வியாழன், 4 நவம்பர், 2010

திருந்தாத காவல்துறை!

பொதுவாக காவல்துறை மீது மக்கள் நம் பிக்கை இழந்து வருகிறார்கள். அதற்கான கார ணம் எல்லோரும் அறிந்ததே. ஊழல் அரசியல் வாதிகள், சமூக விரோதிகள், காவல்துறை யினர் என்கிற முக்கூட்டு சமூகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவித்து வருகிறது. அதி லும் சமீபகாலமாக காவல்துறையினர் சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற செய்தி நாடு முழுவதும் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சதார் காவல்நிலையத்தில் ஜூக்டாராம் என்ப வரை சித்ரவதை செய்து, அவரது ஆணுறுப்பை அறுத்து எறிந்துவிட்டனர். இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியது. அதனை எதிர்த்து காவலர்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கள் மார்கண்டேய கட்ஜூ, டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய நீதிமன்றக் குழு கடுமை யான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

மக்களை காவல் காக்க வேண்டியவர்களே அவர்களை வேட்டையாடினால் நாகரீக சமுதாயம் இல்லாது ஒழிந்து விடும். எங்கள் கருத்தின்படி கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினர் அதே கிரிமினல் குற்றங்களை புரிந்திடும் மற்றவர்களை விட கடும் தண்டனைக்குரியவர் ஆவர் என நீதி பதிகள் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நமது அனுபவம் வேறாக இருக் கிறது. அதிகார பீடத்தில் இருப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் அவர்கள் எளிதாக தப்பிக்க முடிகிறது. இந்தியா முழுவதும் பட்டியலிட்டாலும் சரி தமிழகத்தில் பட்டியலிட்டாலும் சரி, தவறு இழைத்த அதிகாரிகள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்? கணக்கெடுத் தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அதே வழக்கில் நீதிபதிகள் மேலும் கூறுகி றார்கள் “எப்படியோ காவல்துறையினரில் சிலர் பழைய காலனி ஆதிக்க மனப்பான்மை யை இன்னமும் கைவிடாமல் இருக்கிறார்கள்” என்று கூறியதுடன், “தாங்கள் ஜனநாயக அரசி யல் அமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு சுதந்திர நாட்டில் வேலை செய்கிறோம் என்ப தையே மறந்துவிடுகிறார்கள். போலீஸ் அமைப்புச் இன்றைய நிலையிலும் மிகவும் கொடூரமான முறையில் இயங்கி வருவதையே இது காட்டு கிறது” என்றும் ஓங்கிக் குட்டியிருக்கிறார்கள். நீதிபதிகளே இப்படி மனம் நொந்து கடுமை யான சொற்களை பயன்படுத்துகிறார்கள் என் றால், நிலைமை எவ்வளவு மோசமாக கீழே இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் பதறும்!

தொழிற்சங்கப் போராட்டங்களில் பகிரங்க மாக முதலாளிகளின் அடியாட்களைப் போல் காவல்துறை குற்றேவல் புரிவதையும்; தலித் துகள், பழங்குடியினர் என்று சொன்னால் காவல்துறை தறிகெட்டு அலைவதையும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.

தீர்ப்புகளில் நீதிபதிகள் எவ்வளவு கடுமையாக சொன்னாலும் அது அமலாவதில்லை. மக்களிடையே விழிப்புணர்வும் எதிர்க்கும் போர்க்குணமும் வலுப்பெற்றால் ஒழிய இதனை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. எல் லாவற்றுக்கும் மேலாக ஆட்சியாளர்களுக்கு “அரசியல் உறுதி” ஏற்படாதவரை காவல் துறையை நெறிப்படுத்துவது வெறும் கனவே.

கருத்துகள் இல்லை: