ஞாயிறு, 26 அக்டோபர், 2008

திரிபுரா உள்ளாட்சி இடைத் தேர்தல் இடது முன்னணி மகத்தான வெற்றி 167ல் 155 இடங்களை கைப்பற்றியது

திரிபுராவில் சமீபத்தில் நடை பெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது முன்னணி மகத் தான வெற்றி பெற்றது. மொத்தம் 167 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி 155 இடங்களைக் கைப்பற்றியது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 152 இடங் களைக் கைப்பற்றியது!


திரிபுரா பழங்குடியினர் சுயாட்சி மாவட்டக் கவுன்சிலில் 3 இடங்கள், ஜில்லா பரிசத்துகளில் 2 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளில் 8 இடங்கள் (ஒன்றிய கவுன்சில்), நகர் பஞ்சாயத்து களில் 4 இடங்கள், அகர்தலா நகர் மன்றத்தில் 1 இடம், கிராம பஞ்சாயத் துகளில் 116 இடங்கள் மற்றும் சுயாட்சி மாவட்ட கவுன்சிலுக்குட் பட்ட கிராமக் குழுக்களில் 33 இடங் கள் என மொத்தம் 167 இடங்களுக்கு கடந்த செப்டம்பர் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில், 32 இடங்களில், இடது முன்னணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தோல்வி அடைவது உறுதி என்று அறிந்த எதிர்க்கட்சியான காங்கிரசும், அதன் தேர்தல் கூட்டாளியான ஐஎன் பிடியும் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க கடுமையாக முயற்சித்தன. ஐஎன்பிடி என்பது, திரிபுராவில் தொடர்ந்து நாசகர - பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என்எல்எப்டி (திரிபுரா தேசிய விடுதலை முன்னணி) யின் அரசியல் பிரிவு என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய அமைப்பின் சீர் குலைவு நடவடிக்கைகளையும் எதிர் கொண்டு, இடது முன்னணி மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.

இத்தேர்தலில், வழக்கம் போலவே, 82 சதவீதம் வாக்குகள் பதி வாகின. அக்டோபர் 1 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இடது முன்னணி வேட்பாளர்கள் வெற்றிஅறிவிப்புகள் வெளியாக, வெளியாக இடது முன்னணி ஆதர வாளர்கள் விண்ணதிர முழக்கம் எழுப்பினர். தன்னெழுச்சியாக மாபெரும் வெற்றி ஊர்வலங்களை நடத்தினர். கிராமங்கள் தோறும் செங்கொடி களை உயரப்பறக்கவிட்டனர்.

மொத்தம் 155 இடங்களை இடது முன்னணி கைப்பற்றியது. இவற்றில் 12 இடங்கள், ஏற்கெனவே காங்கிரஸ் வசம் இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தேர்தலில், காங்கிரஸ் 9 இடங் களையும், ஐஎன்பிடி 1 இடத்தையும், இதர கட்சிகள் 2 இடங்களையும் மட்டுமே பெற முடிந்தது.

இந்த மகத்தான வெற்றியை ஈட்டிய இடது முன்னணி ஊழியர் களுக்கும், வேட்பாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிஜன்தர் பாராட்டு தெரிவித்தார்.

திரிபுரா மாநிலம் முழுவதும் இடது முன்னணி அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணி களுக்கு கிடைத்த ஆதரவே இந்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வெற்றி மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றி வரும் நாசகர பொருளா தாரக் கொள்கைகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கை களுக்கும், மதவெறியோடு சமரசம் செய்து கொள்கிற போக்கிற்கும் எதிரான திரிபுரா மக்களின் தீர்ப்பு என்று இடதுமுன்னணி தனது அறிக் கையில் கூறியுள்ளது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

1 கருத்து:

மாதவராஜ் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் !