புதன், 10 நவம்பர், 2010

ஆபத்தான விதை மசோதா

விவசாயிகளின் நலன்களைக் கடுமை யாகப் பாதிக்கும் 2010 விதைச்சட்ட முன் வடிவை நிறைவேற்றக்கூடாது என்று அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பொதுச் செய லாளர் கே.வரதராசன் ஆகியோர் கூறி யுள்ளனர்.

2010 விதைச் சட்டமுன்வடிவு, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் உள்ளது. விதைகளை வளர்த்திட, பாது காத்திட, விற்க விவசாயிகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் பறிக்கும் விதத்தில் புதிய விதைச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. விதைச்சட்ட முன்வடிவு தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் கொடுத்த திருத்தங்கள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாம லேயே புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த திருத்தங்களும் புறக்கணிக்கப் பட்டுள்ளன. விதைக் கம்பெனிகளின் ஏக போக உரிமைகளுக்கு வலு சேர்க்கும் வகை யிலும் விவசாயிகளின் உரிமைகளை முற் றாகப் பறிக்கும் வண்ணமும் புதிய சட்ட முன்வடிவு உள்ளது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை பன் னாட்டு விதை நிறுவனங்களின் தயவில் தள்ளக்கூடிய விதத்திலேயே விதைச் சட்டமுன்வடிவு அமைந்துள்ளது என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், போதுமான அளவிற்கு விவ சாயிகளைப் பாதுகாக்கக்கூடிய விதத் திலும், விதைக் கம்பெனிகளையும் வேளாண் பொருட்களின் விலைகளையும் முறைப் படுத்திடக் கூடிய விதத்திலும் திருத்தங் களைச் செய்யாமல் விதைச் சட்டமுன் வடிவு நிறைவேற்றப்படக் கூடாது என் றும் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் நலன்களைக் காவு கொடுக்கக்கூடிய விதத்தில் விதைச் சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுமானால் அதை முறியடித்திட விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: