புதன், 22 டிசம்பர், 2010

இஸ்ரேலை ஏன் எதிர்க்கவில்லை? அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுக்கு துருக்கி கேள்வி


நிவாரணப் பொருட்க ளோடு பாலஸ்தீனத்திற்கு சென்றவர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேலை எதிர்த்து ஏன் நிற்கவில்லை என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு துருக்கியின் பிரதமர் ரிசெப் தய்யிப் எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேலின் கடுமையான முற்றுகையால் காசாப் பகுதியில் வாழும் 15 லட்சம் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் துயரத்தில் உள்ளனர். அவர் களுக்கு நிவாரணம் வழங் கும் வகையில் ஃபுளோட் டில்லா என்ற கப்பல் அத்தி யாவசியப் பொருட்களு டன் சென்றது. மே மாதம் 31 ஆம் தேதியன்று இந்தக்கப் பலைச் சுற்றி வளைத்த இஸ் ரேலிய ராணுவத்தினர், அதில் பயணம் செய்தவர் களைத் தாக்கினர். துருக்கி யைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்த இடம் சர்வதேச கடற்பகுதியாகும். சட்டவிரோதமாக இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவிக்க வில்லை. சிரியாவின் அரபு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் எர்டோகன் இதைத்தான் குறை கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் மேலும் அவர், அடிப்படையான சுதந்திரம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றின் முன்னோடிகள் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய யூனியன் ஆகிய இரண் டிடமிருந்து இத்தகைய நிலைபாட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளை இஸ்ரேல் மதிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இது ஐக்கிய நாடு கள் சபையின் சுயேச்சை யான விசாரணைக்குழு வால் உறுதிப்படுத்தப்பட் டிருக்கிறது. துருக்கி மக்க ளைக் கொன்றதற்காக இஸ் ரேல் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.

கருத்துகள் இல்லை: