வியாழன், 24 மார்ச், 2011

ஏழைகளுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதா ! கருணாநிதி ஆவேசம்

ஏழைகளுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதா கருனாநிதி ஆவேசம் இந்த கண்ணீர் செய்தியை பார்த்தவுடன் நீதிமன்றம் நடுங்கியது உடனே இடைக்கால தடை விதித்தவுடன் தேர்தல் ஆணையம் பணிந்தது கலைஞரின் கண்கள் இனிந்தன

“தேவர் திருமகனின் பொன்மொழி என்ன?” என்ற தலைப்பில் முரசொலி ஏட்டில் முதல்வர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கைகள் குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி களை மேற்கோள்காட்டி அதில் எழுதியுள்ளார்.

ஆடு,கோழி மட்டுமின்றி பீடிகள் கூட பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்தும், வாகனச்சோதனை என்ற பெயரில் நடத்தப்ப டும் பறிமுதல் குறித்தும் முதல்வர் விவரித் துள்ளார்.

தலைவர்கள் சிலைகளை துணிபோட்டு மூடி வைப்பது தேவையா? திருமணமண்ட பங்களை பூட்டி சாவியை எடுத்துக்கொள் வது தேவைதானா என்றெல்லாம் முதல்வர் நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பொதுமக்களுக்கு, வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந் துள்ள தேர்தல் ஆணையத்தின் அதீத நட வடிக்கைகளை யாரும் ஆதரிக்க மாட்டார் கள். தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக அரசி யல் கட்சியின் கருத்துக்கள் மக்களை சென்ற டைவதும் அதற்கேற்ப பிரச்சாரங்கள் அனு மதிக்கப்படுவதும் அவசியமாகும். ஆனால் அதே நேரத்தில் “திருமங்கலம் பார்முலா” செயல்படாமல் தடுக்கத் தேவையான நட வடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத் திட வேண்டும் என்பதும் அவசியமாகும்.

அண்மையில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இத்தகைய கெடுபிடி நடவடிக்கைகளை மேற்கொண் டது. ஆனால் மேற்குவங்கத்தைப் பொறுத்த வரை கடந்த சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் தேர்தல் ஆணையம் அத்துமீறி அதிகார துஷ்பிரயோ கத்தில் ஈடுபட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சி கள் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு ஜனநாயக இயக்கம் என்ற முறையில் திமுக அப்போதே மேற்குவங்கத்தில் நடை பெற்ற ஆணையத்தின் அத்துமீறல்களை கண்டித்திருக்குமேயானால், திமுக இப் போது ஆதங்கப்படுவதில் கொஞ்சமேனும் அர்த்தம் இருந்திருக்கும்.

திமுக ஆட்சியில் இருந்தபோது நடை பெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் மாநில அரசின் அதிகாரம் தவறாக பயன்படுத் தப்பட்டது. அதிகாரிகள் ஆளுங்கட்சியின ருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி செயலாற் றினர். குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்த லின்போதும், கடந்த நாடாளுமன்றத் தேர்த லின்போதும் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவதில் காவல்துறையினர் மும் முரமாக ஈடுபட்டனர். திமுகவினர் பண விநி யோகம் செய்ததை தடுத்தவர்கள் தாக்கப்பட் டார்கள். அவர்கள் மீது பொய்வழக்குகளும் போடப்பட்டன.

இப்போது தேர்தல் ஆணையத்தின் அதி காரதுஷ்பிரயோகம் குறித்து கவலைப்படும் முதல்வர், அப்போது இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களை பகிரங்கமாகவே நியாயப்படுத்தினார் என்பதை மறந்துவிடுவதற் கில்லை.

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து கவலைப்படும் முதல்வர், திமுக ஆட்சியில் இத்தகைய உரிமைகள் பகிரங்கமாக நசுக்கப்பட்டதை மறுக்கமுடியாது.

அண்மையில் சிபிஐ மூலம் காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியின் கடுமையை தணிப் பதற்காக, ராஜினாமா நாடகத்தை அரங்கேற்ற கூட்டப்பட்ட திமுக உயர்நிலை செயல்திட் டக்குழு கூட்டத்தில், அறிவிக்கப்படாத அவ சர நிலைக்காலம் போல இப்போது நடந்து கொண்டிருப்பதாக முதல்வர் ஆதங்கப்பட்டி ருக்கிறார்.

ஆனால் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில், தொழிலாளர், ஊழியர் போராட்டங்களை நசுக்குவதில் அறிவிக்கப்படாத அவசர நிலையை திமுக ஆட்சி அமல்படுத்தியது என்பதே உண்மை.

கேரளம், மேற்குவங்க மாநிலங்களில் தலைமைச்செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உண்டு. சட்டமன்றம் நோக்கி பேரணி செல்லலாம். தடை இல்லை. முதல்வர் அலுவலகத்தையே முற்றுகையிட்ட சம் பவங்கள் எல்லாம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்ததுண்டு.

ஆனால் தமிழகத்தில் கோட்டை நோக்கி பேரணி என்று அறிவித்தாலே ஆளும்கட்சியின் பதற்றம் அதிகரித்துவிடும். சத்துணவு ஊழியர்கள் பேரணிக்காக புறப்பட்டபோது அவரவர் ஊரிலேயே அமுக்கப்பட்டார்கள். சென்னை மாநகரம் போலீசாரின் முற்றுகைக் குள் கொண்டுவரப்பட்டது. இது அவசர நிலைக் கால கொடுமை இல்லையா?

அண்மையில் அரசு ஊழியர்கள், சாலைப் பணியாளர்கள் முதல்வரை சந்திக்க ஊர்வல மாக புறப்பட்டபோது அடித்து நொறுக்கப்பட் டார்கள். பலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

சமச்சீர்கல்விக்காக கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, பல்வேறு வழக்குகளையும் சந்திக்க நேர்ந்தது.

அண்ணாசாலையில் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை. முதல்வர் மட்டும்தான் சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க முடியும். மற்றவர்கள் கூட்டம் கூட நடத்தமுடியாது.

சென்னையில் உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்கள் நடத்த அனுமதி கோரினால், ஆள் நடமாட்டம் இல்லாத கூவம் நதிக்கரையில்தான் இடம் ஒதுக்கப்படும்.

அண்மையில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர் போராட்டத்தை திமுக அரசு எதிர்கொண்டவிதம் ஜனநாயக உரிமைக ளுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை யில் தோழமைக்கட்சி வேட்பாளர்களையே தொழில்முறை ரவுடிகளை பயன்படுத்தி தாக்கியதையும் வாக்குச்சாவடிகளை சூறை யாடியதையும் மறக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றமே தலையிட்டு சில வார்டு களுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டது திமுக ஆட்சியில்தான்.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வெடித்தபோது போலீசார் வேடிக்கை பார்த்ததும், வழக்கறிஞர்களை நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து தாக்கியதையும் தமிழ கம் கண்டது. அப்போதே கங்கை சூதகமாகி விட்டது என்பதுதானே இதன் பொருள்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு பெரியாரின் வழிவந்த தாகக் கூறிக்கொள்ளும் அரசு துணை நிற்கவில்லை. மாறாக, ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக அடக்குமுறைகளையே கட்ட விழ்த்துவிட்டது என்பதற்கு பல சம்பவங் களை சாட்சியமாகக் கூறமுடியும்.

குறிப்பாக தொழிலாளர் உரிமைப் போராட்டங்களை பொறுத்தவரை திமுக அரசு அறி விக்கப்படாத அவசர நிலையையே அச்சரம் பிசகாமல் பின்பற்றியது என்பதுதான் உண்மை.

ஹூண்டாய், பாக்ஸ்கான், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆலை வாசலில் கொடியேற்றக்கூட அனுமதி மறுக் கப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய அ.சவுந்தரராசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு கைவிலங்கு பூட்டியதும் இதே திமுக அரசுதான். தொழிலாளர் போராட் டம் குறித்து நானும், அ.சவுந்தரராசனும் முதல் வரை சந்தித்தபோது கைவிலங்கு பூட்டப் பட்டது குறித்த எதுவும் பேசவில்லை. ஆனால் இதை திரித்து சட்டமன்றத்திலேயே தவறான தகவலை முதல்வர் கொடுத்தார்.

பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளர் உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுத்தாலும் உள்நாட்டு தொழிலாளிக்காக தொழிற்சங்கம் அமைக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் காவலன் என்று ஒரு காலத்தில் கூறிக்கொண்ட திமுக அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள் திமுக ஆட்சியில் காலில் போட்டு நசுக்கப்பட்டது.

கங்கை இப்போதுதான் சூதகமானதாக கூறமுடியாது. ஏற்கனவே திமுக ஆட்சியிலேயே கங்கை சூதகமாகிவிட்டது.

-டி.கே.ரங்கராஜன் எம்.பி.

கருத்துகள் இல்லை: