சனி, 10 செப்டம்பர், 2011

லோக்பால் சட்டம் வலுவாக வரவேண்டுமானால்...


‘ஜன் லோக்பால்’ சட்ட முன்வரை வை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற் கொண்டுள்ள பட்டினிப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு அலை எழுந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே யிருந்து, குறிப்பாக இப்பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடையேயிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொடங்கிய முதல் பட்டினிப் போராட்டத்துக்குப் பிறகு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வேகம் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அர சின் அணுகுமுறையும், இந்த அரசு ஊழலைத் தடுக்கத் தவறியதுமாகச் சேர்ந்து நாடெங்கும் பரவலான கோபம் கிளறிவிடப்பட்டுள்ளது. முதலாவதாக, இந்த அரசை ஊழலில் ஊறிப்போன அரசாக மக்கள் பார்க்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெ ரும் ஊழல் மலிந்த அரசு இதுதான். அப் படிப்பட்ட ஒரு அரசுக்கு ஒரு “தூய்மை யான” பிரதமர் தலைமை தாங்குகிறார் என்ற முரண்பாடு நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்களின் உணர்வில் ஆழமாக இறங்கி யிருக்கிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக நடந்த ஊழல் நடைமுறை களை, அரசுக்கு இதனால் கொஞ்சம் கூட இழப்பு ஏற்படவில்லை எனக் கூறி நியா யப்படுத்துவதில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்ட விதம், ஆழமான ஊழலில் சிக்கி யிருக்கிற இந்த அரசால் இதில் எவ்வகை யான அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பெரும்பகுதி மக்க ளின் அச்சம் சரியானதே என்று உறுதிப் படுத்தியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கானாலும் சரி, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியானாலும் சரி, இரண்டிலேயுமே, அரசாங்கத்தைச் சார்ந்திராமல் சுயேச்சையாகச் செயல்படு கிற உச்சநீதிமன்றத்தாலும், தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவல ராலும்தான் மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரணையைத் தொடங்கவும், குற்றவா ளிகள் மீது வழக்குத் தொடரவும் முடுக்கி விடப்பட்டது.

ஒரு வலுவற்ற, பயனற்ற லோக்பால் சட்ட முன்வரைவைக் கொண்டுவர அரசு முயன்றதால் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலானது. அரசு முன்வைத்துள்ள சட்ட முன் வரைவு, லோக்பால் விசாரணை வட்டத்திலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கிறது. லோக்பால் அமைப்பு எவ் வாறு ஏற்படுத்தப்படும் என்பதற்கான நடைமுறை, அதனை ஒரு சுயேச்சை யான அமைப்பாக செயல்படவிடாது. இந்த சட்டமுன்வரைவில் உள்ள விதிக ளின்படி அமைக்கப்படுகிற லோக்பால் அமைப்பு சுயேச்சையாகச் செயல்பட முடியாது. அரசாங்க மட்டத்திலான ஊழல் நடைமுறைகளில் தொடர்புடைய பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும், வர்த்தக நிறுவனங்கள் மீதும் லோக்பால் அமைப்பு நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை.

ஆணவத் தாக்குதல்

இரண்டாவதாக, பட்டினிப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் 16 அன்று காலையில் அன்னா ஹசாரேயும் அவரது துணைவர்களும் கைது செய்யப் பட்ட விதம் தொடர்பாக ஐ.மு.கூட்டணி அரசும் காங்கிரஸ் தலைமையும் விசார ணைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஊழலுக்கு எதிராக போராடுகிற ஒரு வரை, ஒரு ஊழல் அரசு திஹார் சிறையில் அடைத்ததை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். அமைதியான முறையில் எதிர்ப் புத் தெரிவிப்பதற்கான குடிமக்களின் உரிமைகள் மீது ஆணவத்தோடு தொடுக்கப் பட்ட அந்தத் தாக்குதல் காரணமாக மக்களிடையேயும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் இந்த அரசு தனிமைப்பட்டுப் போயிருக்கிறது.

கருத்துகள் இல்லை: