வெள்ளி, 20 மே, 2011

ஸ்பெயினில் மக்கள் கிளர்ச்சி ஆட்டம் காணும் ஐரோப்பா..



தலைநகர் மாட்ரிட் உள்ளிட்ட 50 நகரங்களில் பெருந்திரள் பேரணிகள், ஆர்ப் பாட்டங்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன. மே 15 ஆம் தேதி துவங்கிய இந்த எழுச்சிமிகு போராட் டம் ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் பங் கேற்போடு தொடர்கிறது. போராட்டக்களத்தில் வந் துள்ள மக்கள் முகாமடித்து போராட்டங்களைத் தொடர்ந்துள்ளனர்.


பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான வேலையின்மை ஆகியவற்றால் அதிருப்தி அடைந் துள்ள மக்கள் அரசின் கொள்கைகளையே இந்த அவல நிலைக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டி யுள்ளனர். மக்களின் கோபத்தைக் கண்ட அரசு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தடை விதித்தது. தடையை மீறி நாடு முழுவதும் 50 நகரங்களில் மக்கள் எழுச்சி கரமான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கிரானடா, செவில்லி, பார்சிலோனா, வேலன் சியா, சரகோசா மற்றும் பால்மா டி மஜோர்கா ஆகிய நகரங்களில் மக்களின் போராட்டங்கள் அந் நகரங்களையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. “நெருக்கடிக்குக் காரணமானவர் களே பொறுப்பேற்கட் டும்”, “அவர்கள் இதை ஜனநாயகம் என்கிறார்கள், ஆனால் அப்படியில்லை” என்று எழுதப்பட்ட கோரிக்கை அட்டைகளுடன் மக்கள் நகரங்களின் வீதிகளில் வலம் வந்துள்ளார்கள்.

வரும் ஞாயிறன்று உள் ளாட்சித் தேர்தல்கள் நடக் கப்போகின்றன. இந்நிலை யில் தங்கள் எதிர்ப்பை வலு வாகக் காட்டுவதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு நெருக் கடி கொடுக்க தொழிலா ளர்கள், மாணவர்கள் மற் றும் வேலையற்ற இளைஞர் கள் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளனர். வேலை, இருப்பிடம் மற்றும் உண் மையான ஜனநாயகம் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸ் சபடேரோ கைவைத்துள் ளார். சுமார் 11 விழுக்காடு அளவுக்கு சம்பளத்தில் வெட்டு விழுந்துள்ளது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களும் போர்க் கோலம் பூண்டிருக்கிறார் கள்.



கருத்துகள் இல்லை: