திங்கள், 28 பிப்ரவரி, 2011

தனியார்... தனியார்... தனியார்! அடிமை மன்மோகன் அரசின் தாரக மந்திரம்
தனியார் துறையினர் கூடுதல் வங்கிகளை அமைக்க அனுமதி

நிறுவனரீதியான “சீர்திருத்தங்கள்” தீவிரப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதிப் பிரிவில் மேலும் சீர்திருத்தங்களை கொண்டு வர புதிய மசோதாக்கள் அறிமுகப் படுத்தப்படும் என்று அறிவித்தார்.

+ 2008ம் ஆண்டு காப்பீடு (திருத்த) சட்ட மசோதா.

+ 2009ம் ஆண்டு இந்திய ஆயுள் காப்பீடு (திருத்த) சட்ட மசோதா.

+ 2005ம் ஆண்டு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய நிதி வழிகாட்டு மற்றும் மேம் பாட்டு ஆணையம் குறித்த மசோதா.

+ 2011ம் ஆண்டுக்கான வங்கி சட்ட திருத்த மசோதா.

+ 2009ம் ஆண்டுக்கான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் (அதன் கிளைகளுக்கான) சட்ட மசோதா

ஆகியவையே அந்த மசோதாக்கள்.

தனியார் பிரிவினர் வங்கிகள் அமைப்பதற்காக வழங்கப்படும் அனு மதியை மேலும் விரிவாக்க உத்தேசிக் கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் இந்திய ரிசர்வ் வங்கி, தனியார் நிறுவனங்கள் வங்கிகளை அமைப்பது குறித் வழிமுறைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்ப் பதாகவும் அமைச்சர் பிரணாப் தெரி வித்தார்.

பெரும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு

உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 2011-12 நிதிநிலை அறிக்கையில், தற்போதைய 7.5 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரியை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) விகிதம் தற்போதைய 18 விழுக்காட்டிலிருந்து 18.5 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு தாராள அனுமதி

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள் கையை மேலும் தாராளமாக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக வும், பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். அந்நிய முதலீடுகள் ஒருங்கிணைந்த வகையில் எளிமையாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு பிறகு இது மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறிய அவர், இதற்கு முன்பு 2010ம்ஆண்டு செப்டம்பர் மாதம் மறு ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

அந்நிய முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதியில் முதலீடுகளை செலுத்த அனு மதிக்கப்படுவார்கள். செபி அமைப்பு பதிவு செய்துள்ள பரஸ்பர நிதி அமைப்புகளில் சமபங்கு திட்டங்களில் இவர்கள் முதலீடு செய்யலாம்.

அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங் கள் நம் நாட்டு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களை முதலீடு செய்ய உச்ச வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள் ளது. இனி இந்நிறுவனங்கள் 40 பில் லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார் கள் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: