எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் அரசுக்கு எதிராகக் கடும் போராட்டத்தை நடத்தி வரும் மக்கள், அவரின் சர் வாதிகார ஆட்சி தொடர் வதற்கு அமெரிக்காதான் காரணம் என்று எகிப்து நாட்டு மக்கள் குற்றம் சாட் டியுள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட் டங்கள் அமெரிக்காவுக்கு எதிரானதாகவும் உருவெடுத் துள்ளது. திங்கட்கிழமை யன்று (பிப்ரவரி 7) மாலை யில் முதன்முறையாக அமெ ரிக்காவுக்கு எதிரான முழக்கங்களுடன் ஆயிரக்கணக் கான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. சுதந்திரச் (தஹ்ரிர்) சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுக ளைக் கண்டித்து மக்கள் முழக்கமிட்டனர்.
அனைத்துப் பகுதிகளை யும் சேர்ந்த மக்கள் தலை நகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் குழு மியுள்ளனர். இதில் ஆயிரக் கணக்கானவர்கள் இரவு பகலாக அங்கு தங்கியிருக்கி றார்கள். அங்கு ஏராளமான ராணுவத்தினரும் குவிக்கப் பட்டுள்ளனர். அதேபோல் எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக் சாண்ட்ரியாவிலும் மக்கள் ஏராளமான அளவில் ஆர்ப் பாட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஹில் லாரி கிளிண்டன், முபாரக் கிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, எகிப்தில் உள்ள அமெரிக்கர்களின் பாது காப்புக்கு என்று கூறிக் கொண்டு போர்க்கப்பலை யும், 800 ராணுவத்தினரை யும் அமெரிக்கா அனுப்பு கிறது. ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடாது என்று அமெரிக்க அதிகாரி கள் சொல்வதால்தான் சந் தேகம் அதிகரிக்கிறது என்று சில எதிர்க்கட்சியைச் சேர்ந் தவர்கள் கூறியுள்ளனர்.
லூலா ஆதரவு
அரபு உலகில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிக்கு புகழுரை சூட்டியுள்ளார் பிரேசிலின் முன்னாள் ஜனா திபதி லூலா. புதிய உல கத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கையை இந்தப் போராட்டங்கள் மீண்டும் உருவாக்கியுள்ளன. அடக்கு முறையைக் கையாளும் அர சுகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங் கள் நடைபெற்று வருகின் றன. உலகப் பொருளாதார மும் சில முன்னேறிய நாடு களால் தீர்மானிக்கப்பட வில்லை என்று குறிப்பிட் டுள்ளார்.
செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
முபாரக்கின் சர்வாதிகாரம் தொடர அமெரிக்காவே காரணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக