திங்கள், 9 மே, 2011

உலகைச் சுற்றி.. ஒசாமா பின்லேடனின் படுகொலை : பிடல் காஸ்ட்ரோ


2001 செப்டம்பர் 11ம் தேதி நடந்த நிகழ் வுகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்தி ருக்கும். அமெரிக்க மக்களுக்கு நமது மக்கள் ஆதரவாக நின்றார்கள். நியூயார்க் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்த அந்த கொடிய தாக்கு தலை எதிர்கொண்ட அமெரிக்கர்களுக்கு மருத் துவ உதவி உட்பட ஒத்துழைப்புகள் அளித்தோம்.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட களேபரமான சூழலில் அமெரிக்க விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப் போது உடனடியாக அமெரிக்க விமானங்களுக் காக எமது தேசத்தின் விமான நிலையங் களைத் திறந்து விட்டோம்.

அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப் பதை எப்போதும் உறுதிபட எதிர்ப்பதே கியூப புரட்சியின் பாரம்பரியம்.

எமது நாட்டிலும் பாடிஸ்டாவின் கொடிய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய போராட் டத்தை தீர்மானகரமாக ஆதரித்தோம் என்ற போதிலும், எந்தவொரு பயங்கரவாத செயலா லும் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படு வதை எதிர்த்தே வந்திருக்கிறோம். கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக இத்தகைய கொள்கையை பேணிப் பாதுகாத்து வருகிற அந்த தார்மீக உரிமையே, தற்போதைய உணர் வுப்பூர்வமான சம்பவம் குறித்து கருத்து வெளியிட உந்துகிறது.

சர்வதேச பயங்கரவாதம் என்பது வன் முறை மூலமாகவும், போர் மூலமாகவும் ஒரு போதும் ஒழிக்கப்பட முடியாது என்பதை உரத் துக் கூறுகிறேன்.

பின்லேடன் என்ற நபர், பல்லாண்டு கால மாக, அமெரிக்காவின் நண்பராக இருந்தவர்; அந்த நாடு தான் அவருக்கு ராணுவப் பயிற்சி அளித்தது; அவர் சோவியத் ஒன்றியத்தின் எதிரி; சோசலிசத்தின் எதிரி. ஆனால் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நிராயுத பாணியான ஒரு மனிதனை - அவன் தனது சொந்த உறவினர்களால் சூழப்பட்டு இருக்கிற தருணத்தில், சுற்றி வளைத்துப் படுகொலை செய்வது பயங்கரமானதே! உலகின் சக்தி வாய்ந்த நாட்டின் அரசாங்கம் செய்திருக்கிற காரியம் இதுதான். பின்லேடனின் மரணத்தை அறிவித்த ஒபாமா, மிகக் கவனமாக வரையறுக் கப்பட்ட தனதுபேச்சில் கூறினார்:

“... உலகில் இதற்கு முன்பு பார்த்திராத அளவிற்கு மோசமான காட்சிகளைப் பார்த்து விட்டோம். இரவு உணவு நடக்கும் மேசையில் காலியாகக் கிடக்கும் இடம். தங்களது அம் மாவோ, அப்பாவோ இல்லாமல் வளர நிர்ப்பந் திக்கப்பட்ட குழந்தைகள். தங்கள் குழந்தையின் தழுவலை அனுபவித்து உணரும் வாய்ப்பு பறிக்கப்பட்ட பெற்றோர்கள். சுமார் 3000 குடிமக்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார்கள். நமது இதயங்களில் பெரும் துளையை ஏற்படுத்திச் சென்றார்கள்.”

மேற்கண்ட வார்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை, உண்மையானவை; ஆனால் இந்த உண்மை, இராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்காவால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடிய போர்களால் நூற்றுக்கணக்கான, ஆயி ரக்கணக்கான குழந்தைகள் தங்களது அம்மாக்களையும், அப் பாக்களையும் இழந்து அனாதைகளாக வளர நிர்ப்பந்திக்கப் பட்டார்களே; தங்களது குழந்தையின் தழுவலை அனுபவித்து உணரும் வாய்ப்பு பறிக்கப்பட்டவர்களாக எண்ணற்ற பெற்றோர் மாற்றப்பட்டார்களே, அந்த கொடூரத்தை நினைவு கூருவதில் இருந்து எந்தவொரு மாண்புமிகு மனிதனையும் தடுத்துவிடாது.

இராக், ஆப்கானிஸ்தான், வியட்நாம், லாவோஸ், கம் போடியா, கியூபா, இன்னும் உலகின் பல்வேறு நாடுகளின் கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான குடிமக்கள் பறித்துச் செல்லப்பட்டு விட்டார்கள்.

இன்னும் லட்சக்கணக்கான மனிதர்களின் மனங்களில் மனித உயிர்கள் அழிக்கப்பட்ட பயங்கர காட்சிகள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. கியூப எல்லையில் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட குவாண்ட நாமோவில் இந்தப் பயங்கரத் தின் அமைதி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட குடி கொண்டிருக்கிறது. சொல்லமுடியாத அளவிற்கு கொடிய சித்ரவதையின் வலி அது. நாகரிக சமூகங்கள் என கூறிக் கொள்ளப்படுபவர்களால் கடத்தப்பட்டு, ரகசியச் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டவர்கள், இங்கு இருப்பவர்கள்.

ஒசாமாவை, தற்போது பாகிஸ்தானின் வசம் இருக்கும் அவரது குழந்தைகள் மற்றும் மனைவிகள் கண் முன்னால், 20 கோடி மக்களைப் பெற்றுள்ள அந்த முஸ்லிம் தேசத்தின் சட்டங்களை மீறி, அந்த நாட்டின் கவுரவத்தை சிதைத்து, அதன் மதப் பாரம்பரியங்களை இழிவுபடுத்தி கொன்றோம் என்று ஒபாமா ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

எந்த விசாரணையும் இன்றி, எந்த சட்டத்தின் அடிப்படை யிலும் அன்றி அவர் கொல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பதை விளக்குவதில் இருந்து அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் எப்படித் தடுக்கப்போகிறார் ஒபாமா? உலகம் முழுவதிலும் அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்படப் போவதை எப்படித் தடுக்கப் போகிறார்?

2002 ஜனவரி 28ம் தேதி சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் டான் ராதர் எழுதினார்: 2001 செப்டம்பர் 10ம் தேதி, அதாவது உலக வர்த்தக மையக் கட்டிடமும், பெண்ட கன் கட்டிடமும் தாக்குதலுக்குள்ளாவதற்கு சரியாக ஒரு நாள் முன்பு, டி.வி.நெட்வொர்க் செய்தியில், பாகிஸ்தானில் உள்ள ஒரு ராணுவ மருத்துவமனையில் ஒசாமா பின்லேடன் டயாலிசிஸ் சிகிச்சையில் இருக்கிறார்; அவர் அழகான குகைகளுக்குள் வசிப்பதற்கோ, மறைவிடங்களில் வசிப்ப தற்கோ உடல்ரீதியாக தகுதியானவர் இல்லை.

அவரைப் படு கொலை செய்ததும், உடலை கடலில் தூக்கி எறிந்ததும் அச்சத்தின் வெளிப்பாடு; அவரை இன்னும் பயங்கர நபராகக் காட்டும் பாதுகாப்பின்மை உணர்வின் வெளிப்பாடு.

தகவல் தெரிந்ததும் ஏற்பட்ட கொண்டாட்ட உணர்வையும் மீறி, அமெரிக்கப் பொதுமக்களும் கூட, ஒசாமா கொல்லப்பட்ட முறையை விமர்சிப்பார்கள்; ஏனென்றால், குடிமக்களைப் பாது காப்பதில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று, தங்களுக்கு எதிரான பகைமை உணர்வையும், பழி உணர்வையும் தங் களது தேசம் மேலும் தீவிரப்படுத்திவிட்டது என்ற உணர் வுக்கு அவர்கள் ஆட்படத் துவங்கிவிட்டார்கள்!

(கிராண்மா, மே 4)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

3 கருத்துகள்:

hariharan சொன்னது…

அருமையான கட்டுரை.

நிஜமாக பயங்கரவாதத்தை போர்மூலமும் ஆயுதம் கொண்டும் அடக்க முடியாது.

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் சொன்னது…

தீவிரவாதத்தை பயங்கரவாததினால் அழிக்கமுடியாது. மிகவும் அருமையான பதிவு

விடுதலை சொன்னது…

ஹரிஹரன்

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம்
ஆகிய இருவருக்கும்.

நிச்சயமாக லாபவெறி கொண்ட அமெரிக்க ஏகாதிப்பத்தியம் அழியும் வரை உலகத்தில் அமைதி இல்லை