ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

அடித்தட்டு மக்கள் அடையாளம் அழிக்க இப்படியொரு சதியா?

குடும்ப அட்டை என்பது எளிய மக்களுக்கான முக்கிய அடையாள அட்டையாகவும் விளங்குகிறது. இப்போது அப்படிப்பட்ட அடையாளத்தைக் கைப்பற்றுகிற வேலையை அரசு எந்திரமே தொடங்கியிருக்கிறது. தலைநகர் தில்லியில் அதற்கான முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. பொதுவிநியோக முறை மூலம் பொருள்களை வழங்குவதற்கு மாறாக, குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரொக்கமாகவே கொடுக் கப்படுகிறது. மக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருள்களை வாங்கிக்கொள்ள இந்த ரொக்கம் அல்லது ‘ஸ்மார்ட் கார்டு’ முறை உதவியாக இருக் கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதற்காக, ஒரு தொண்டு நிறுவனம் இறக்கிவிடப்பட்டது. அது மக்களிடையே ஒரு ஆய்வு நடத்தியதாக கூறிக் கொண்டு, பெரும் பகுதி மக்கள் இவ்வாறு பண மாகவே வழங்கப்படுவதை வரவேற்கிறார்கள் என்ற முடிவை வெளியிட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு சாதகமாக நடத்தப்பட்ட ஆய்வு இது என்பதை எவ ரும் புரிந்துகொள்ள முடியும்.

உண்மை என்னவென்றால், இந்த ஆய்வறிக்கை யின் போலித்தனத்தைப் புரிந்துகொண்ட சில பொது அமைப்புகள் உண்மையான ஆய்வு ஒன்றை மேற் கொண்டன. அதில் 99 விழுக்காடு மக்கள், தங்க ளுக்கு பொருள்களாகத்தான் வேண்டும், பணமாகத் தேவையில்லை என்று கருத்துக் கூறியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தில்லி அரசு தொடங்கிய இந்த நடவடிக்கையின் உண்மை நோக்கம், படிப்படியாக பொது விநியோக முறையில் பொருள்களைப் பெறுவோரின், குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதேயாகும். இதன் பின்னணியில் உலக வங்கியின் நிர்ப்பந்தம் இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஏற்கெனவே 2008ம் ஆண்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் குடும்ப அட்டைகளை தில்லி அரசு ரத்து செய்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளையொட்டி தில்லியின் பல குடிசைப்பகுதிகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அவர்களது சுமார் 65 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக புதிய உயிரியல் குறியீடு (பயோமெட்ரிக்) அட்டைகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் அப்படிப்பட்ட புதிய அட்டை எதுவும் வழங்கப்படவில்லை.

குடும்ப அட்டைதாரர்களில் பெரும்பாலானோர்- குறிப்பாகப் பெண்கள்- தங்களுக்கு முன்பு போல் பொருள்கள்தான் வேண்டும் என்று கோருவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று - கையில் பணமாக இருக்கிறபோது மருத்து வம் போன்ற அவசரத் தேவைகளுக்காக அந்தப் பணம் செலவிடப்பட்டுவிடும், தேவையான உணவு தானியங்களை வாங்க இயலாமல் போய்விடும். இரண்டாவது - பணத்தை எதற்காகச் செலவிடுவது என்பதை தீர்மானிப்பது, ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில், ஆகப்பெரும்பாலும் ஆண் களாகவே இருப்பார்கள். அதிலும் பெரும் பணம் பொறுப்பற்ற ஆண்களின் குடிப்பழக்கத்திற்குப் போய்விடும்.

உள்நோக்கமுள்ள இந்த திட்டத்தை தில்லி அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். அதை முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த வற்புறுத்துவதற்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசும் தனது எண் ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை யேல் அடித்தட்டு மக்களின் இந்த குறைந்தபட்ச அடையாளத்தைக் கூட அழிக்கும் முயற்சியை வரலாறு மன்னிக்காது.

கருத்துகள் இல்லை: