பிரபாத் பட்நாயக்
தமிழில்- அசோகன் முத்துசாமி
சமீபத்திய இந்திய தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே அநேகமாக மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இடது சாரிகளுக்கு ஓரளவு தோல்வி ஏற்படும் என் பதைப் போலவே, பாஜகவின் தோல்வியும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான்; கருத்து கணிப்பாளர்கள் தவிர. ஆனால், இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியின் உண்மையான அளவுநிலை தடுமாறச் செய்கி றது. அவர்களின் வாக்குவீதம் ஓரளவு மட்டுமே குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வங்கத்தில் மொத்தமுள்ள தொகுதிக ளில் மூன்றில் ஒருபங்கு சட்டமன்றத் தொகுதி களில் மட்டுமே அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. கேரளத்தில் நிலைமை இன்னும் மோசம். இது ஒரு கடும் பின்னடைவாகும். தற் போது மத்தியில் அதிகாரத்தைப் பிடிக்கும் போட்டியில் இடதுசாரிகள் இல்லை என்ற போதும்,அவர்களின் தோல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் ஒரு நவீன, மதச் சார்பற்ற, ஜனநாயக சமுதாயத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் முக்கியமான உந்து சக்தியாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டுமே அத்தகையதொரு சக்தியாக இருக்கவில்லை. ஏராளமான முற்போக்கான சமூ
க,அரசியல் அமைப்புகளும் அத்தகைய பாத்திரத்தை வகித்து வருகின்றன. ஆனால் இடதுசாரிகள் ஒரு முக்கிய அம்சத்தில் அவற்றிடமிருந்து வேறுபடுகின்றனர்.
மற்றவர்களிடமில்லாத தேர்தல் பலம் இடதுசாரிகளிடம் இருக்கிறது. அத்தகைய பலம் தேவையானதும் ஆகும். ஆதலால், அந்த பலத்திற்கு ஏற்படும் பாதிப்பு எதுவும் இந்தியாவில் ஜனநாயகப்புரட்சியின் முன் னேற்றத்திற்கு கேடு விளைவிக்கும்.
ஊடகங்களில் இடதுசாரிகளின் தோல்வி குறித்து ஏராளமான ஆய்வுகளும், இழந்ததை மீட்பதற்கு அவர் கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலா னவை இடதுசாரிகள் 'ஏகாதிபத்தியம்'குறித்த தங்களது அச்சத்தை கைவிடவேண்டும் என்கிற ஒரு விஷயத்திலேயே கவனம் செலுத் துகின்றன. மேக்நாத் தேசாய் பிரபு 'தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டது போல இக்கருத்து எப்போதாவது நேரடியாக வெளியிடப்படுகிறது. ஆனால் பொதுவாக மறைமுகமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற் றிருக்கக் கூடாது என்று சிலசமயம் கூறப்படு கிறது. ஆனால், இந்தியா அமெரிக்க ஏகாதிபத் தியத்துடன் ஒரு ராணுவ கேந்
திரக் கூட்டு ஏற் படுத்திக் கொள்ளக்கூடும் என்கிற பிரச்சனை யின் அடிப்படையிலேயே ஆதரவை அவர்கள் விலக்கிக் கொண்டனர் என்பதால், இந்த வாதம் ஏகாதிபத்திய அபாயத்தை இடதுசாரிகள் மிகைப்படுத்துகிறார்கள் என்று கூறுவதற்குச் சமமாகும்.
சிலசமயம் இந்த தீர்ப்பு 'வளர்ச்சிக்கு' ஆதரவாக மக்கள் அளித்தது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து, இடது சாரிகளின் தோல்விக்குக் காரணம் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறாதுதான் என்று அனுமானிக்கப் படலாம். (வளர்ச்சி என்றால் புதிய தாராளமய கொள்கையின் அடிப்படையிலான வளர்ச்சி என்று பொருள்; இதற்காக பல்வேறு மாநிலங் கள் பெரும் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைப் பெறுவதற்காக ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொள்கின் றன). இடதுசாரிகளின் புதிய பொருளாதாரக் கொள்கை எதிர்ப்பும், அவர்களின் ஏகாதிபத் திய எதிர்ப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தாகும். அதுவே அவர்கள் தேவையற்றவர்க ளாக ஆனார்கள், அதனால்தான் தோற்றார் கள் என்று கூறுவதற்குச் சமமாகும்.
சிலசமயம் நிலையான, மதச்சார்பற்ற அரசுக்கு ஆதரவாக அலை வீசியது என்றும், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குச் சாதக மானது என்றும், முன்னர் பாஜகவுடன் கூட் டணி வைத்துக் கொண்டிருந்த கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியை இடதுசாரிகள் அமைத்ததால் அது அவர்களுக்குப் பாதக மாக ஆனது என்றும் வாதிடப்படுகிறது.
மூன் றாவது அணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டி யிட்டதற்குப் பதிலாக இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும் என்பது இந்த வாதத்திலிருந்து பெறப்படும் முடிவாக இருந் தால், அது குறைந்தபட்சம் இடதுசாரிகளின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணக்கமான தாக இருந்திருக்கும் (அது அவர்களின் தேர்தல் வெற்றி தோல்வியில் பெரும் வித்தியா சத்தை ஏற்படுத்தியிருக்காது ஏற்படுத்தியி ருக்கப் போவதில்லை என்றபோதும்). ஆனால் பொதுவாக அந்த அலையின் மீது பயணிப்ப வர்களுடன் மட்டுமே இடதுசாரிகள் எப்போதும் கூட்டணி வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இவ்வாதத்திலிருந்து பெறப்படும் முடி வாக இருந்தால், அது இடதுசாரிகள் ஏகாதிபத் திய எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நிரந்தர உறுப்பாக ஆகியிருக்க வேண்டும் என்று கூறுவதற்குச் சமமாகும். சுருக்கமாகச் சொன்னால்,இடது சாரிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனை களில் பொதுவானது என்னவென்றால் அவர் கள் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிட வேண்டும் என்பதாகும்.
இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உலகம் முழுவ தும் உலகமயமாக்கலின் எதிர்மறை விளைவு களால் இன்னும் பாதிக்கப்படாமல் தப்பியிருக் கும் நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தினர் உள்ள நாடுகளில் மாணவர்கள், படித்த இளைஞர்
கள்,அறிவுஜீவிகள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு மாறாக, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், மதவாத எதேச்சாதிகாரம், வகுப்புவாத பாசிசம் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான நவீன சமுதாயத்தை உருவாக் கும் வழிமுறையாக ஏகாதிபத்திய உலகத்து டன் நெருக்கமாக ஒன்றிணைய வேண்டும் என்ற விருப்பம்கூட இருக்கிறது. படித்தவர்கள் மற்றும் நகர்ப்புற அறிவுஜீவிகளின் சிந்தனை களிலிருந்தே இடதுசாரிக் கருத்துகள் வளம் பெறுகின்றன; அவை உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்ட, ஆனால் அறிவுஜீவிகளிடமி ருந்து சமூகரீதியாக விலகி இருக்கும் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட் டங்களால் மட்டுமே கைகூடுகின்றன; என்ற போதும், நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் உலக மயத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் தொழிலா ளர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஒன்றி ணைந்து போராடுகின்ற இடங்களில் இடதுசாரி இயக்
கம் வலுப் பெறுகின்றது. ஆனால், நகர்ப் புற நடுத்தர வர்க்கம் உலகமயத்தால் பயன டையும் இடங்களில் அது பிரச்சனைகளைச் சந்திக்கிறது. அதுபோன்ற இடங்களில் உலக மய,தாராளமய எதிர்ப்பு இடதுசாரியல்லாத சக்திகளால் கையிலெடுத்துக் கொள்ளப்படுகி றது. அல்லது இடதுசாரிகள் அடிப்படை வர்க் கங்களின் (தொழிலாளர்கள், விவசாயிகள்-மொர்) நலன்களைப் பாதுகாப்பதில் உறுதி யாக இருக்கும் இடங்களில் நகர்ப்புற இளை ஞர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளி டமிருந்து தனிமைப்படுவதால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். (இந்த இழப்பு உண்மை யானதே என்ற போதும்,உலகமயமாக்கலை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகள் மத்தியில் அதிகரிக்கும் ஆதரவு அந்த இழப்பைவிட கூடுதலாக இருக்கும்).
லத்தீன் அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டி ருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியினால் அக்கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இடது அல்லது இடது சார்புள்ள அரசாங்கங் கள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. இது, நீண்ட காலம் நீடித்த நெருக்கடிகள் நகர்ப்புற இளை ஞர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவி களை பாதித்து,அவர்களைக் கிளர்ந்தெழச் செய்ததன் விளைவாகும். மற்றொருபுறம், மத்திய ஆசியாவின் பெரும்பகுதியிலும், இப்போது ஈரானிலும் உலகமயத்தின் பாதிப்பு களை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் நேரடி யாக அனுபவிக்கவில்லை. இத்தகைய நாடு களில், புதிய தாரளமயத்துடன் நவீனத்துவத் தையும், ஜனநாயகத்தையும் கொண்டு வரும் என்று கருதப்படுகின்ற 'ஆரஞ்சு', 'வெல்வெட்' மற்றும் 'பலவண்ணப்' 'புரட்சிகளில்'பெரும் பாலான நகர்ப்புற மக்களைத் திரட்டவோ, அல்லது அவர்களது ஆதரவைப் பெறக் கூடிய ஆற்றலை ஏகாதிபத்தியம் இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உலகமயத்தால் தொழிலாளர் கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருப் பதோடு கூடவே உயர் வளர்ச்சிவிகிதமும், நடு தர வர்க்கத்தினரின் வருமானம், வாய்ப்புக ளில் அதிவிரைவான வளர்ச்சியும் நிகழ்ந்தி ருக்கிறது. கூடவே அறிவிஜீவிகள், ஊடக நிறு வனங்களில் பணியாற்றுவோர், தொழில் நுட்பப் பணியாளர்கள் (எ-டு.கணிணிப் பொறி யாளர் போன்றோர் -மொர்) ஆகியோரை உள் ளடக்கிய இவ்வர்க்கத்தினர் மத்தியில் ஓரளவு ஏகாதிபத்திய ஆதரவு உணர்வும் இருக்கிறது. இதன் காரணமாக, இடதுசாரிகள் தங்களது பழைய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங் களைப்' பிடிவாதமாகப் பற்றியிருப்பது இவர் களின் மத்தியில் சோர்வையும் ஏற்படுத்தி யிருக்கின்றது.
சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடையும் அளவிற்கு இடதுசாரிகள் என்ன பிழை செய் தார்கள் என்பதை இந்த இடத்தில் காணலாம். இந்திய நடுத்தர வர்க்கம் உலகமயமாக்கலின் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும் வரையில்,அது ஏகாதிபத்தியத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கும். ஏகாதி பத்திய எதிர்ப்புக் கொள்கை முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட வேண்டும் என்ற போதும், அவை மட்டுமே அவற்றின் நிலைப் பாட்டை மாற்றிவிடாது. ஏகாதிபத்தியத்தின் மீதான இந்த பரிவிற்கு மேலும் இரண்டு அம்சங்கள் வலுசேர்க்கின்றன. முதலாவதாக, மனித முகத்துடன் கூடிய ஏகாதிபத்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் பராக் ஓபாமா அமெரிக்க அதிபராகப் பதவி யேற்றது. இரண்டாவதாக, தற்போது ஏகாதி பத்தியத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுடன் இந்தியாவின் பெரும்பகுதி நகர்ப்புற நடுத்தர மக்கள் தங்களை இனங் காணவில்லை.
