காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி சமீபகாலமாக ஊழலை ஒழிக்கவே அவதாரம் எடுத்து வந்திருப்பது போன்று வீரவசனம் பேசி வருகிறார். மேலும், காங்கிரஸ் ஊழலை ஒழிக்க உறுதி பூண்டு செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால் காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடி யாத ஒன்று என்பதுதான் இதுவரை காங்கிரசின் வரலாறாக இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத் திற்கு முன்பு 1937ம் ஆண்டு 6 மாநிலங்களில் காங்கிரஸ் ஆண்ட போது அதில் நடைபெற்ற ஊழல்களை கண்டு மனம் நொந்து காங்கிரசின் பிதாமகன் மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகள் இவை: “கட்டுக்கடங்காத ஊழலை ஒழிப்பதை விட, காங்கிரசை நாகரிகமான முறையில் புதைத்து விடுவதையே நான் விரும்புகிறேன் ”.
சுதந்திரத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பு 1948ம் ஆண்டு காஷ்மீர் ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் தொடங்கிய ஊழல், முடுகல் ஊழல், முந்திரா ஊழல், மாளவியா சிராஜூதீன் ஊழல், பிரதாப்சிங் கைரோன் ஊழல் என தொன்று தொட்டு வருகிறது. இன்னும் பல ஊழல்களின் மர்ம முடிச்சுகள் அவிழாமலும் இருக்கின்றன. இந் திரா காந்தி பிரதமராக இருந்த போது தில்லி ஸ்டேட் பேங்க் காசாளர் மல்கோத்ராவை தொலைபேசி யில் அழைத்து, நகர்வாலா என்பவருக்கு ரூ.60 லட்சம் கொடுக்கச் சொன்னதாகவும் பிறகு சந் தேகம் ஏற்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்த போது நகர் வாலாவும், விசாரணை நடத்திய அதிகாரி காஷ் யப் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். இந்த ஊழல் தொடர்பான மர்மமுடிச்சுகள் இன்று வரை அவிழவில்லை.
காங்கிரஸ் அரசுகள் அனைத்தும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே இருந்தன என்பதுதானே உண்மை. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சோனியாவிற்கு வேண்டப்பட்ட குவாத்ரோச்சி மூலம் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் நடைபெற்ற ஊழலை இன்று வரை அப்படியே விட்டு விடலாம் என்றுதானே நீதிமன்றத்தில் சிபிஐ தவம் கிடக்கி றது. ஊழல் வழக்குகளில் 6 மாதங்களுக்குள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வசனம் பேசும் ராகுல், 20 வருடமாக நகராமல் இருக்கும் போபர்ஸ் வழக்கு ஒன்றின் மீதாவது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம். காங்கிரசின் வரலாற்றுப் பக்கங்கள் முழுவதும் ஊழல் கறை படிந்தே இருக்கிறது.
சரி, இப்போது வீரவசனம் பேசிவரும் ராகுல் காந்தி காங்கிரசின் பொதுச்செயலாளரான பின்னர் நடைபெற்ற ஊழல்கள்தான் எத்தனை? காமன் வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களுக் கான வீடு ஒதுக்கீட்டு ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், சர்க்கரை ஏற்றுமதி ஊழல் என நாளொரு பெயரில் பொழுதொரு ஊழலாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்நிலை யில் காங்கிரஸ் ஊழலை ஒழித்து விடும் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகத்தான் இருக்கும்.
அடுத்து, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்ப டும் என காற்றில் கத்தியை வீசிக்கொண்டிருக் கிறார். உச்சநீதிமன்றம், ஜெர்மன் வங்கியில் பதுக்கியிருந்த கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை கேட்டபோது, அது வெளியிடு வதற்கு அல்ல; அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்பதே எங்களின் கொள்கை முடிவு என வரிந்துகட்டிக்கொண்டு நின்றது யார்? காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்தானே. ஏன் மன்மோகன்சிங்கை ராகுல் பதவி விலகச் சொல்லவில்லை. இந்த லட் சணத்தில் காங்கிரஸ் ஊழலை ஒழிக்குமாம்!.
காங்கிரஸ் ஊழலை ஒழிக்க வேண்டாம்; ஈடுபடாமல் இருந்தாலே போதும், ஊழல்களின் அளவு அடிவற்றிவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக