திங்கள், 20 ஜூன், 2011

ஐரோப்பாவில் தொடங்கி ஆப்பிரிக்காவில் மக்கள் கிளர்ச்சி

மக்களை உயிரோடு தோலுரித்து விடுவார்கள்

அரசின் நடவடிக்கை கள் குறித்து மக்களுக்கு எந்தவித மாயையும் இருக்க வேண்டியதில்லை. அவர்களும், முதலீட்டாளர்களும் சேர்ந்து அமர்ந்து உயிரோடு மக்களின் தோலை உரித்து விடுவார்கள் என்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித் துள்ளது.

பொருளாதார நெருக் கடியைச் சமாளிக்கிறோம் என்ற பெயரில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், ஐரோப் பிய யூனியன் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்ப டையில் மக்கள் மீது கிரீஸ் அரசு சுமையை ஏற்றியுள் ளது. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதி ராக லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டு வீதிகளில் போராடி வருகிறார்கள். தொழிற்சங்கங்களும் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல வடிவங்க ளில் போராடி வருகின்றன.

இத்தகைய போராட் டங்களில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்று வருகிறது. கட்சியின் செயலாளர் அலெகா பாபரிகா மக்களைப் போராட்டப் பாதையில் தீவிரமாக இறங்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார். பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதாக அரசு சொல்லுவதெல்லாம் வெறும் பூச்சு வேலைகள் தான். பிரச்சனையைத் தீர்ப் பதற்கான எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், வேலை வாய்ப்பின்மை அதிகரிப் பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இழந்ததை தங் கள் கைகளாலேயே மக்கள் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டா கவே கிரீஸ் மக்கள் போராட் டக்களத்தில் உள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் ஆகியவற் றைக் குறிவைத்தே அரசின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப, கொள்கைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல், நிதி யமைச்சரை நீக்கியுள்ளார் பிரதமர் பாப்பாண்ட்ரூ.

அடுத்த கட்ட நிதிக்கு ஒப்புதல் அளிக்கப் போகும் ஐரோப்பிய யூனியன், கூடு தல் சிக்கன நடவடிக்கை களுக்கு பரிந்துரை செய்யப் போகிறது. ஏற்கெனவே, பல் வேறு அரசு நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங் களுக்கு அடிமட்ட விலை யில் விற்க கிரீஸ் அரசு ஒப் புக் கொண்டுள்ளது. இது அந்த நிறுவனங்களின் தொழி லாளர்கள் மட்டுமல்லாது, மக்கள் மத்தியில் கடும் ஆத் திரத்தைக் கிளப்பியுள்ளது.

உடனடியாகத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளி யிட்டு, நாடு செல்லப் போகும் பாதையை மக்களே தேர்வு செய்யும் முடிவே இப்போ தைய சிறந்தது என்று கம் யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத் துள்ளன. ஒன்றுபட்ட தேசிய அரசை அமைக்கலாம் என்ற ஆலோசனைகள், அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந் துள்ளன.

அடிமைகளுக்கான அரசியல் சட்டம் தேவையில்லை  மொராக்கோவில் மக்கள் கிளர்ச்சி

மன்னர் ஆறாவது முகமது முன்வைத்திருக்கும் அரசி யல் சட்டத் சீர்திருத்த முன்மொழிவுகளுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய அரசியல் சட்டம் குறித்த பொது வாக்கெடுப்பு மொராக்கோ நாட்டில் ஜூலை 1 ஆம் தேதியன்று நடக்க விருக்கிறது. இந்த சட்டத்தின்படி, மன்னரே அரசு, ராணு வம் மற்றும் மதம் ஆகிய மூன்றிற்கும் தலைவராக இருப் பார். இந்த ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்திற்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தங்களுக்கு ஓரளவு பங்கு கிடைக்கும் என்பதால்தான் இந்த ஆதரவு என்று மாற்றுக் கருத்துள்ள எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன.

நாட்டில் ஜனநாயக உரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் கோரி பிப்ரவரி 20 என்ற இயக்கம் உருவாகியுள்ளது. மன் னரின் இந்தத் திட்டங்களுக்கு அந்த இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட எதிர்ப்புப் பேரணியையும் நாட்டின் தலைநகர் கசாப்லான்காவில் நடத்தியுள்ளது. அப்போது, அடிமைகளுக்கான அரசியல் சட்டம் தேவையில்லை என் றும், சர்வாதிகாரத்தை அமைக்கும் சட்டத்தை ஏற்க மாட் டோம் என்றும் மக்கள் முழக்கமிட்டனர்.


மன்னரின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிப்ரவரி 20 இயக்கத்தலைவர்களில் ஒருவரான அகமது மெடியானி, நாங்கள் சோர்ந்து போகவில்லை. சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் போது மானதல்ல. மன்னராட்சியிலிருந்து நாடாளுமன்ற ஜன நாயகத்தை நோக்கிச் செல்ல இந்த புதிய அரசியல் சட்டம் உதவாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

முதன்முறையாக தேசிய அளவிலான போராட்டங்கள் பிப்ரவரி 20 அன்று நடத்தப்பட்டதால், மக்கள் பங்கேற் கும் இந்த இயக்கத்திற்கு பிப்ரவரி 20 என்றே பெயரிட்டுள்ளனர். தலைநகர் கசாப்லான்காவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த இந்த இயக்கம், மீண்டும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட் டுள்ளது

கருத்துகள் இல்லை: