செவ்வாய், 15 நவம்பர், 2011

இந்திய பொருளாதர அடியாள் மன்மோகன்சிங் ஒப்புதல் வாக்குமூலம்...


முன்பு விலைவாசி உயர்வு, அதனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லை ஆகியவை பற்றி யாராவது கேட்டால், உலக நாடுகளோடு ஒப்பிடு கையில் இந்தியாவில் அப்படியொன்றும் கவலையளிக்கத்தக்க அளவுக்கு விலை உயர வில்லை என்று பதிலளிப்பார் பிரதமர் மன்மோகன்சிங். அப்புறம், விலை உயர்வு என்பது வளர்ச்சியின் வெளிப்பாடுதான் என்று சொல்ல ஆரம்பித்தார். “பொருளாதார வல்லுநர்” என்பதால் தாம் சொல்வதையெல்லாம், மக்கள் நம்பி விட மாட்டார்கள் என்ற ஞானம் இப்போது ஏற்பட்டிருக்கிறது போலும் - விலைவாசி உயர்ந் திருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.



உலகமயமாக்கல் கொள்கை எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார் அதன் தீவிர காதலர்

முன்னர் இதே கேள்விக்கு பதிலளிக்கையில் “இது தற்காலிகமானதுதான்; பணவீக்க விகிதம் விரைவில் ஒற்றை இலக்கத்திற்குத் திரும்பிவிடும்,” என்று புள்ளிவிவர விளையாட்டில் இறங்கிவிடுவார். இப்போது, “தற்போதைய பணவீக்கம் பிடிவாதமாக நிற்கிறது என்பது உண்மைதான். இது மட்டுப்படுவதற்கு அதிகக் காலம் ஆகும்.” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தடாலடியாக இந்தியர்கள் செல்வந்தர்களாக மாறி வருவதால் தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது.அமெரிக்காவின் குரலில் பேசியுள்ளார் ஏற்கனவே இந்தியர்கள் அதிகம் உண்பதால்தான் உணவு நெருக்கடி ஏற்படுகிறது என்று பொருக்கிதனமாக பேசியது அமெரிக்கா என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் .

அரசாங்கத்திற்கு விலையைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிற பொறுப்பு இருக்கிறது என்பதைக் கொள்கைப் பூர்வமாகவே எதிர்ப் பவர் இவர். விலைகளைச் சந்தை சக்திகளின் கையில் விட்டுவிட வேண்டும் என்பதே இவரது மந்திரம். இந்த விமானப் பயணத்தில் முதல் முறையாக, விலைவாசி உயர்வின் பின்னணி யில் சந்தை சக்திகள் இருக்கின்றன என்று கூறி யிருக்கிறார். வழக்கம்போல் “பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 முதல் 8 விழுக்காடு வரை யில் அதிகரிக்கிறது என்றால், தனி நபர் வருமானமும் 6 முதல் 6.5 விழுக்காடு வரையில் அதிகரிக்கிறது.” என்று புள்ளிவிவர மாய்மாலத் தையும் காட்டியிருக்கிறார். எந்தத்தனிநபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார்? கார்ப் பரேட் கனவான்களின் தனி நபர் வருமானம் நிச்சயமாக அதிகரித்திருக்கும்; ஏழை மக்களின் தனி நபர் வருமானம் முன்பிருந்ததைவிட சரி வடைந்திருக்கும் என்பதே உண்மை. அதற்கொரு புள்ளிவிவரம் தயாரிக்க இந்த அரசு முன் வரப்போவதில்லை.

 மன்மோகன் ஒப்புக்கொண்டுள்ள மற்றொரு உண்மை: “மானியங்கள் தொடர்பாக அரசு எடுத்த கறாரான முடிவுகள் எரிபொருள் விலை களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.” ஒவ் வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படும்போதெல்லாம், இதனால் அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துவிடும் என்று மக்கள் இயக்கங்கள் எச் சரித்துவந்துள்ளன. அதைக் காதில் போட்டுக் கொள்ளாதவர், இப்போது இவ்வாறு கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் பிரதமர் உண்மைகளை ஒப்புக்கொள்வது நிலைமையை மாற்றும் எண் ணத்துடன் அல்ல. மக்கள் இதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன்தான். அதனால்தான், உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோலிய விலையில் மாற் றம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்ற பழைய பல்லவியை மறுபடியும் பாடியிருக்கிறார். உலக விலை நிலவரம் உயருமானால், மறுபடியும் இங்கே விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இதுவரையில் 11 முறை பெட் ரோலியப் பொருள் விலை உயர்த்தப்பட்டது பற்றிய எவ்வித உறுத்தலும் இல்லாதவராக அவர் இப்படிக் கூறியிருப்பது, எளிய மக்களின் வாழ்க்கை நிலை மீது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எள்ளளவும் அக்கறையில்லை என் பதன் வெளிப்பாடுதான்.

கருத்துகள் இல்லை: