புதன், 2 பிப்ரவரி, 2011

துனீசியா, எகிப்து எதிரொலி ஜோர்டானிலும் மக்கள் வீராவேசப் போராட்டம்



துனீசியா, ஏமன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் மக்கள் எழுச்சியோடு போராட்டங்கள் நடத்தி வருவதன் எதிரொலியாக ஜோர்டானிலும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் கோபாவேசத் தைக் கட்டுப்படுத்த ஜோர்டான் மன்னர், பிரதமரைப் பத வியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமரை நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மரோப் பாகித், உண்மை யான அரசியல் சீர்திருத்தங் களை மேற்கொள்வார் என்றும் மன்னர் அலுவலக வட்டாரங் கள் கூறுகின்றன.

புதிய பிரதமர் நியமனம் என்பது திசைதிருப்பல் வேலை கள்தான் என்று எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டியுள்ளன. போராட்டத்தில் இறங்கியுள்ள மக்கள் வேலையின்மை மற் றும் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைகள் ஆகியவற் றிற்கு எதிராகவே களத்தில் இறங்கியுள்ளார்கள். அதில் மாற்றங்கள் ஏற்படுத்தும்வரை போராட்டங்கள் தொடரும் என்று மக்கள் மத்தியில் கருத்து எழுந் துள்ளது.

இதற்கு முன்பாக பிரதமராக இருந்த சமீர் ரியாவைப் பலி கடாவாக மாற்ற முயற்சிப்பது மக்களின் ஆத்திரத்தை அதி கப்படுத்தவே செய்யும் என் கிறார்கள் எதிர்க்கட்சித்தலை வர்கள். பிரச்சனையைத் திசை திருப்பவே, பிரதமராக இருந்த சமீர் ரியாவை நிர்ப்பந்தப் படுத்தி பதவி விலகல் கடி தத்தை வாங்கியிருக்கிறார்கள். துனீசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள் ளதுபோல மக்கள் போராட்டம் பரவிவிடக்கூடாது என்ற முயற் சியில்தான் மன்னர் இறங்கி யுள்ளார் என்று சுட்டிக்காட்டு கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

உண்மையான அரசியல் சீர்திருத்தங்கள் மிகவும் தேவை யான ஒன்றாகவே இருக்கிறது என்று மன்னரின் உத்தரவி லேயே இருக்கிறது. ஆனால் அதைச்செய்ய தற்போது பிரத மராக நியமிக்கப்பட்டுள்ள பாகித் தகுதியற்றவர் என்று போராட்டத்திற்குத் தலைமை யேற்றுள்ளவர்கள் கூறுகிறார் கள். ராணுவத்தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பாகித், 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்தார். அப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பதவி விலகினார் என் பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: