ஞாயிறு, 20 மார்ச், 2011

எண்ணெய் வளத்தை கைப்பற்ற லிபியா மீது கொடிய தாக்குதல்



லிபியா மீது நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது

நேட்டோ படைகள் லிபியா மீது விமானங்கள் மூலமும், கப்பல்களிலிருந்து ஏவு கணைகள் மூலமாகவும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா வைச்சேர்ந்த படையினரை உள்ளடக்கிய நேட்டோ படைகளின் இத்தகைய ஆக்கிர மிப்பு நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

இராக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததைப்போல், பொருள்களை நாசப்படுத்தியதுபோல் இப்போது லிபியா மீதும் மோசமான தாக்குதல் நடவடிக்கையை நேட்டோ மேற்கொண்டிருக்கிறது. முதல் நாள் தாக்குதலிலேயே 48 பேர் கொல்லப் பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

லிபியா மக்களைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்ப தாகக் கூறியபோதிலும், இது லிபியாவின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டுள்ள அப்பட்டமானதோர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையேயாகும். லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு மோதலைப் பயன்படுத்திக் கொண்டு அங்கே ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட தலையீடாகும்.

பஹ்ரைனில் மக்களின் மகத்தான எழுச்சியை அடக்கிட சவூதி ராணுவத் தின் தலையீட்டிற்கு மேற்கத்திய அரசுகள் கண்டும் காணாததுபோல் உடந்தையாய் இருந்ததிலிருந்தே அவற்றின் கபட நாடகத்தை அறிந்திட முடியும்.

எண்ணெய் வளம் மிக்க லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தன் நலன் களைப் பாதுகாப்பதற்காக ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளில் இறங்கிட மேற்கத்திய நாடுகள் மனச்சான்றின் உறுத்தல் எதுவு மின்றி இறங்கியுள்ளன.

லிபியா மீதான ஐ.நா. சபையின் பாது காப்புக் கவுன்சில் தீர்மானத்தை நேட்டோ படைகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத் திக் கொண்டுள்ளன. பாதுகாப்புக் கவுன்சி லில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இந்தியா உட்பட ஐந்து நாடுகள் இதன் மீதான தீர்மா னத்தின் மீது வாக்களிக்காமல் நின்று கொண்டன. இந்நாடுகள் பாதுகாப்பு கவுன் சிலின் தீர்மானத்தின் மீது உடனடியாக மறுபரிசீலனை கோர வேண்டும். அது வரை நேட்டோ படைகள் தன் தாக்கு தலை நிறுத்தி வைக்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் இத்தகைய ராணுவ ஆக்கிர மிப்பினை இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவி அழைக்கிறது. (ஐஎன்என்)

1 கருத்து:

விடுதலை சொன்னது…

http://www.guardian.co.uk/world/blog/2011/mar/21/libya-gaddafi-air-strikes-live