வியாழன், 8 ஜனவரி, 2009

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! பஞ்சாப், அரியானாவில் அவல நிலை

ஒவ்வொரு நாளும் சராசரியாக அரியானாவில் இரு பெண்களும், பஞ்சாபில் ஒரு பெண்ணும் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று பஞ்சாப் மற்றும் அரியானா பெண்கள் ஆணையம் கூறியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய அறிக்

கையை அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் ஒவ்வொரு மாதமும் 12 பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேலும், அதே எண்ணிக்கையிலான பெண்கள் வரதட்சணைக்காக கொல்லப்படுகிறார்கள். நவம்பர் மாத இறுதியிலான புள்ளிவிபரப்படி, பஞ்சாபில் 140 பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
411 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகமான குற்றங்கள் நடைபெறுவது வழக்குகள் பதிவானதில் இருந்து தெரிகிறது.

பெண்கள் கடத்தப்படும் சம்பவங்களில் சுமார் 70 சதவீதம் ஜலந்தர் மற்றும் லூதியானா ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் நடக்கிறது. பாலியல் பலாத்கார சம்பவங்களில் 60 சதவீதம் லூதியானா மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது. வரதட்சணைக்காக பெண்கள் கொல்லப்

படுவதும் பஞ்சாபில் அதிகரித்துள்ளது.

அரியானாவில், 600 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 471 ஆக இருந்தது. 2008 ஆம் ஆண்டு பதிவானதில் ஆறு வழக்குகள் காவல்துறையினருக்கு எதிரானதாகும். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெவ்வேறு சமயங்களில் நான்கு பெண்கள் காவல்நிலையம் முன்பாக தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். பெண்களைப் பாதுகாப்பதில் காவல்துறை கவனம் செலுத்துவதில்லை என்கிறார் பெண்கள் ஆணையத்தின் தலைவர் குர்தேவ் கவுர் சங்கா.

குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக் கொடுமை ஆகியவை பொதுவாக பேராசையால் தூண்டி விடப்படுகின்றன. பஞ்சாபில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாவட்டங்களில் திருமணம் வர்த்தகமயமாகியுள்ளதுதான் இதற்குக் காரணம். முன்பெல்லாம் திருமணம் என்பது எளிமையான நடந்து வந்தது.

தற்போது ஒருவரையொருவர் மிஞ்சுவதைக் காட்டும் போட்டியாக மாறிவிட்டது. இதைச் செய்ய முடியாதவர்கள் பலி ஆடுகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை: