புதன், 15 ஏப்ரல், 2009

பாஜக தேர்தல் அறிக்கை பழைய மொந்தையில் பழையகள்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பதினோரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, பாஜக பதினைந்தாவது மக் களவைத் தேர்தலுக்காகத் தன்னுடைய சொந்தத் தேர்தல் அறிக்கையை வெளி யிட்டிருக்கிறது. இத்தனை ஆண்டு கால மும், பாஜக, தன்னுடைய சொந்த ஆசை அபிலாசைகளை மறைத்து வைத்துக் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் திட்டத்தைத்தான் வெளியில் கூறிக் கொண்டிருந்தது. தே.ஜ.கூட்டணிக்கும் பாஜக விற்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மூடி மறைப்பதற்கா கவே இவ்வாறு இதுநாள்வரை பாஜக நடந்து கொண்டிருந்தது. ஒருபக்கத்தில், ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் அரசியல் அங்கமாகச் செயல்பட்ட பாஜக, அதனு டைய கடும் மதவெறி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அதனைச் சார்ந்தவர் களின் ஆதரவைக் கோருகிறது. மறுபக் கத்தில், அவ்வாறு மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதன் மூலமாக, தன்னுடைய தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்டு, கூட் டணியைப் பலவீனப்படுத்தியது. இதன் மூலமாக, மத்தியில் அது ஆட்சிக்கு வரு வதற்கான வாய்ப்புகள் வெகுதூரம் வில கிச் சென்றுள்ளது.

பாஜக மீண்டும் தன்னுடைய குரூரமான மதவெறி நிகழ்ச்சிநிரலைப் பின்பற் றப்போவதாக அறிவித்துள்ளது. ஆர்எஸ் எஸ் இயக்கமானது, அயோத்தியில் தாவா வுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டு வதற்கு எந்தக் கட்சி ஆதரவு அளிக்கிறதோ அந்தக் கட்சிக்குத்தான் தங்கள் ஆதரவு என்று வெளிப்படையாகவே அறி வித்துள்ளது. கூடுதலாக, பாஜகவும், மக்கள் மத்தியில் இந்து மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தி “இந்து வாக்கு வங்கி” யை ஒருமுகப்படுத்தாவிடில், மத்தியில் ஆட்சியில் அமர முடியாது என்ற முடி விற்கு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில், எந்த அளவிற்குக் குரூரமாக மதவெறித் தீயை அது மூட்டி யது என்பதை அறிவோம். கர்நாடகாவில் ஸ்ரீ ராம் சேனையின் காட்டுமிராண்டித்த னம், இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சமீ பத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் அதன் வேட்பாளர் கக்கிய மதவெறி நச்சுக் கருத்துக்களுக்கு பாஜக வெளிப்படையாகவே ஆதரவு அளித்து அவற்றைச் சரியென்று ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்தே, மதவெறிப் பிரச்சாரத்தில் அதற்கு இருக்கும் உள் ளார்ந்த அபிலாசைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

2009ஆம் ஆண்டுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையானது, ‘ராம நவமி’ யன்று வெளியிடப்பட்டிருப்பது, அதன் சித்தாந்தத் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அதன் தேர்தல் அறிக்கையானது, “இந்தியாவின் கடந்தகாலத்தை மீண்டும் நிறுவுவோம்” என்னும் தலைப்புடன் தொடங்கி, “நம்முடைய கலாச்சாரப் பாரம் பரியத்தைக் கட்டிக்காப்போம்” என்னும் தலைப்புடன் முடிவடைகிறது. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று, அதன் முக்கியப் பகுதிகள் என்று ஒரு சிறுபிரசுரம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதில் “நாட்டின் நாகரிகத்தைப் பாதுகாத்திடு வோம்” என்ற தலைப்பில் ஒரு பிரிவு காணப்படுகிறது. இதில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் “பிரம்மாண்ட மான ராமர் கோவில்” கட்டுவது என்கிற தன்னுடைய கடுமையான மதவெறி நிகழ்ச்சிநிரலை மையக்கருவாக அறிவித் திருக்கிறது. அதேபோல் “புனிதமாகக் கருதப்படும் ராமர்பாலத்தின் மீது கை வைப்பதற்கும் எவரையும் அனுமதி யோம்” என்றும் அது எச்சரிக்கிறது. பசுப் பாதுகாப்பு, அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து ஆகிய வை ஒழிப்பு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றையும் அது மீண்டும் கிளப்பி யிருக்கிறது. 

‘இந்தியா எப்போதும் ஓர் இந்து நாடாகவே இருந்திருக்கிறது, இருக்கும்’ என் கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருத்தாக்கத்தின் விரிவாக்கமாகவே பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஆரம்பமும் முடி வும் அமைந்திருக்கிறதேயன்றி வேறெது வும் இல்லை. இவ்வாறு இவர்கள் கூறுவ தானது, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தினை வெளிப் படையாகவே மறுதலிக்கிறது என்பதைத் தவிர வேறல்ல. ஆரம்பம் மற்றும் இறுதி அத்தியாயங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ள மற்ற அனைத்து அத்தியா யங்களுமே மற்ற பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் காணப்படும் கோரிக்கைகள் சிலவற்றை மீண்டும் வலியுறுத்துவதைத் தவிர வேறெதுவும் இல்லை. 

இவை இப்போதும் கோரும் கோரிக் கைகளில் பலவற்றை, பாஜகவின் தலை மையில் தே.ஜ.கூட்டணி ஆட்சியிலிருந்த ஆறு ஆண்டு காலத்தில் நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அவ்வாறு எதையும் செய்யாமல் இப்போது மீண்டும் கோரி யிருக்கிறார்கள். தாங்கள் ஆட்சியிலிருந்த போது விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து பரிசீலிக்கவே மறுத்தவர்கள், இப் போது அதனைக் கூறியிருக்கிறார்கள். பயிர் இன்சூரன்ஸ் குறித்த அனைத்துக் கோரிக்கைகளையும் அப்போது கண் மூடித்தனமாக எதிர்த்தவர்கள் இப்போது பயிர் வருவாய் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகப் பேசுகிறார்கள். 

இன்றையதினம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இவர்கள்தான் அன்றைய தினம் முதலாளிகளின், வேலைமுடிந்த பின் வீட்டிற்கு அனுப்பும் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவர்கள். முன்னாள் ராணுவத்தினருக்கு ‘ஒருவருக்கு ஒரு பென்ஷன்’ என்னும் திட்டம் உட்பட இவர்கள் இப்போது கோரும் பல திட்டங்களை இவர்கள் ஆட்சியிலிருந்த போதே நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் எதையும் செய்யவில்லை. தாங்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற விடாமல் முடக்கியவர்கள், இப்போது அதற்கு வக்காலத்து வாங்குவதாகப் பாசாங்கு காட்டுகிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு மதமோ, சாதியோ, பிராந்தியமோ கிடையாது என்று பாஜக வின் ஒருசில தலைவர்கள் உதட்டள வில் பேசியபோதிலும், பாஜகவின் தேர் தல் அறிக்கையானது, பயங்கரவாதத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துடனேயே பிணைக்கிறது. இந்துத்துவா பரிவாரங்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அது ஒரு துளி யும் கூறிடவில்லை என்பதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை.

நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மீது ஆழமான பிடிப்பு உள்ளதால், தற்போது ஏற்பட்டுள்ள உல கப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியி லிருந்து இந்தியாவைக் காப்பாற்ற பாஜக வினால் அநேகமாக ஒன்றுமே கூற முடிய வில்லை. 

இவ்வாறு, பாஜகவின் தேர்தல் அறிக் கையானது, புதிய மொந்தையில் பழையகள் என்று கூறமுடியாமல், பழைய மொந்தையில் பழைய கள்ளையே கொடுத்திருக்கிறது. பாஜகவானது ஆர் எஸ்எஸ் பரிவாரத்தின் அரசியல் அங்கம் என்று கூறுவதற்கு இதைவிட உத்தர வாதம் வேறெதுவும் தேவையா, என்ன?

இவ்வாறு ‘‘இந்து வாக்கு வங்கியை’’ ஒருமுகப்படுத்துவதற்காக தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதிமொழி களைக் கூறியுள்ள அதே சமயத்தில், இதற்கு முற்றிலும் முரண்பட்ட நிலையில் தன் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப் படுத்தும் நோக்கத்தோடு தே.ஜ.கூட் டணியின் நிகழ்ச்சிநிரலையும் அமல் படுத்துவோம் என்று கூறியிருக்கிறது. முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் இத்தகைய அரசியல்வாதிகளை இந்திய மக்கள் ஏற்கனவே நன்கு உணர்ந்துவிட்டார்கள். இனியும் அவர்கள் ஏமாறமாட்டார்கள்.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: