புதன், 7 ஜனவரி, 2009

ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் பீரங்கி தாக்குதல்: 42 பேர் பலி


இஸ்ரேல் குண்டு வீச் சால் பாதிக்கப்பட்ட மக் கள் தங்கியிருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நடத் திய பீரங்கி தாக்குதலுக்கு 42 பேர் பலியானார்கள். இஸ் ரேல் போரை நிறுத்த வேண் டுமென்று சர்வதேச அள வில் நிர்ப்பந்தங்கள் அதி கரித்துள்ளன.

பீரங்கி குண்டுகளால் கிழியுண்ட மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். பள்ளியிலும், சாலையிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. இஸ்ரேல் பீரங்கிகளின் இரு குண்டுகள் சாலையில் வெடித்தன. இதனால் அரு கில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் காயம் அடைந்தனர். இக்குண்டு வீச்சில் 42 பேர் மாண்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

கடந்த நான்கு நாட்க ளாக காசாவில் வசிக்கும் மக்கள் இஸ்ரேல் தரைப் படையினரால் வேட்டை யாடப்படுகின்றனர். வீடு வாசல்களை இழந்து உற வுகளைப்பறி கொடுத்த மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீதும் இஸ்ரேல் பீரங்கிகள் தாக்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்களும், பயந்து வெளியேறிய மக்க ளும் ஜபல்யா அகதிகள் முகாமில் ஐ.நா.வால் நடத் தப்படும் அல்- பகோரா பள்ளியில் தஞ்சம் அடைந் திருந்தனர். பள்ளியில் வகுப்பு கள் நிறுத்தப்பட்டன. இந் தப் பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும் இஸ்ரே லுக்கு ஐ.நா. கொடுத்துள் ளது. படைகள் இந்தத் தாக் குதல்களில் இருந்து விலக்கு அளிப்பதற்காக அளிக்கப் பட்ட விபரங்கள் இவை. ஆனாலும், இஸ்ரேல் அக் கட்டிடத்தை தாக்கியுள் ளது.

ஹமாஸ் அமைப்பு மக் களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறது என்று இஸ் ரேல் கூறியது. பள்ளியில் இருந்து பீரங்கிகள் படை களை நோக்கி திருப்பப்பட் டதால் இஸ்ரேல் படைகள் தாக்கியதாக இஸ்ரேல் சொல்கிறது. இறந்தவர் களில் இருவர் இஸ்லாமிய ஜிகாதி பீரங்கிப் படையினர் என்று அது கூறியது.

காசா பகுதியில் இஸ் ரேல் தாக்குதலால் இறந்த பொதுமக்களின் எண் ணிக்கை 77 ஆக உயர்ந் துள்ளது என்று மருத்துவர் கள் கூறினர். டிசம்பர் 27 முதல் நடைபெற்று வரும் இஸ்ரேல் தாக்குதலில் 667 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 2700க்கு மேற்பட் டோர் காயம் அடைந்தனர் என்றும் பாலஸ்தீன சுகா தார அமைச்சகம் சொல் கிறது.

கருத்துகள் இல்லை: