைமை தாங்கிய ஒரு சந்நியாசி குழு” என்று சொல்லப்படுவது முழுமையான பொய்.

வேறுசில தவறான உண்மையற்ற விவரங் கள் இடம்பெற்றுள்ளன. சில முக்கிய உண் மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இன்று இந்திய அரசியல் சட்டமே இந்துத்துவ வாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ள ஆபத்து மேலோங்கி வளர்ந்துள்ள கட்டத்தில் நமது வாசகர்களுக்கு மறுக்க முடியாத பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கொடுப்பது நமது கடமை.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற பிரபல வங்காளி நாவலாசிரியர் ஓர் “தேசபக்த” எழுத் தாளர் அல்ல. பங்கிம் சந்தர் தீவிர சனாதன பிராமணர். பிரிட்டிஷ் அரசாங்கப் பணியில் டெபுடி கலெக்டராக பணியாற்றிய பிரிட்டிஷ் அரசு அதிகாரி. ஆனந்தமடம் நாவல் பிரிட் டிஷ் எதிர்ப்பு நாவல் அல்ல. முஸ்லிம் எதிர்ப் பில் விஷம் கக்கும் வெறியூட்டும் நாவல். இந்நாவல் வெளிவந்த பிறகு பிரிட்டிஷ் அர சாங்கம் இவருக்கு பதவி உயர்வு கொடுத்து வங்கம் அசாம் மாகாணத்தில் உதவி நிதித் துறை செயலராக (ஹளளளைவயவே குiயேnஉயைட ளுநஉசநவயசல) நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்! இந்தப் பரிசு தேசபக்த குணக்கலன் இல்லையல்லவா? ஆனந்தமடம் என்ற நாவலில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு தேவை என்று (சான்தன்) சந்நியாசி குழுவிற்கு இறைவாக்கு கூறப்பட்டதாம். இந்த அருள் வாக்காவது “ஆங்கிலேயர் இந்து மதத்திற்கு மரியாதை தருவார்கள். என்றென்றும் நிலைத்து நிற்கும் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் வலுவூட்டும்” என்றும் “இந்துக்களுக்கு தங்களது தர்மத்தின் வீச்சைப் பூர்த்தி செய்ய ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் காலம் தேவை” என்றும் அருள்வாக்கு கூறியதாம்! சான்தன்களின் சனாதன பிராமணத் தலைவன் சத்தியானந்தா கண்ட தெய்வீக காட்சியில் ஒரு “பிறாமண்ட சக்தி, அற்புத சுக மளிப்பவன்” முஸ்லிம் ஆதிக்கம் ஒழிக்கப்பட் டதற்கு வாழ்த்துக்கூறி ஆசீர்வதித்ததாம்.

சான்தன்கள் முஸ்லிம் ஒழிப்பு கலவரங் களில், “கொல்லுங்கள், முஸ்லிம் பேய்களைக் கொல்லுங்கள், வந்தே மாதரம்” என்று ஓங்கி உரத்த குரலில் கோஷம் எழுப்பி தங்களுக்கு உத்வேகமூட்டிக் கொண்டனராம்.

“உடன் பிறப்புகளே! அவர்களுடைய மசூதிகளைத் தகர்த்துவிட்டு ராமபிரானுக்கு கோயில் எழுப்பும் நாள் நிச்சயமாக வரும் என்றனராம். “பின்னிருந்தும், முன்னிருந்தும் அவர்களைக் கசக்கி பிழிந்து எறிவோம். காற்றோடு போகட்டும். இந்த தீட்டுப்பட்டவர் களை ஆற்றில் தூக்கி எறிவோம். அவர்களின் பன்றித் தொழுவங்களான குடிசைகளை எரிப்போம். அவர்களின் கட்டடங்களை தரைமட்டமாக்கிப் புழுதியாக்குவோம். நமது தாய்மண்ணுக்கு ஏற்பட்ட தீட்டைப் போக்கி தூய்மைப்படுத்துவோம்” என்றெல்லாம் அறைகூவல் விடுத்து வெறியூட்டினராம்.

இவை நாவலில் வரும் வீர வசனங்கள்! சந்நியாசி சான்தன்கள், அணிகள் அமைத்துக் கொண்டு இரவு நேரங்களில் முஸ்லிம் வீடுகளுக்கு தீ வைத்தனர். கொள்ளையடித் தனர். பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சிலரின் தாடி சிரைக்கப்பட்டது. (ஆனந்த மடம் . பக். 768)

இக்கட்டத்தில்தான் வந்தேமாதரம் பாடல் பிறக்கின்றது. பங்கிம் சந்தர் புனைந்த வந்தே மாதரம் இங்குதான் முதலில் பாடப்படுகின்றது. பிரிட்டிஷ் எதிர்ப்பு கிஞ்சித்தும் கிடையாது.

“இந்துமதம் தன் ஒளிமிகு சக்தியை மீண்டும் பெறுவதற்காக இந்தியாவை பிரிட்டி ஷார் ஆட்சிபுரிவது கட்டாயமாகின்றது. அவர் கள் தூய்மையான ஆரியர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடனிருப்பர்” என்று நாவலின் கதாநாயகன் சத்தியானந்தா வாயிலாக தேசபக்த எழுத்தாளர் பங்கிம் சந்தர் அறிவுரை கூறுகிறார். பிரிட்டிஷ் அரசிட மிருந்து பதவி உயர்வும் பெறுகின்றார்!

ஆனால் நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராசாராம் மோகன்ராய், பிரம்மசமாஜத் தலைவர் தேவேந்திரநாத் தாகூர் (கவிஞரின் தந்தை), பிரபல தத்துவ அறிஞர் கேசவ் சந்திரசென் ஆகிய மூன்று சம காலத்து வங்காள பேரறிஞர்கள் இப்பாட லாலும், இந்நாவலாலும் அதிர்ச்சியடைந்தனர். ஆனந்தமடம் என்ற இந்துமதவெறி நாவலுக்கு எதிராக நோபல் பரிசுப்புகழ் கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் ‘கரே பைரே’ (ழுாயசந க்ஷயசைந) என்ற நாவலை எழுதினார். இதில் வரும் விடுதலைப் போராளி கதாநாயகன் நிகிலேஷ் நாட்டை ஒரு தெய்வீக தாயாக வழிபடவோ, புகழ்பாடவோ மறுக்கின்றான். இந்நாட்டைப் பற்றி நினைக் கும் பொழுது கீழ்சாதி விவசாயிகளையும் சுரண்டப்படுகின்ற உழைப்பாளி மக்களையும் நினைத்துப் பார்க்கிறான். பக்தி என்பது இம் மக்களுக்கான சமூகநீதி என்றும் இவர்களின் நலன்களை புறக்கணித்து விட முடியாது என்றும் ஆணித்தரமாக வாதிடுகின்றான்.

1937ல் தான் ஆனந்தமடம் நாவலைப்பற்றி ஜவஹர்லால் நேருவும், மகாத்மா காந்தியும் தெரிந்து கொண்டனர். அதுவும் முஸ்லிம்கள் இப்பாடலைப் பாட மறுத்து வந்ததால் இந்நாவ லின் ஆங்கில மொழி பெயர்ப்பை கண்ணுற் றனர். மிகவும் கலக்கமடைந்தனர். ஆனால் அதற்குள் இப்பாடல் கோடானுகோடி இந்து விடுதலைப் போராளிகளின் புனித கோஷ மாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்க மாக உள்ளங்களில் இடம்பிடித்துவிட்டது. ஆயினும், இப்பாடலுக்கு மாற்றாக தாகூரின் கெக்யூலர் ஜனகணமண பாடலை நாட்டுப் பண் என்றும், வந்தே மாதரம் தேசிய பாடல் என்றும் சமரசம் செய்து கொண்டு காங்கிரஸ் இப்பாடலின் முதல் இரண்டு பொதுவான அடிகளை மட்டும் அங்கீகரித்தது. இதர அடி களை ஒதுக்கிவிட முடிவெடுத்தது. இப் பாடலைப் பாட ஒருவரும் கட்டாயப்படுத்தப் படக் கூடாது என்றும் முடிவு செய்தனர். 1947ல் இது இறுதி ஒப்புதல் பெற்ற பிறகு காந்திஜி “தேசபக்த” பங்கிம் சந்தர் நாவலை முழுமையாகப் படித்துவிட்டு, “முஸ்லிம்களை கோபமூட்டவும், அவமானப் படுத்தவும் இதை ஒருபோதும் பாடக்கூடாது” என்றார் நாடு விடுதலைக்குப் பிறகு நடை பெற்ற ஒவ்வொரு இந்து-முஸ்லிம் கலவரத்திலும் இந்து வகுப்பு வாத வெறியர்கள், வந்தே மாதரம் என்றும், முஸ்லிம் கும்பல்கள் அல்லாஹூ அக்பர் என் றும் கோஷமிடுவது முக்கிய அம்சமாகிவிட் டது. 2002 குஜராத் படுகொலையிலும், அயோத்தி மசூதி இடிப்பிலும் இக்கோஷம் தான் முழங்கப்பட்டது!

விடுதலைப்போராட்டங்களில் பங்கேற் காத ஆர். எஸ்.எஸ். அமைப்புகள் இப்பாட லைப் புனிதமாகக் கருதுகின்றன. 1998ல் இந்துத்துவ பாஜக தில்லி ஆட்சியை கைப் பற்றியபின், மத்திய மனிதவள அமைச்சர், ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் முரளிமனோகர் ஜோஷி, மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு ஒன்றைக்கூட்டி இப்பாடலை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் முன்மொழிந்தார். 3, 4, பாஜக மாநிலங்கள் தவிர்த்து அறுதி பெரும்பான்மை மாநிலங்கள் நிராகரித்தன. தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கல்வி அமைச்சர் அன்பழகன் ஆணித்தரமாக எதிர்த்தார்.

பங்கிம் சந்தரின் மூலப்பாடலில் ஏழு கோடி வங்காள மக்கள் என்றுதான் குறிப்பிடப் படுகின்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதை ஏற்றுக்கொண்ட பொழுது முப்பது கோடி இந் திய மக்கள் என்று மாற்றிக் கொண்டது!

இப்பாடலில் “வந்தே மாதரம்” என்றால், “தாயே உன்னை வழிபடுகின்றேன்” என்று பொருள். தாய் யார்? எந்தத் தாய் என்று இப்பாடலின் ஏழாவது அடிகளில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. “நீயே துர்கா, நீயே தாமரை மலரின் சிம்மாசனத்தில் வீற்றிருக் கும் லட்சுமி, நீயே ராணி, நீயே அம்மன்” என் றெல்லாம் தெளிவாக அடையாளப்படுத்தப் படுகின்றது. (தாமரை, பாஜகவின் தேர்தல் சின்னமாக்கப்பட்டது)

“எதிரிகளை அடித்து வீழ்த்தும் பளிச் சிடும் வாள்கள் கொண்டதாய்” எனப் புகழப் படுகின்றது. எதிரிகள் யார் என்பது தெளிவு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமா, முஸ்லிம்களா? உண்மையான தேசபக்த கீதம் என்பது பிரபல உருதுக் கவிஞர், உலகப்புகழ் ஈட்டிய முகமது இக்பால் புனைந்த “ஸாரே ஜஹான்ஸே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா” இது ஒரு செக்யூலர் பாடல். இதில் எந்த கடவுளும் வணங்கப்படவில்லை, நாட்டையும் நாட்டின் பெருமையையும் நாட்டுப் பற்றையும் பிரதானப் படுத்தும் எழில்நயமிகு பாடல். இதற்குப் பதி லாக வந்தேமாதரம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாடு விடுதலை அடையும் பொழுது இந் தியாவை மட்டுமல்ல வங்காளத்தையும் இரண்டாகப் பிரித்துவிட இதுவும் ஒரு காரண மாயிற்று. மதவாதம் நாட்டை சீர்குலைக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஜனகணமண, ஸாரே ஜஹான்ஸே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா (அனைத்து உலகத்தை விட மகத்தானது இந்தியா), ஜெய்ஹிந்த், இந்துஸ்தான் ஜிந்தாபாத் போன்ற செக்யூலர் தேசபக்த முழக்கங்களை உணர்ச்சிபூர்வமாக எழுப்புகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ தேசபக் தர்கள், வந்தே மாதரம் என்ற இந்துத்துவ கீதத்தை பாடமாட்டார்கள். செக்யூலர் அர சியல் சட்டத்தை ஆதரிக்கும் உண்மையான செக்யூலரிஸ்டுகள் இதைப் பாட இயலாது.

கருத்துகள் இல்லை: