வெள்ளி, 3 ஜூன், 2011

சன் டி.வி.க்காக துணிகரக் கொள்ளை சூறையாடப்பட்ட பிஎஸ்என்எல்நாட்டின் மிகப் பெரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில், நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள் ளையை தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிகழ்த்தி யிருப்பது அம்பலமாகியுள்ளது. 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என். எல்.லைப் பணித்த தயாநிதிமாறன், அந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் அல்லாமல் சென்னை பி.எஸ். என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைத்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டின் குருமூர்த்தி எழுதியுள்ள செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளது.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு முழு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும் பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதி யில் ‘ரகசியமாக’ கேபிள்கள் பதிக்கப் பட்டுள்ளன. வீட்டிலிருந்து குடும்ப வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ். என்.எல். நிறுவனத்துக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது என இச்செய்தியில் விவ ரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் ரூ.700 கோடி லஞ்சம் பெற்றார் என புகார்கள் வலுத்துள்ள நிலை யில், அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய் வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக் குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-லேயே கடிதம் எழுதியதும் தெரியவந்துள்ளது.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னை யில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னு டைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட் டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலை பேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னு டைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பு களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல் பட்டவை. அடுத்த 300 இணைப்பு கள் 24371500 முதல் 24371799 வரையி லானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கிய தால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப் புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களை விட அதிக விரைவாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் வீடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிட்டல் வழியிலான தகவல் களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்பரன்சிங் சேவை அளிக்க வும் ஆடியோ, வீடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப் புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறை யில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் ‘அபாரமான உத்தியால்’ இவை அனைத்தும் ஒரு பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத் துக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத வண் ணம் மிகமிக ரகசியமாக வைக்கப்பட் டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத் துக்குப் பயன்பட்டன என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப் பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.

இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்க வைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதி ரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது.

24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத் தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி யானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப் பட்டிருக்கும்?

2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரை யில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன் படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக் கில் பார்த்தால், பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சி.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்ன மும் துல்லியமாக - ரூ.440 கோடியை விட - அதிகமாக இருக்கக்கூடும்.

இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளி தழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலை பேசி இணைப்புகள் குறித்து துல்லிய மான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத் துள்ளன என்று சி.பி.ஐ. அறிக்கை தெரிவிக்கிறது.

சிக்கியது எப்படி?

மு.க.அழகிரி தொடர்பாக தினகரன் நாளேட்டில் வெளியான செய்தியை யொட்டி ஏற்பட்ட குடும்ப மோதல் சூழ லில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ஓரங்கப்பட்டி ருந்தார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல் களைச் சேகரித்தது.

மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் எந்த முயற் சியும் மேற்கொள்ளவில்லை. தயாநிதி மாறனின் துறைக்கு ஆ. ராசா அமைச்ச ரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத்தொடர்புத்துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.

இதற்கிடையே 2009-ல் மக்க ளவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப் பட்டது.

பின்னர், 2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத்துறையைப் பெற தயா நிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்று வரை அந்தப்பதவியில் நீடிக்கிறார்.

குடும்பத்துக்குள் பூசல் தணிந்து விட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவ னிக்கப்படாமல் தொலைத்தகவல் தொடர்புத்துறையில் எங்கோ தூங்கு கிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ. ராசா பதவியை ராஜினாமா செய்தார். கபில் சிபல் அத்துறை அமைச்சரானார். அன் றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.

ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சர வைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகி யும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

                                                                                                                                          தீக்கதிர்

கருத்துகள் இல்லை: