புதுச்சேரி வில்லியனூர் கொம்யூனை அடுத்து அரியூரில் ரூ. 5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம் ஐந்து வருடங் கள் ஆகியும் திறக்கப்படா மல் உள்ளது. இந்த அலு வலகம் தலித் பகுதியில் இருப்பதால் பஞ்சாயத்து தலைவர், அலுவலகத்திற்கு செல்வதில்லை. தலைவரின் இச்செயல் சமூக நீதிக்கு எதிரானதாகும்.
எனவே, தீண்டாமை யை கடைப்பிடிக்கும் பஞ்சா யத்து தலைவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், பஞ்சாயத்து அலுவலகத்தை திறந்து செயல்படுத்த வேண்டும் என்றும், பங்கூர் பேட்டில் தலித் பகுதியில் அமைந் துள்ள பால் உற்பத் தியாளர் கூட்டுறவு சங்க கட் டிடத் தையும் திறக்க கோரி மாவட்ட நிர்வாகம் அமைச் சர்களுக்கு மனு கொடுத்தும் நடவடிக் கை எடுக்கப்பட வில்லை.
இதனால் புதுச்சேரி தீண்டாமை ஓழிப்பு முன்ன ணியும், மார்க்சிஸ்ட் கட்சி யும் இணைந்து வியாழ னன்று (ஜூன் 24) பஞ்சா யத்து அலுவலகம் திறக்கும் போராட்டம் அரியூரில் நடைபெற்றது. இப்போ ராட்டத்திற்கு சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.லதா தலைமை தாங்கினார்.
சிபிஎம் பிரதேச செயலா ளர் பெருமாள், புதுச்சேரி யின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் ராமசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
அரியூர் அனந்தபுரம் சாலை சந்திப்பில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை பஞ் சாயத்து அலுவலகம் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், நடந்த பேச்சு வார்த்தையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் கலந்து கொண்டு இந்த அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தனர். ஆனால் இதற்கு போராட்டக் குழுவினர் கள் ஒப்புக் கொள்ளவில்லை.
அமைச்சர் உறுதி
அதனை தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கைபேசி மூலம் சிபிஎம் பிரதேச செயலாளர் பெரு மாளிடம் பேசுகையில், தற் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நேரில் வரஇயலவில்லை என்றும், சிகிச்சை முடிந்த பத்து தினங்களுக்குள் பஞ் சாயத்து அலுவலகத்தை யும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட மும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித் தார். அதனை தொடர்ந்து போராட் டம் தள்ளிவைக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தீண்டாமை ஓழிப்பு முன் னணி நிர்வாகிகள். லேயோன் (ஆர்பிஐ), தலித்சுப்பையா, கலிவரதன் (விதொச), நிலவழகன்(விச), முருகன் (சிஐடியு), பாலமோகனன் (அஊச), ராஜாங்கம், ராமச் சந்திரன்(முஎகச), கொளஞ்சியபன்(தீஓமு), மணிபாலன் (டிஓய்எப்ஐ), சுமதி(ஜமச) உள்ளிட்ட 200க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்ட அறிவிப்பால் இந்த பகுதி முழுவதிலும் காவல்துறையினர் குவிக்கப் பட்டிருந்தனர்
வெள்ளி, 25 ஜூன், 2010
தலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
மாறாதது /பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் இந்த சாதி அமைப்புகளும்...அதனால் இழிவுப்படுத்துதலும்தான்...எத்தனைப் பெறியார் வந்தால் என்ன....அவர் பாட்டுக்கு வந்துவிட்டு போகட்டும்...
மன மாற்றம் என்பது, அப்படி தாங்கள் உயர்ந்த ஜாதி என்று கூறும் சமுகத்தில் உள்ள இளஞ்ஞர்களிடையே இருந்து வரவேண்டும்....
என்ன செய்ய...
கருத்துரையிடுக