செவ்வாய், 8 மார்ச், 2011

பொருளாதாரத் தீவிரவாதிகள் இந்திய ஆட்சியாளர்கள்


அன்றாட வாழ்வுக்கே சாதாரண ஏழை-எளிய மக்களும், இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கமும் அல்லாடிக்கொண் டிருக்கும்போது நாடு அந்நிய இந்திய நிதி மூலதனத்தினால், பொருளாதார தீவிர வாதிகளால், முதலாளி வர்க்கத்தால், ஏகாதிபத்தியத்தால், ஊகநிதி மூலதனத்தால் சூறையாடப்பட்டு வருகிறது. பொதுச்சொத் துக்களும், மக்களின் சேமிப்புகளும் இன் சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரிலும், வங்கித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரிலும், பென்சன் மற்றும் பி.எப். துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரிலும் நிதித்துறை சீர்திருத்தங்களாக, அந்நிய நிதி முதலீடு என்ற பெயரில் சிறு வர்த்த கத்தில், தனியார் மற்றும் பொதுக்கூட்டு என்ற பெயரிலும், சூறையாடப்பட்டு வருகின்றன.

பொருளாதார தீவிரவாதிகள்

ஊழல் அரசியல்வாதிகள், ஆட்சியா ளர்கள், அதிகார வர்க்கத்தினர், வர்த்தகச் சூதாடிகள், மிகப்பெரிய தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற அனை வரும் உள்நாட்டில் கணக்கில் காட்டா மல், வரி கட்டாமல், வெளிநாடுகளில் சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் டாலர் கள் கணக்கில் பதுக்கி வைத்துள்ளனர். முன்னாள் சர்வதேச நிதி நிறுவன இயக்கு நர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.5.7 இலட்சம் கோடிகள் சட்ட விரோதமாக இந்திய நாட்டை விட்டு வெளியே சென் றுள்ளது. உச்சநீதிமன்றம் இவர்களால் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப் புப்பணம் இந்த தேசத்திற்குச் சேர வேண் டிய பணம் என்றும், அதை இவர்கள் திருடியுள்ளனர் என்றும் மிகச்சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. இது வெறுமனே வரி கட்டுவதில் இருந்து தப்பிக்கும் வழி என்று மட்டும் பார்க்க வேண்டிய ஒன் றல்ல. நாட்டின் வரி சட்டத்தை ஏமாற்றி தங்களுடைய கருப்புப்பணத்தை செலா வணியாக மாற்றும் முயற்சி என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

இது “பொருளாதார தீவிரவாதத்தின் ஒரு அங்கமாகும்” பிரதம மந்திரி இவர்களுடைய பெயர் பட்டியலை வெளியிட முடியாது என் பதற்கு சர்வதேச ஒப்பந்தத்தினை மீறுவ தாகும் என்றும் தனி நபர் இரகசியத்தை பாதுகாப்பது என்றும் கூறி மறுப்பதும், அவர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் இந்த “பொருளாதார தீவிரவாதி களுக்கு” துணைபோகும் செயல் என்ப தோடு அவர்களை பாதுகாக்கும் முயற்சி யாகவும் தெரிகிறது. அரசாங்கம் இந்த பணத்தை, நாட்டிற்குத் திருப்பி வரச்செய் தால், அவர்கள் இந்த பணத்திற்கு முறை யான வரியும் கட்டினால் இந்திய தேசத் தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த முடி யும். பெட்ரோல், டீசல், விலையேற்றத்தை தடுத்து நிறுத்த முடியும். ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். உணவுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். விக்கிலீக்சிடம் உள்ள இந்த தனி நபர்களின் பெயர்கள், அவர்களுடைய சொத்துக்கள், அவை அவர்களுக்குக் கிடைத்த முறை என அத்தனையும் வெளிச் சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.

தவிர்க்க முடியா அங்கமான ஊழல்

நவீன தாராளமயமாக்கல் அமலாக்கத் தின் போது, அதிக ஒளிவு மறைவின்றி நடைபெறும் பொருளாதார நடவடிக்கை களின் காரணமாகவும், அரசின் நடவடிக் கைகளை சுருக்கிக்கொள்வதன் மூலமாக வும், ஊழல் தடுத்து நிறுத்தப்படும் என்று வாதிடப்பட்டது. முதலாளித்துவம் எப்போ துமே தகுதி இல்லாதவர்களைக்கூட தன்னுடைய கூட்டாளி எனும்போது இலா பம் அதிகம் பெறும் இடத்தில் பதவியில் அமர்த்தும், வளர்த்தெடுக்கும் என்பது பொதுவான விதி மற்றும் நடைமுறை அனுபவமும் கூட. இதைத்தான் ஆங்கி லத்தில் (உயயீவையடளைஅ inாநசநவேடல செநநனள உசடிலேளைஅ)என்று சொல்கிறார்கள். உலக முதலாளித்துவ அமைப்பில் சமீப காலத் தில் நுழைந்துள்ள இந்தியா போன்ற நாடு களில் அரசாங்கத்தின் பல்வேறு அமைப் புகளில் மட்டுமல்லாது அரசமைப்பு, அர சாங்கம் முழுவதும் பரவி ஊடுருவி நிற்கக் கூடியதாக இந்த உசடிலேளைஅ உள்ளது. இதுதான் சமீபத்திய ஊழல்கள் அத்தனை யிலும் வெளிப்பட்டுள்ளது.

அரசியலுக்கும் நிதி மூலதனத்திற்கும் இடையே வளர்ந்து வரும் நெருங்கிய தொடர்பு என்பது இதனை பலப்படுத்துகிறது. இதன் காரண மாகத்தான் மிகப்பெரிய வர்த்தகக்குழுமங் கள் எல்லாம் கனவிலும் நினைத்தறியா மலிவு விலைக்கு பொதுச்சொத்துக்களை கபளீகரம் செய்ய முடிகிறது. இப்படி சேரும் சொத்துக்கள் தற்போது வெளி வந்துள்ள ஊழல் முறைகளில் மட்டும் தனியாரிடம் சேர்வதில்லை. மாறாக “நேர்மையற்ற” பல வழிமுறைகளில் இப் படி மக்களின் பொதுச்சொத்துக்கள் தனி யார் முதலாளிகளால், பகாசூர கம்பெனி களால், பொருளாதார தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இந்த நேர்மையற்ற வழிமுறைகள் பொதுவாக வெளிப்படையாகப் பார்க்கும் போது சட்டத்திற்குப் புறம்பானதாகவோ, அல்லது ஊழல் நடப்பதாகவோ தெரியாது. உதாரணமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்த முறை ஒரு உதாரணம். தனியார் முதலீட்டை பிரத்தியேகக் கவனம் செலுத்தி வளர்த்து வரும் நமது நாடு போன்ற நாடு களில் நாட்டின் அரசமைப்பு முறைகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படுகிறது. அல் லது தனியார் நடவடிக்கைகளை கண்கா ணிக்க வேண்டி,ய கட்டுப்படுத்த வேண் டிய, தலையீடு செய்ய வேண்டிய, ஒழுங்கு படுத்த வேண்டிய தனது செயல்பாட் டில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. அதன் காரணமாகத் தான் தகுதியற்றோர் ஆட்சியில் அமர் வதும், ஊழல்கள் அரங்கேறுவதும் நடை பெறுகிறது. தாராளமயமாக்கல் என்பது அரசாங்கம் தனது தலையீட்டினை விலக் கிக்கொள்வதன் மூலம் அமலாவதல்ல. மாறாக அரசின் தலையீட்டின் வடிவத்தை தனியாருக்கு சாதகமாக மாற்றிக்கொள்வ தன் மூலம் அமலாவதாகும். முன்பெல்லாம் ஊழல் என்பது ஒரு சட்டவிரோதமான ஒரு செயலுக்கான அனுமதியை அல்லது அரசு ஆணையை பெற்றுத்தந்ததற்காக பெறப்படும் தொகை என்ற வடிவில், ஒப் பீட்டு அளவில் சிறிய அளவிலான ஊழ லாக அமையும்.

தற்போது ஊழலின் வடி வமே மாறியுள்ளது. மக்களுக்குச் சொந்த மான பொதுச்சொத்துக்களை மிகப் பெரிய இலாபம் பெறும் வகையில் தனியார் முத லாளிகளின் அல்லது நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றி அதில் ஒரு பங்கை ஆட்சி அதிகார வர்க்கம் பங்கிட்டுக்கொள் வது என்ற வகையில் மாறியுள்ளது. இப்படி நடைபெறும் ஊழலினால் பொதுச் சொத் துக்கள் சூறையாடப்படுவது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடை படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகி றது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மனித வள அபிவிருத்தி என்பது கேள்விக்குறி யாகிறது. பல கோடி மக்களுக்குப் பதில் ஒரு சில தனியார் முதலாளி, முதலாளி வர்க்கம், ஆளும் வர்க்கம், நிதி மூலதனம் வளர்ச்சியடைகிறது.

ஆர்.எஸ்.செண்பகம்
- கட்டுரையாளர், நெல்லை மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்.


கருத்துகள் இல்லை: