செவ்வாய், 2 ஜூன், 2009

காங்கிரஸ்-பாஜக- உலகமயம்

“தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கம்யூனிஸ்ட்டுகள்தான் காரணம். மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கம் யூனிஸ்ட்டுகள் குடைச்சல் கொடுத்தனர். கம்யூனிஸ்ட்டு களைத் தண்டிப்பதற்காக மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து விட்டார் கள்’’ என்று அத்வானி கூறினார்.

(தினகரன், 27.5.09)

தங்கள் தோல்விக்கு தங்களிடம் இருக்கும் குறைகள், குற்றங்கள் ஏதாவது காரணமா என்று யோசிக் கவே பாஜகவினர் தயாரில்லை போல் தெரிகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது, அதனால் நாங்கள் தோற்றுவிட்டோம் . சரி, காங்கிரஸ் ஏன் வெற்றி பெற்றது? கம்யூனிஸ்ட் டுகளைத் தண்டிக்க மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துவிட் டார்கள், எப்படி இருக்கிறது பாருங் கள், இவரது வாதம். இவர்களிடம் பிரச்சனை எதுவும் இல்லையாம். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டு கள் மட்டும்தான் பிரச்சனையாம்.

ஒரு வாதத்திற்காக, அவர் சொல்வது சரி என்றே வைத்துக் கொள்வோம். பல கேள்விகள் எழுகின்றன. 

கம்யூனிஸ்ட்டுகளைத் தண்டிக்க நினைத்த மக்கள் ஏன் பாஜக விற்கு வாக்களிக்கவில்லை? பாஜக என ஒரு கட்சி இருப்பதையே மறந்து விட்டார்களா? அல்லது பாஜகவை ஒரு கட்சியாகவே மக்கள் கருத வில்லையா? அல்லது கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் செய்த தெல்லாம் சரி என்று மக்கள் நினைப்பதாக அத்வானி கூறு கிறாரா? 

பொதுத்துறை வங்கிகள், இன் சூரன்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங் களை தனியார்மயமாக்க ஐமுகூ அரசாங்கம் முயற்சித்த போது அதை கம்யூனிஸ்ட்டுகள் தடுத்ததைக் குடைச்சல் என்கிறாரா? மக்களின் வாழ்நாள் சேமிப்புகளை தனியாருக்குத் தூக்கிக் கொடுக்கும் மன்மோகன்சிங்கின் முயற்சியை கம்யூனிஸ்டுகள் தடுத்ததை குடைச் சல் என்கிறாரா? தேசத்தை அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடி மைப்படுத்தும் அணுசக்தி ஒப்பந் தத்தை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்த தைக் குடைச்சல் என்கிறாரா? 

இவற்றையெல்லாம் அத்வானி குடைச்சல் என்று சொல்வாரெனில், இந்த மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை அத்வானியும் அவரது கட்சியும் ஆத ரிக்கின்றனர் என்பதுதானே பொருள்? அது சந்தேகத்திற்கு அப் பாற்பட்ட உண்மை. ஏனெனில், கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் அந்தப் பொருளாதாரக் கொள்கை களை எதிர்க்கவில்லை என்பது மட்டுமின்றி, தாங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் இதே கொள் கைகளை அமல்படுத்தியவர்கள், அமல்படுத்த முயற்சித்தவர்கள். அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு வெறும் நாடகம் என்பது தேர்தலின் போது அவர்கள் அடித்த பல்டியிலேயே தெரிந்துவிட்டது. 

ஆனால், ஒரு நாடகமாகக் கூட மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை மதவெறியர்கள் எதிர்க்கவில்லை என்பதை கவ னிக்க வேண்டும். 

அது இருக்க, காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு உண்மையில் என்ன தான் காரணம்? ஏதேனும் ஒரு கட்சி காரணமென்றால் அந்தக் கட்சி பாஜகதான். இதை பலமுறை, பலர் வலியுறுத்திச் சொல்லி விட் டார்கள்.

அதைவிட முக்கியம் காங்கிரஸ் பெற்ற வெற்றி ஏதோ அமோக வெற்றி போல், அதற்கு ஆதரவாக தேசமெங்கும் அலை வீசியது போல் சில ஊடகங்கள் சித்தரிப்பது உண்மையல்ல.

கடந்த முறையைவிட வெறும் 2.1 சதவீதம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. அதா வது இம்முறை அது பெற்ற வாக் குகள் 28.6 சதவீதம். 2004ல் 26.5 சதவீதம் வாக்குகளைப் பெற்று 145 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் இம்முறை 206 தொகுதிகளில் வென்றுள்ளது. அதாவது 28.6 சத வீத வாக்குகளைப் பெற்று 36 சத வீத தொகுதிகளைக் கைப்பற்றியுள் ளது. 

“தன்னுடைய பலத்தை 61 எம். பி.க்கள் அதிகப்படுத்திக் கொண்ட போதும், காங்கிரஸ் இதை 2004 ஐ விட வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே அதிகமாகப் பெற்று சாதித்துள்ளது. 

அது இம்முறை 28.6 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. கிட்டத் தட்ட இதே அளவுதான் அது 1999 தேர்தலிலும் பெற்றது. ஆனால், அத் தேர்தலில் பாஜக கூட்டணி வென் றது. 

1999ல் காங்கிரஸ் பெற்ற ஒவ் வொரு சதவீத ஓட்டுக்கும் 4 தொகு திகள் வென்றது. 2004ல் அது 5.5 ஆகவும், 2009ல் அது 7.2 தொகுதி களாகவும் இருக்கிறது. 

(தி ஹிந்து, 26.5.09) 

காங்கிரஸ் பெறும் ஒவ்வொரு சதவீத வாக்கும் பெற்றுத் தரும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போயிருக் கிறது. இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறியதுதான். ஆந்திராவில், மராட் டியத்தில், தமிழகத்தில் இதுதான் நடந்தது. மேலும், அது தன்னுடைய ஆற்றலை உத்தரப்பிரதேசம், ராஜஸ் தான், கேரளம் ஆகிய முக்கியமான மாநிலங்களில் குவி மையப்படுத் தியதும் ஒரு காரணம். 

“இப்படி வாக்குகளின் சத வீதத்தை விட அதிக சதவீத தொகு திகளை வெல்வதை ஏதோ அலை அடிப்பதாகவோ அல்லது மக்க ளின் மனதில் பெரும் மாற்றம் ஏற் பட்டு விட்டதாகவோ அல்லது தேசிய அளவில் மக்கள் ஒரு பக்கமி ருந்து இன்னொரு பக்கத்திற்குச் சாதக மாக மாறிவிட்டார்கள் என்றோ குழப்பிக் கொள்ளக் கூடாது.

(தி ஹிந்து) 

மொத்தமுள்ள 20 பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் 10 மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், அரி யானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க் கண்ட், ஜம்மு - காஷ்மீர், மராட்டியம், ஒரிசா,) சென்ற முறையைவிட குறைவான வாக்குகளையே பெற் றுள்ளது. 

காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றிக்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. முன்னரே பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள படி, அது தன் ஆட்சி காலத்தில் இடதுசாரி களின் நிர்ப்பந்தத்தால் நிறைவேற் றிய மக்கள் நலத்திட்டங்களும் ஒரு முக்கியமான காரணம். மதவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணம். 

சில ஊடகங்களைப் போலவே அத்வானி கம்யூனிஸ்ட்டுகளைக் காரணம் கற்பிப்பது உலகமயக் கொள்கைகளை கண்மூடித்தன மாக காங்கிரஸ் அமல்படுத்து வதற்கு உதவுகிற வேலைதான். வரம் கொடுத்த மக்களின் தலை யிலேயே கைவைக்கும் வேலையை காங்கிரஸ் செய்யுமா னால் அதை யாராலும் காப்பாற்ற முடியாது. 

அசோகன் முத்துசாமி

கருத்துகள் இல்லை: