புதன், 23 மார்ச், 2011

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான முதல்வர்


மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் இந்தியாவின் கவனத்தையும், உலகின் பல நாடுகளது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்குவங்கத் தேர்தல் போராட்டக் களத்தில் மேற்குவங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யா ஜாதவ்பூர் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி வாகை சூடுவதற்குப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைமைச் செயலாளர் மனீஸ் குப்தா போட்டியிடுகிறார்.

திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்த மனீஸ் குப்தா, ஊடகங்களுக்கு உரைத்த செய்தி கவனிக்கத்தக்கது.

தான், புத்ததேவ் பட்டாச்சார்யாவை எதிர்க்கவில்லை என்றும், அரசுத் துறை யில் தனக்கு இருக்கும் அறிமுகத்தை முன்னிறுத்தி மக்களின் ஆதரவைப் பெற மட்டுமே முயற்சிக்கிறேன் என்றும் அவர் கூறினார். தேர்தலில் இடது முன்ன ணியை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள இவர்கள் தயாரில்லை என்பதற் கான ஒரு முன் ஒப்புதலாகவே இவரின் பேச்சு இருந்தது.

வங்கத்தின் அரசியலும், வங்கத்தின் வளர்ச்சியுமே ஜாதவ்பூர் தேர்தல் பிரச் சாரத்தின் முக்கிய விஷயமாகியுள்ளது.

கொல்கத்தா மாநகரில் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்கிறது ஜாதவ்பூர் தொகுதி. 1967-இல் நடைமுறைக்கு வந்த ஜாதவ்பூர் தொகுதி அன்று முதல் ஒவ்வொரு முறையும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரை மட்டுமே வெற்றி பெறச் செய்துள்ளது. 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று அங்கு மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

புத்ததேவ் பட்டாச்சார்யா 1987-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலிருந்து ஜாதவ்பூர் வேட்பாளராகப் போட்டியிட்டு தொடர்ச்சியாக மகத்தான வெற்றி பெற்று வந்துள்ளார். அவர் முதலாவது போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் பிர பாத் சாட்டர்ஜியை விட 36,422 வாக் குகள் அதிகம் பெற்று முதல் வெற்றி பெற்றார்.

புத்ததேவ் 2006ஆம்ஆண்டு நடை பெற்ற தேர்தலில் திரிணாமுல் வேட்பா ளர் தீபக்குமார் என்பவரை 58,130 வாக் குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜாதவ்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பெரும்பான்மை வாக்குகளில் இதுவே மிக அதிகம். கொல்கத்தா நக ரின் தெற்குப் பகுதியில் உள்ளது ஜாதவ் பூர் தொகுதி. ஜாதவ்பூர் பெயரில் ஒரு பல்க லைக் கழகமும் உள்ளது. நடுத்தர மக்க ளும் தொழிலாளர்களும் அதிகமாக வசிக்கிற தொகுதி இது.

விவசாயத் துறையில் பெரும் வளர்ச்சியை நிலை நாட்டிய வங்கம், தொழில் துறையிலும் பெரும் வளர்ச்சியைப் பெற்றிடுவதற்கான பெரும் முயற்சியை புத்ததேவ் முதலமைச்சரானதும் ஆரம்பித்தார். இதன் மூலம் மேற்குவங்கத்தின் தொழில்வளர்ச்சியில் ஏராளமான சாதனைகள் ஏற்பட்டன. இந்தச் சாதனை களை மதிப்பிழக்கச் செய்வதற்காக இதன் பேரில் புத்ததேவ் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்யப்பட்டது. அரசியல் ரீதியாகவும், அரசின் கொள்கை விஷயத்திலும் முரண்பாடுகள் இருந்த போதிலும் எதிராளிகள் கூட புத்ததே வின் தூய்மையான பொதுவாழ்க் கையை அங்கீகரிக்கிறார்கள்.

அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கூற இயலவில்லை. மக்களின் நேசமிக்க தலைவராகத் திகழ்கிறார். எளிமையாக வாழும் ஒரு முதலமைச்சர் என்ற நற்பெயர் அவருக்கு உண்டு. பாலி கஞ்ச்க்கு அருகில் உள்ள அவென்யுவில் ஒற்றை பெட்ரூம் உள்ள பிளாட்டில் புத்ததேவ் தங்கியுள்ளார்.

1944- இல் கொல்கத்தாவில் பிறந்த புத்ததேவ், 1964-இல் பிரசிடன்ஸி கல் லூரியில் பட்டம் பெற்றார். 1966-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். 1971-இல் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், 1982-இல் மாநில செயற்குழு உறுப்பினராக வும், 1985-இல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், 2000-மாவது ஆண் டில் அரசியல் தலைமைக் குழு உறுப் பினராகவும் உயர்ந்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தோன்றுவதற்கு முன்பு, புத்ததேவ், வங்கத் தின் ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். இவர், 1977-இல் முதன்முறையாக காசிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டார். நீண்டகாலம் மாநில அமைச்சராகப் பணியாற்றினார். 1996 முதல் மேற்குவங்க உள்துறை அமைச்ச ராகவும் பொறுப்பு வகித்தார். ஜோதிபாசு வுக்கு அடுத்து முதலமைச்சரானார்.

புத்ததேவின் மனைவி பெயர் மீரா. மகள் சுசேத்னா, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றுகிறார்.

புத்ததேவுக்குப் பிடித்தமானது கவிதை எழுதுவது மற்றும் கிரிக்கெட், திரைப்படம்.


நன்றி : தேசாபிமானி (21.3.2011)

தமிழாக்கம் :தி.வ.

Bhattacharjee is ranked as the poorest CM of India, with assets worth only Rs 15.2 lakh!

The beleaguered CM owns NSC certificates and LIC policies worth 2.65 lakh, bank deposits worth Rs 6.42 lakh and gold ornaments worth Rs 5 lakh, among other things. He also owns Rs 3,550 in cash!

1 கருத்து:

விடுதலை சொன்னது…

Mayawati is the richest chief minister in India, with assets worth an eye-popping Rs 86 crore.


The Bahujan Samaj Party chief has sure come a long way since her humble days as a school teacher and a grassroots Dalit leader.


She owns property worth Rs 75 crore, including a commercial centre in Okhla worth Rs 15.5 crore and plots at Sardar Patel Marg worth over Rs 54 crore, among others.


The CM, known for her penchant towards diamonds, owns jewellery worth Rs 90 lakh.