சென்னை : தடுப்பு ஊசி போடப்பட்ட குழந்தை பலி செப்-18ல் தடுப்புஊசி போடப்பட்ட குழந்தை 3 மணிநேரத்தில் இறந்துவுள்ளது
தர்மபுரி : தர்மபுரியில் முத்தடுப்பு ஊசி போடப்பட்ட குழந்தை பலியாகியுள்ளது.
திருவள்ளூரில் தட்டம்மை தடுப்புஊசி முகாமில் ஊசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலியான நிலையில், ஒரிஸ்ஸாவில் இரு குழந்தைகள் பலியாகினர்.
இந் நிலையில் தர்மபுரியிலும் தடுப்பு ஊசி போடப்பட்ட ஆண் குழந்தையும் பரிதாபமாக இறந்துள்ளது. தர்மபுரி அருகே உள்ள கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு-அனுசுயா தம்பதிக்கு 2 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த 16ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போடப்பட்டது. அதன்பிறகு குழந்தைக்கு காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தக் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டதால் அந்த குழந்தை கம்பைநல்லூர் கொண்டு வரப்பட்டது. இந் நிலையில் இன்று அதிகாலை குழந்தை இறந்துவிட்டது. தடுப்பு ஊசி போட்டதன் காரணமாகத்தான் தங்களது குழந்தை இறந்ததாக திருநாவுக்கரசு-அனுசுயா ஆகியோர் கூறுகின்றனர்.
தடுப்பு ஊசி போட்ட குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி
திருநெல்வேலி: தடுப்பு ஊசி போடப்பட்ட குழந்தை ஒன்று மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தது. நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள கிடாரக்குளத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தா. இவர்களது 4 மாத குழந்தை பவுல்ராஜ்க்கு ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 11 மணிக்கு முத்தடுப்பு ஊசி போட்டனர். வீட்டுக்கு சென்ற சிறிதுநேரத்திலேயே குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
பகல் ஒரு மணிவாக்கில் குழந்தையை ஆலங்குளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். அங்கிருந்த டாக்டர், குழந்தையை நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளார். குழந்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தது. எந்த நோயின் பாதிப்பும் இல்லாமல் இருந்த குழந்தை முத்தடுப்பு ஊசி போடப்பட்டதால் இறந்ததாக பெற்றோர்கள் புகார் கூறினர்.
மேற்கண்ட சம்பங்களுக்கும் ராமதாஸ்சின் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்
இந்தியாவில் நோய்த்தடுப்பு மருந்ததுகள் 80%-ம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டுவந்தது. சென்னை கின்டியில் உள்ள பி.சி.ஜி.யூனிட், குன்னுரில் உள்ள பாஸ்டியர் யூனிட், இமாச்சலபிரதேசத்தில் உள்ள கசௌலி ஆய்வு மையம் ஆகிய 3 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களிலும் இவ்வாண்டு ஜனவரி 15 முதல்அன்புமணி ராமதாஸ்சின் உத்தரவின் பேரில்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரனமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய தரமற்ற மருந்துகளே இந்த குழந்தைகள் இறப்புக்கு காரணம்.

அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரதுரை அமைச்சர் அவர்களின் புகையிலை தடுப்பு, மது தடுப்பு என்று வீன் விளம்பர வேலைகளை பார்ப்பதை விட்டு விட்டு பகிரங்மான முறையில் அரசு நிறுவனங்களை மூடிவிட்டு பட்சிலம் ஏழை குழந்தைகளின் தடுப்பு ஊசி படுகொலைகளை நிறுத்தவேண்டும் .
2 கருத்துகள்:
//அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரதுரை அமைச்சர் அவர்களின் புகையிலை தடுப்பு, மது தடுப்பு என்று வீன் விளம்பர வேலைகளை பார்ப்பதை விட்டு விட்டு பகிரங்மான முறையில் அரசு நிறுவனங்களை மூடிவிட்டு பட்சிலம் ஏழை குழந்தைகளின் தடுப்பு ஊசி படுகொலைகளை நிறுத்தவேண்டும் .
//
வழிமொழிகிறேன்!
நன்றி நாமக்கல் சிபி
கருத்துரையிடுக