இந்திய இடதுசாரிகள் தமது தத்துவத்திற்கும் வர்க்க அடித்தளத்திற்கும் உண்மையாக இருக்கும்வரையில் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக அவ்வர்க் கத்திற்கும் இடதுசாரிகளுக்குமிடையில் பேதம் இருக்கவே செய்யும். இத்தகைய தொடர்பு இருக்கும்வரை இந்த நிலை இடதுசாரிகளை வாட்டிக்கொண்டே இருக்கும். சமீபத்திய தேர் தல்களில் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப் பாட்டின் காரணமாக இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனான உறவைத் துண்டித்துக் கொண்டதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட அளவு நகர்ப்புற மக்களின் ஆத ரவை இழப்பது தவிர்க்க முடியாததாக ஆனது. (கேரளாவில் சில உள்ளூர் அம்சங்கள் இடது சாரிகளிடமிருந்து நகர்ப்புற மக்கள் அந்நியப் பட்டதை மேலும் தீவிரமாக்கின: (மதானியின்) பிடிபி கட்சியுடன் இடதுசாரிகள் உறவு வைத்துக்கொண்டதை மதச்சார்பற்ற வாக்கா ளர்களில் ஒருபகுதியினர் ஏற்றுக் கொள்ள வில்லை; எஸ்என்சி-லவாலின் ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நிலைப்பாடு நம்பகத்தன்மையற்றதாக இருந் தது.)
தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தி யாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தி யில் இடதுசாரிகள் தங்களது ஆதரவை அதிக ரித்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பை ஈடு செய்திருக்க முடியும்; அப்பிரிவு மக்களின் மத்தி யில் தமக்கிருந்த ஆதரவை தக்கவைத்துக் கொண்டிருந்தால் கூட, அதன் ஒட்டு மொத்த இழப்பு ஒரு அளவிற்குள் இருந்திருக்கும். ஆனால், இடதுசாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தபோதும், புதிய பொருளாதாரக் கொள்கை பரிந்துரைத்ததற்கு மாறான வளர்ச்சிக்கொள்கை எதுவும் அவர் களிடம் இருக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் தலைமையிலான அரசாங் கம் மற்ற மாநில அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே வளர்ச்சிக் கொள்கைகளை, அவற்று டன் போட்டி போட்டுக்கொண்டு கடைப்பிடித் தது; புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்த அது தன்னுடன் பண்டைய பாணி (நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் முதலா ளித்துவம் தன் உற்பத்திமுறையை நிலை நாட்ட மேற்கொண்ட) மூலதனத்திரட்டல் ( குறிப்பாக,விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் வடிவத்தில்) எனும் ஆபத்தையும் சேர்த்தே கொண்டு வந்தது. பின்னர், பல்வேறு சந்தர்ப் பங்களில் இக்கொள்கைகள் திரும்பப் பெறப் பட்டபோதும், அடிப்படை வர்க்கங்களின் மீது அது எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கின. அதன் விளைவாக இடதுசாரிகளின் வர்க்க அடித்தளத்தில் கடும் அரிப்பு ஏற்பட்டது.)
மேற்கு வங்காளத்தில் சிங்கூர் மற்றும் நந்தி கிராம் பிரச்சனைகள் காரணமாக ஓரளவு விவசாயிகளின் ஆதரவில் இழப்பு ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டபோதும்,எதிர்க்கட்சிகள் வளர்ச்சியைத் தடுப்பதால் மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவு இடதுசாரிகளுக்கு கிடைக்கும் என்று கருதப்பட்டது. (அதன் காரணமாகத்தான், சிபிஐஎம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, எதிர்க்கட்சிகள் தொழில்மயமாக்கலுக்கு இடையூறாக இருக்கின்றன என்பதை வாக்காளர்களுக்கு நினைவூட்டுவதற்காக மாநிலம் முழுவதும் நானோ காரின் படம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன). உண்மையைச் சொன்னால், நகர்ப்புற நடுத் தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் என இருதரப்பினரின் வாக்குகளையும் இடதுசாரிகள் இழந்தனர். நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரால் இடதுசாரிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், அதன் விளை வாக அவர்கள் ஐமுகூ-விடமிருந்து விலகி நின்றதையும் ஜீரணிக்க முடியவில்லை என்ப தால் அவ்வர்க்கத்தினரின் வாக்குகளை இழந்தனர். இடதுசாரிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒரு மாற்று பொருளாதாரக் கொள்கையை உருவாக்குகிற அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாக்குகளை இழந்தனர். ஒரு மாநில அரசாங்கம் அத்தகைய பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான்; ஆனால் அத்திசை வழியில் கண்கூடாக எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை.
இதிலிருந்து, எங்கெங்கும் ஏகாதிபத்திய அமைப்புகளால் முன்னெடுத்துச் செல்லப் படும் புதிய பொருளாதாரக் கொள்கையிலி ருந்து வேறுபட்ட, வளர்ச்சிக்கான ஒரு மாற்று அணுகுமுறையை வளர்த்தெடுக்காமல் இடது சாரிகள் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது என்பது தெளிவாகிறது. இடதுசாரிகளின் வர்க்க அடித் தளத்தின் நலன்களைப் பாதுகாப்பதே அத்தகைய அணுகுமுறையின் மையமான அம்சமாக இருக்க வேண்டும்.
ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பின்னணியில் வளர்ச்சி என்பது வரையறுக்கப்பட வேண்டும். அது அடிப்படை வர்க்கங்களின் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்க வேண்டும். அதனால் அம்மக்களின் வர்க்க பலத்திற்கு கூடுதல் வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்பதை ஒரு வர்க்க பரிமாணம் கொண்டதாக பார்க்க வேண்டும்.; வெறும் பொருட்களை உற்பத்தி செய்து குவிப் பதாக அதைப் பார்க்கக் கூடாது. பொருட் களை உற்பத்தி செய்து குவிப்பதாகவோ மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பதாகவோ கருதுவது மேல் வர்க்க கருத்தாகும்; அது ஒருவகையான சரக்குகளின் மீதான அதீத மோகமாகும்.; ஆதலால், ஏகாதி பத்தியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். ஆகவே, பண்டைய பாணி மூலதனத் திரட்ட லோடு கூடிய (முதலாளிகள் முதலீடு செய்வ தற்காக பெருமளவு மான்யங்களை அவர்களுக்கு வழங்கும் அரசு பட்ஜெட்டின் மூலம் நடத்தப்பபடும் மூலதனத் திரட்டலும் இதில் அடங்கும்), தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டுவதுடன் கூடிய, அவர் களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பறிப்பதுடன் கூடிய வளர்ச்சி இடதுசாரிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற முடியாது. வெவ்வேறு மாறிலங்களுக்கு இடையில் முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி இருக்கும் பின்னணியில், இடதுசாரிகளின் வளர்ச்சிக் கொள்கை தங்களுடையதிலிருந்து வேறுபட்ட தாக இருப்பதால் தனியார் முதலீடுகள் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களுக்கு வர மறுத்தால், முதலீட்டிற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் (உதாரணமாக, பொதுத்துறை அல்லது கூட்டுறவுத்துறை முதலீடு). மேலும்,புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலிலிருந்து அடிப்படை வர்க்கங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஏகாதிபத்தியம் மற்றும் அதனால் முன்னெடுத்துச் செல்லப்படும் புதிய தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றுக்கான தங்களது 'காலாவதியாகிப் போன' எதிர்ப்பை இடதுசாரி கள் கைவிட வேண்டும் என்கிற அறிவுரையை ஏற்றுக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பாகும்; முதலாளித்துவ மேலாதிக்க கட்டமைப்பிற்குள் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் ஒப்பாகும். அது, இடதுசாரிகளை முதலாளித்துவத் திற்கும் சோஷலிசத்திற்கும் இடையில் சமசரம் செய்யும் 'பிளேரியப்' பாதையை மேற்கொள் ளும் அமைப்பாக மாற்றிவிடும். (இந்த இடத்தில் பிரபாத் பட்நாயக் ஙிறீணீவீrவீtமீ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார். பொதுநிலத்தை விற்று கல்விக் கூடங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்பது போன்ற பொருளாதாரக் கொள்கை களை முன்வைத்த ஹென்றி வில்லியம் பிளேர் என்கிற 19ம் நுாற்றாண்டு அமெரிக்க அரசியல் வாதியின் கொள்கைகளைப் பின்பற்றுவோரைக் குறிக்கும் சொல்-மொர்).
முதலாளித்துவ மேலோதிக்கத்தை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வது சமுதாயத்தை முதலாளித்துவ சமுதாயமாக மாற்றும் போக்கை விரைவு படுத்தும் என்றும், அதே அளவு விரைவாக முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்கிற பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வரும் என்று வாதிடப்படலாம். இது, முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் தொழிலாளர்கள், விவ சாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை ஒட்டச் சுரண்டுவது என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஏனெனில் அது தற்காலிகமானதுதான்,காலப்போக்கில் அது சரி செய்யப்படும் என்று முதலாளிகள் முன் வைக்கும் வாதத்தைப் போன்றது மட்டுமல்ல, உண்மையில் அதே வாதம்தான். (லண்டன்,மான்செஸ்டர் நகரங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது அக்காலத்திய விவசாயிகள்கூட நிலங் களை இழக்க வேண்டியிருந்தது என்று நந்தி கிராம் மற்றும் சிங்கூர் போராட்டங்களின் போது அமர்த்தியா சென் போன்ற உணர்வு மிக்க பொருளாதார நிபுணர்கள் வாதிட்டது இந்த வகையைச் சேர்ந்ததுதான்).
பல வகைகளில் இந்த வாதம் தவறானது. அவற்றில் மிகவும் வெளிப்படையானது பி வருமாறு: நம் போன்ற சமுதாயங்கள் முதலாளித்துவ சமுதாயமாக மாறும்போது, அது முதலாளித்துவத்திற்கு முந்தைய மற்றும் முதலாளித்துவமல்லாத கட்டமைப்புகளை அழித்தபோதும், அதனால் தொழில் இழந்த வர்கள் அனைவரையும் முதலாளித்துவ தொழில்துறையால் தனக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில்,முதலாளித்து வத்தால் குறிப்பிடத்தக்க அளவு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்கிற அளவிற்கு, முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் போக்கு மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப அடிப்படையின் அளவும், மாற்றத்தின் வேகமும் அதிகமாக இருக்கிறது. (லண்டனும், மான்செஸ்டரும் நிர்மாணிக்கப் பட்ட சூழல் முற்றிலும் வேறு. உதாரணமாக, காலனி ஆதிக்கத்தின் மூலம் திறந்து விடப்பட்ட வெப்ப பிரதேசங்களுக்கு பெருமளவு வெள் ளையர்களை முதலாளித்துவ மையத்திலி ருந்து குடியேற்றம் செய்வது அப்போது சாத்தி யமாக இருந்தது). நம்முடையது போன்ற சமுதாயங்களில் முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் போக்கு முற்றிலும் வேறானது. அது சிறு உற்பத்தியாளர்களை பாட்டாளிகளாக மாற்றுவதற்கு மாறாக ஓட்டாண்டிகளாக்கும் ஒரு போக்கிற்கு வழி வகுக்கிறது. இதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாடு கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறு பட்டடது ஆகும். காலனியாதிக்கத்திற்குட்பட்ட சமுதாயங்களிலும், மூன்றாம் உலக சமுதா யங்களிலும் இந்த நிகழ்வுப் போக்கு இருப் பதை கம்யூனிஸ்ட் அகிலம் அப்போதுதான் முதலில் அறிந்து கொண்டது.
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இந்த சமுதாயங்களை உலக பொருளாதாரத்துடன் இணைப்பதன் மூலம் அவை முதலாளித்து வத்திற்கு மாறிச் செல்லும் போக்கிற்கு இடை யூறு செய்ததே இதற்குக் காரணம் என்று ஆறாவது அகிலம் கூறியது. உலகப் பொரு ளாதாரத்துடன் அச்சமுதாயங்களை இணைத்த ஏகாதிபத்தியம் அவற்றை ஒரு வகையான சர்வதேச வேலைப் பிரிவினைக் குள் சிக்க வைத்தது. ஆனால் இன்றைய நிகழ் வுப்போக்கு அத்தகைய தடைகளிலிருந்து எழாது; இந்தியப் பொருளாதாரம் போன்ற வற்றைப் பொருத்தவரையில் அத்தகைய தடைகள் நெகிழ்வானவை;இறுக்கமானவை அல்ல. இத்தகைய சர்வதேச வேலைப் பிரி வினையின் பிடியிலிருந்து தன்னை விடு வித்துக் கொண்டு புதிய பொருளாதார கட்ட மைப்பிற்குள்ளேயே அதிவேகமாக முதலா ளித்துவத்திற்கு மாறிச் செல்ல இந்தியாவால் முடியும் என்பது கண்கூடு. முதலாளித்துவத் திற்கு மாறிச் செல்லும் அத்தகைய போக்கின் தற்கால தொழில்நுட்ப அடிப்படையிலிருந்தே அத்தகைய நிகழ்வுப் போக்கு எழுகிறது.
பின்னர் அதைத் தாண்டிச் செல்லலாம் என்கிற நம்பிக்கையில் முதலில் முதலாளித்துவத்தை நிலைகொள்ளச் செய்வது என்கிற வாதத்திற்கு இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டு, பிளேரிய சமரசப்பாதையை மேற்கொள்வார்களேயானால் அவர்கள் என்றென்றும் சமரசவாதிகளாகவே இருக்கவேண்டி வரும். முதலாளித்து வத்திற்கு மாறிச் செல்லும் போக்கைத் தொடர்ந்து முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்லும் தருணம் ஒரு இயற்கையான வரலாற்று முறிவாக எப்போதும் நிகழப் போவதில்லை. அத்தகைய முறிவு நிகழவே இல்லை எனில் இந்த இரண்டு கட்டங்களுக்கும் இடையிலான இந்த வித்தியாசம் என்பதே முற்றிலும் இல்லாமல் போய்விடும்.
பின்னர் புதிய அடிப்படையில் புரட்சிகர இயக்கத்திற்கு புத்துயிரூட்டுவதற்குத் தேவை யான நிலைமைகளை உருவாக்காமல் ஏகாதி பத்திய எதிர்ப்பை கைவிட வேண்டும் என்கிற அறிவுரையை ஏற்றுக் கொள்வது இடதுசாரி களின் வர்க்க அடித்தளத்தை அழித்துவிடும்; பின்னர் ஒரு புரட்சிகர இயக்கமாக மறுபிறவி எடுப்பதற்காக பல பத்தாண்டுகள் நடத்திய போராட்டங்களின் மூலம் கட்டப்பட்ட இடதுசாரி களின் வர்க்க அடித்தளத்தை விரயம் செய்வது என்று இல்லாமல், முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்க கட்டமைப்பிற்குள் பிளேரிய சமரச பாணியில் தங்களை இணைத்துக் கொள்வது என்பதாகும்; அது மட்டுமின்றி அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வது என்பது 'அடிப்படை வர்க்கங்களை' 'டாவோயிசம்' முதல் இஸ்லாமிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வரையிலான தீவிரவாதக் கோட்பாடுகளின் பிடியில் தள்ளிவிடும்;அவை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, பெருந் திரள் மக்களின் அரசியல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அதே காரணத் தினால், அவற்றால் எந்தவிதமான பலனும் விளையப் போவதில்லை; தங்களது இயல் பின் காரணமாகவே,அவர்கள் தங்களுக்கு தாங்களே நிர்ணயித்துக் கொண்ட உடனடி இலக்குகளைக் கூட அவர்களால் அடைய முடியாது; இதில் மக்களை விடுதலை செய்யும் ஒரு சமுதாயத்தை அமைப்பது என்பது அவர் களால் இயலாத காரியம். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இடதுசாரிகளின் கற்பனையில் உதித்த தல்ல; மக்கள் எதிர்கொள்ளும் புறவயப்பட்ட நிலைமைகளிலிருந்து அது எழுகின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பை இடதுசாரிகள் கை விட்டார்கள் எனில், மற்ற சக்திகள், அவை எவ்வளவுதான் இந்த புறவயப்பட்ட நிலைமை களை வெற்றி கொள்ளும் திறனற்றவையாக இருந்தபோதும்,அந்த வெற்றிடத்தை நிரப்பும். மக்கள் அவர்களின் தயவில் விடப்படுவர்.
நன்றி : எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக