சனி, 16 ஏப்ரல், 2011

2G: ரிலையன்ஸ்,ஸ்வான்,யுனிடெக் நிர்வாகிகள் கைதாகிறார்கள்


வரலாறு காணாத வகையில் நடந்தது 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் மோசடி, சதி செய்த 5 நிறுவன தலைமை நிர்வாகிகளை கைது செய்து, விசாரணை செய்ய விரும்புவதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் சந்ததியினருக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் அளிக்கப்பட்டது. தொலைத் தொடர்புத்துறையில் அனுபவம் இல்லாத யுனிடெக் போன்ற தகுதி யற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதலில் வருபவர்களுக்கு முன் னுரிமை என்ற அடிப்படையில் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அலைக்கற்றை ஒதுக்கீட் டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) நாடாளு மன்றத்தில் அறிக் கை சமர்ப்பித்தது. ஏறக்குறைய 2 லட்சம் கோடி வரை நடந்த இந்த முறைகேடு இந்திய அரசியல் காணாத மெகா ஊழலாக இருந்தது. இந்திய மக்களுக்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திர மாக நடமாடினர். கடுமையான எதிர்ப்பு அலை எழுந்த நிலையில் ஆ.ராசா அமைச்சர் பதவியை விட்டு விலகினார். சிபிஐ தீவிர விசாரணை செய்து, அவரை கைது செய்தது. ஆ.ராசா தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2ஜி ஊழல் குறித்த முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ ஏப்ரல் 2ம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 80 ஆயிரம் பக்கம் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகை யில் தொலைத்தொடர்பு நிறுவனங் களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ஸ்வான் டெலிகாம் லிமிடெட், யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனம் மற்றும் 9 நபர்கள் ஊழலுக்கு காரணம் என குற்றம்சாட்டியது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிட் டுள்ள நிறுவனங்களின் 5 நிர்வாகி களை கைது செய்து விசாரணை செய்ய விரும்புவதாக சிபிஐ வெள் ளிக்கிழமை கூடுதல் அமர்வு நீதி மன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் தெரிவித்தது. குற்றச்சாட்டில் உள்ள நபர்களின் ஜாமீன் வேண்டுகோ ளுக்கும் அது எதிர்ப்பு தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் ஆவர். அவர்கள் குற்றவாளி கள் என்பதற்கான சில சாட்சிகள் குறிப்பிட்ட நிர்வாகிகளுக்கு கீழே நேரடியாக பணியாற்றுபவர்கள் என சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித் தது. ஊழல் குற்றச்சாட்டில் உள்ள நபர்கள் சட்டவிரோதமாக ஈடு பட்டு இருப்பது தெளிவாக குறிப் பிடப்பட்டுள்ளது என்றும் சிபிஐ கூறியது. சிபிஐ குற்றப்பத்திரிகை யில் ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்த்ரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குரூப் தலைமை நிர்வாகிகள் கவுதம் தோஷி, சுரேந்திரா பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீது குற்றம் சாட் டப்பட்டிருந்தது.

2ஜி ஊழல் விசாரணை தாமதம் இல்லாமல் நடைபெற விசாரணை நீதிமன்றம், தினந்தோறும் விசா ரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. யுனிடெக் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறைக்கு சம்பந்தம் இல் லாத நிறுவனம், அதன் உண்மை யான தொழில் ரியல் எஸ்டேட் வணிகம் ஆகும்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற, விண்ணப்பிப்பதற்கு முன்பா கத்தான் இந்த நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனமாக பதிவு செய்தது என்றும் சிபிஐ தனது பதிலில் தெரிவித்திருந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளின் கிரிமினல் சதியை சிபிஐ, நீதிமன்றத்தில் விளக்கிக் கூறியது. இந்த ஊழல் கிரி மினல் திட்டம் ரிலையன்ஸ் தலை மை நிர்வாகி கவுதம் தோஷி மூளை யில் உதித்தது என்ற சிபிஐ டி.பி. ரியால்டி நிறுவன தலைமை நிர்வாகி வினோத் கோயங்கா மீதும் குற்றம் சாட்டியது. அவர் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச் சர் ஆ.ராசா மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகளுடன் ரகசிய சதி செய்து, அலைக்கற்றை உரிமம் பெற்றனர் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐ தனது 2வது குற்றப்பத்திரிகையை ஏப்ரல் 25ம் தேதி தாக்கல் செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள், பெரு நிறுவன தலைவர்களுடன் ரகசிய சதி செய்து அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: