புதன், 8 பிப்ரவரி, 2012

நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல!


2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கை மற்றும் கணக்குக்குழு குற்றம் சாட்டியது. ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோர் வாதிட்டனர். ஆனால் முறைகேடாக ஒதுக்கப் பட்ட உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்யு மாறு உத்தரவிட்டதோடு, இந்த உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கு மாறும் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

2ஜி ஊழலைத் தொடர்ந்து, தேசத்தை உறைய வைக்கும் வகையில் வெளியான ஊழல், விண் வெளி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தாகக் கூறப்படும் ஊழலாகும். இதன் மூலம் அர சுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட் ரிக்ஸ் நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற உடன்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்புவ தாக இருந்தது. இஸ்ரோ அமைப்பு பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். ஆனால் பிரதமர் அலுவலகம் தமக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்பதுபோலக் காட்டிக் கொண்டது.

இதுதொடர்பாக விசாரணை எதற்கும் உத்தர விடப்படவில்லை. மாறாக துறைவாரியாக நடத் தப்பட்ட விசாரணையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட சில விஞ் ஞானிகள் முறைகேட்டிற்கு பொறுப்பாக்கப்பட் டனர். இவர்களுக்கு அரசு சார்ந்த பதவி எதையும் ஒதுக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருப் பதாக செய்திகள் வெளியாகின.

தம் மீதான குற்றச்சாட்டை மறுத்த மாதவன் நாயர், இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன்தான் இத்தகைய அவதூறை செய்ததாகக் கூறினார். பதிலுக்கு ராதாகிருஷ் ணன், மாதவன் நாயரை குறை கூறினார். இது ஏதோ முன்னாள் தலைவருக்கும், இன்னாள் தலைவருக்கும் இடையிலான பிரச்சனைபோல சித்தரிக்கப்படுகிறது.

நாட்டிற்கு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட வகை செய்யப்பட்ட இந்த உடன்பாட்டை ரத்து செய்வதாக மத்திய அரசு அவசரஅவசரமாக அறிவித்தபோதும், இந்த உடன்பாட்டிற்குக் காரணம் யார்? பலன் பெற்றவர் யார்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமை யாளர் ஏற்கெனவே இஸ்ரோவில் பணியாற்றி யவர். இந்த ஊழலில் அதிகாரவர்க்கம், அரசியல் வாதிகளின் கூட்டுச்சதி உள்ளது. முழுமையான விசாரணை நடத்தப்படும்போதுதான் ஊழல் குறித்த முழுப் பின்னணி வெளிவரும். தவறிழைத் தவர்கள் தண்டிக்கப்படுவதோடு, எதிர்காலத் தில் இத்தகைய முறைகேடுகள் தடுக்கப்படவும் வாய்ப்பு உருவாகும்.

விஞ்ஞானிகளின் அறிக்கைப் போரோடு இந்த விவகாரத்தை அமுக்கிவிட மத்திய அரசு முயல்கிறது. 2ஜி முறைகேடு போல இந்த ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண் டும். ஊழல் சம்பந்தப்பட்ட தொகை மட்டும் பெரி தல்ல. மிகப்பெரிய மனிதர்களும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புண்டு. நாட்டு மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

கருத்துகள் இல்லை: