திங்கள், 21 மார்ச், 2011

2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு ரூ.1000 கோடி ரூபாய் கிடைத்தது என்றும், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் ராசா வின் நெருங்கிய கூட்டாளியு மான சாதிக் பாட்சா தனது நண்பரிடம் தெரிவித்திருந்த தகவலை, டெக்கான் கிரானிக் கிள் ஏடு வெளியிட்டுள்ளது.


திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்ச ராக இருந்தபோது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயி ரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த மெகா ஊழல் முறைகேடு இந்தியாவை உலுக்கியது. இந்த ஊழலில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய உச்சநீதிமன்ற மேற் பார்வையில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை செய்து வருகி றது.

இதனடிப்படையில் முன் னாள் அமைச்சர் ஆ.ராசாவை விசாரணை செய்த சிபிஐ அவரது நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சாவிடமும் கடந்த 2 மாதத்தில் 4முறை விசாரணை செய்தது. தொடர் விசார ணைக்கு ஆளான சாதிக் பாட்சா திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலை செய்யப் பட்டு தூக்கில் தொங்கவிடப் பட்டாரா என்ற சந்தேகம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா, மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் அவர் இறப்பதற்கு 10 நாட்கள் முன்னதாக தனது நண்பரிடம் பேசி உள்ளார். அப்போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு ரூ.ஆயிரம் கோடியும், தனது நண்பரும், முன்னாள் அமைச்ச ருமான ஆ.ராசாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தக வலை டெக்கான் கிரானிக்கிள் என்ற ஆங்கில நாளிதழ் திங்க ளன்று (மார்ச் 21) வெளி யிட்டுள்ளது.

ஆ.ராசாவுக்கு ஹவாலா பரிவர்த்தனையிலும் உதவிய தாக இருந்ததாக சாதிக் பாட்சா கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சாதிக் அப்ரூவ ராக ஆக வேண்டும் என்றும், அப்படி செய்ய தவறினால் தற்கொலை செய்து கொள் வேன் என அவரது மனைவி கூறியதாகவும் சாதிக் தன்னிடம் கூறினார் என அந்த நண்பர் தெரிவித்துள்ளார். அதே நேரத் தில் எந்த தகவல்களையும் வெளியிடக் கூடாது என இன் னொரு பக்கம் கடும் நிர்ப்பந்தம் சாதிக்கிற்கு இருந்தது. இதனால் அவர் அப்ரூவராக ஆக முடியாத சூழல் இருந்தது என்றும் அந்த நண்பர் தெரிவித்துள் ளார்.

1 கருத்து:

விடுதலை சொன்னது…

Sadiq Batcha was under pressure to turn approver, claims friend

http://timesofindia.indiatimes.com/india/Sadiq-Batcha-was-under-pressure-to-turn-approver-claims-friend/articleshow/7722793.cms