ஞாயிறு, 15 மே, 2011

விதைப்பது விஷம்: அறுவடை துயரம்



உணவு பாதுகாப்பு என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சனையாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 86.16 கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள். போதிய உணவு இல்லாமல் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் 50 சதவீதம் குழந் தைகளின் உடல் வளர்ச்சி முடங்கி விடு கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா, நியூசி லாந்து போன்ற நாடுகளில் 23 சதவீதம் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள்.

உணவு உற்பத்தி அதிகரிப்பதால் மக்களுக்கு உணவு பாதுகாப்பு ஏற்படுமா? உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான உணவு என்பது அரசியல் பிரச்சனைகள். உணவு உற்பத்தி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, லாபம் யாருக்கு, வாங்கும் சக்தி, பணக்காரர்கள் தேவைக்கு அதிகமாக வாங்குவது, தம்மக்கள் இரவு பட்டினியோடு உறங்கக்கூடாது என்ற ஆட்சியாளர்களின் அக்கறை போன்றவை உணவு பாதுகாப்போடு தொடர்புடையது ஆகும்.

உணவு உற்பத்தி அதிகரிக்க கூடுதல் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நமது உணவு பஞ்சம் தீரும் என்று கடந்த பல ஆண்டுகளாக கூறி வந்த னர். தற்போது இதனுடன் சேர்த்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பயன்படுத்தி னால் உலகத்திற்கே உணவளிக்கலாம் என்ற மாயையை தொடர் விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்துகிறார்கள்.

பசி என்ற பிரச்சனையை உணவு உற் பத்தி அதிகரிப்பதனால் மட்டும் தீர்க்க முடி யுமா?. கிராமப்புற வறுமையும் நில உரிமையும் நேரடி தொடர்புடையது. உற்பத்திக்கு பக்குவப் பட்ட நிலம் யார் வசம் உள்ளது. உற்பத்தி கருவிகள், தொழில்நுட்பம் யாரிடம் உள்ளது. உற்பத்தி செய்வது யார் என்பதோடு, உணவுப் பொருட்கள் தேவைப்படுபவரின் வாங்கும் சக்தியோடும் தொடர்புடையது பசி என்ற பிரச்சனை. உணவுப்பொருட்களின் விலை யேற்றம் வாங்கும் சக்தியை தகர்த்து விடுகி றது. உணவுப்பொருட்கள் கிடங்குகளில் எலி களுக்கு விருந்தானாலும், மனிதர்களுக்கு வழங்க உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் தர இயலாது என்ற நமது ஆட்சியாளர்களின் நிலைப்பாடு உணர்த்தவில்லையா, உற்பத்தி அதிகரிப்பதனால் மட்டும் பசியை போக்க இயலாது என்று.

உலகம் முழுவதும் பல கோடி பேர் பசி யால் துடிக்கிறார்கள். அதில் பெரும் பங்கு இந் தியாவில் உள்ளன. அதே நேரத்தில் விதை, பூச்சி மருந்து மற்றும் உணவு தானிய வர்த்த கர்களின் லாபம் பல மடங்கு உயர்கிறது. கார் கில் என்ற உலகின் மிகப்பெரிய உணவு தானிய வியாபார கம்பெனியின் லாபம் 2008ல் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. மான்சாண்டோவின் லாபம் இரு மடங்கானது. சோயா மற்றும் கோதுமை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ச் சர் டேனியல் மிட்லெண்ட்-ன் லாபம் 42 சத வீதம் உயர்ந்துள்ளது. உணவு தானிய ஊக வணிக முதலீடு மார்ச் 2008ல் 260 பில்லி யன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. அது 2011ல் இன்னும் உயர்ந்திருக்கலாம். ஆக உணவு பஞ்சத்தின் உண்மையான காரணம் உற்பத்தி குறைவல்ல. மாறாக தாராளமய கொள்கையின் விளைவாக, ஒரு சில சக்தி படைத்த பன்னாட்டு கம்பெனிகளின் கட்டுப் பாட்டில் உணவு உற்பத்தியும், விநியோகமும் அகப்பட்டுக்கொண்டதால் தான். இதனால் உற்பத்தி செய்யும் விவசாயியும் நுகர்வோரும் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர்.

பூச்சிக்கொல்லிகளின் அடிப்படை நோக்கம் உற்பத்தி பெருக்கம் அல்ல. லாப வெறிதான் அதன் மைய நோக்கம். வீரிய விதைகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லி கள் மற்றும் களைக்கொல்லிகள் நமது மண் ணை மலடாக்கி, தண்ணீரையும் காற்றையும் நஞ்சாக்கி, மனிதர்களை நோயாளிகளாக மாற்றுகிறது.

பூச்சிக்கொல்லிகளின் உலக சந்தை 20 கம்பெனிகளிடம் உள்ளது. அதில் 6 கம்பெனி கள் 75 சதவீதம் சந்தையை தங்கள் வசம் வைத்துள்ளன. இவை அனைத்தும் மரபணு மாற்று விதை வர்த்தகத்திலும் ஈடுபடுகின் றன. மான்சாண்டோ, டான்போன்ட், சிங் கென்டா ஆகியவை மரபணு மாற்ற விதை சந் தையில் 97 சதவீதத்தை கட்டுப்படுத்துகின் றன. பாயர், சிங்கென்டா ஆகியவை 38 சதவீதம் பூச்சிக்கொல்லி சந்தையை தங்கள் வசம் வைத்துள்ளன.

பூச்சிக்கொல்லி வர்த்தக கம்பெனிகளின் 2006ம் ஆண்டு வர்த்தகம் கீழ்க்காணும் விதத் தில் உள்ளது. பாயர் -ஜெர்மனி 6,698, சிங் கென்டா-சுவிட்சர்லாந்து 6,378, பிஏஎஸ்எப்-ஜெர்மனி 3,849, டிஓவி-அமெரிக்கா 3,399, மான்சாண்டோ-அமெரிக்கா 3,316, டான் போன்ட்-அமெரிக்கா 2,154 மற்றும் எம்ஏஐ-இஸ்ரேல் 1,581 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

பலகோடி டாலர் வர்த்தகத்தில் ஈடுபடும் இத்தகைய கம்பெனிகள் அரசுகளில் தங் களது செல்வாக்கை பயன்படுத்துகின்றன. சுற்றுப்புறசூழல் கேடு குறித்தும் மனிதர்க ளுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விவரங்கள் வந்தாலும், இத்தகைய பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுகள் தயங்குவதன் பின்னணி இதுதான். பூச்சிக்கொல்லிகள் அடிப்படையான பொருள் என்பது போல் விளம்பரம் செய்யப்படுகிறது. இவை உற்பத்தி அதிகரிப்பதற்காக வாங்கி பயன்படுத்தப்படு கிறது.

விதை, உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை ஒரு பாக்கேஜ் ஆக மாற்றப்படுகிறது. இத னால் கடனும் வறுமையுமே மிஞ்சுகிறது. குடும்பத்தின் உடல் நலன் பாதிக்கப்படு கிறது. ஒரு காலத்தில் நெல்லும், காய்கறி களும் விளைந்த நிலப்பரப்புகள், இன்று தேயி லையும் அமெரிக்கா, ஐரோப்பா நாட்டு செல் வந்தர்களுக்கான பூக்களும் உற்பத்தி செய்து, உணவு உற்பத்தியும் சந்தையும் அந்நியப் பட்டு, நோய்வாய்ப்பட்டு உணவுக்கு கையேந் தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி உற்பத்தி கம்பெனிகள் வளர்முக நாடுகளை குறிவைத்து செயல்படு கின்றன. பலவிதமான கட்டுப்பாடுகளையும் உறுதியுடன் அமலாக்காமல் இருப்பதும் பெருத்த லாபமும் தரும் இந்தியா உள் ளிட்ட மூன்றாம் உலக நாடுகளை தங்களுக்கு தோதான சந்தையென கண்டறிந்து அவை செயல்படுகின்றன. வளர்ந்த நாடுகள் தங் களது சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதலை கட் டுப்படுத்த தடை செய்த பல பூச்சிக் கொல் லிகளை நமது நாடு எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்துகிறது. பாரக்யூட், எண்டோசல் பான், டர்ப்யூபஸ், மெத்தாமிடோபோஸ், மிதோ மைல், மோனோகிரோட்டோபாஸ், அலுமினி யோம்பாஸ்பைட், அல்டிகார்ப், கார்போபுரான் போன்றவையை பயன்படுத்தும் போது எவ் வித பாதுகாப்பு முறையையும் பொதுவாக கையாளுவதில்லை. பாதுகாப்பாக பயன்படுத் துவதற்கான கல்வியோ, பயிற்சியோ இல் லாத தொழிலாளர்கள், இத்தகைய விஷத்தை கலக்கும் போதும், தெளிக்கும் போதும் உள்வாங்கிக்கொள்கின்றனர்.

உலக வங்கியின் 2008 அறிக்கையின்படி 3,55,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிக் கொல்லிகளால் பலியாகின்றனர். அதாவது 1000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை கள் ஒவ்வொரு நாளும் மரணமடைகின்றனர்.

பணிக்களத்தோடு மட்டும் பூச்சிக்கொல்லியின் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. பூச்சிக்கொல்லி தெளிக்கும் தொழிலாளி தனது உடையிலும் பணிக்கருவிகளிலும் அதை எடுத்து வீட்டுக்குச்செல்கிறான். அங்கு அவற்றை சுத்தப்படுத்தும்போது வீடு மாசு படுகிறது. குழந்தைகளும் இதன் தாக்குத லுக்கு ஆளாக நேரிடுகிறது. நமது நாட்டில் நிகழும் தற்கொலையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை பூச்சிக்கொல்லி உட் கொண்டு ஏற்படுகிறது.

இலங்கையில் நடத்திய ஒரு ஆய்வில், இலங்கை அரசு பென்தியோன், எண்டோசல்பான், பாரக்யூட் உள்ளிட்ட ‘கிளாஸ் 1’ பூச்சிக் கொல்லிகளை தடை செய்த பிறகு, தற் கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகள் பல வகையான புற்றுநோய்களுக்கும் காரணமாகிறது. மனிதர் களின் நரம்பு மண்டலத்திலும் மூளையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எண்டோசல்பான் பாதிப்புகள் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. கேரள அரசு ஏற்கெனவே எண்டோசல்பானை தடை செய்துள்ளது. தற்போது மேலும் 7 பூச்சிக் கொல்லிகளை தடை செய்துள்ளது.

தமிழகத்தில் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் இத்தகைய நஞ்சு களை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தாங்கள் கையாளுவது எத்தகைய பயங்கரமான விஷம் என்று அறியாமலும், அவை பூச்சிகளை, பூஞ்சைகளை மற்றும் களைகளை மட்டும் கொல்வது இல்லை; மனிதர்களையும் கொல்லும் என்று உணராமல் ஆண்களும் பெண்களும் விஷத்தை தெளிக்கிறார்கள். தோட்ட தொழிலாளர் சட்டத்தில், பணிபாதுகாப்பு குறித்த சட்ட திருத்தம் சமீபத்தில் வந்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களின் அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

தோட்டங்களிலும், சுற்று வட்டாரத்திலும் மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளின் எண்ணிக்கையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் இதர பகுதிக ளோடு ஒப்பிடும்போது, அதிர்ச்சி தரக்கூடிய அளவு அதிகமாக இருக்கும். கேரளாவில் ஏற்பட்டது போன்ற சமூக அக்கறையும் ஊடகங் களின் கவனமும் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கலாம். உலக சுகாதார அமைப்பு கிளாஸ் 1 என அறிவித்துள்ள, கேடு விளைவிக்கும் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மற்றும் களைக் கொல்லிகளின் உற்பத்தியும் பயன்பாடும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங் கவும் வேண்டும்.




உடனடியாக ஒருவரை கொன்றால் மட்டும் தான் தண்டனையா? பல்லாயிரம் பேரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று, பல தலைமுறைகளுக்கு நோய்கள் விதைத்து, இயற்கையையும், சுற்றுச்சூழலையும் விஷமய மாக்கும் கம்பெனிகளுக்கு தண்டனை ஏதும் இல்லையா?

ஜி.சுரேஷ்

கட்டுரையாளர், மாநில அமைப்பாளர் தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு

கருத்துகள் இல்லை: